COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

ஆடாதொடை

 ஆடாதொடை 
வெகுட்டலோடு கூடிய கசப்புச் சுவை உடையது. எதையும் கடித்துச் சாப்பிடும் ஆடுகள் இதன் இலைகளைத் தொட்டுக் கூடப் பார்க்காது. அதனாலேயே ஆடு தொடா இலை எனப் பெயர் வந்துள்ளது. இன்னும் சிலர் இந்த இலையின் கசப்புச் சுவை நம் உடலின் நரம்புகளை வலிமை ஆக்கி நம் கால்தொடைகளை ஆடாமல் வைத்திருக்கும் எனவும் அதனாலேயே இதற்கு “ஆடாதொடை” எனப் பெயர் வந்தது எனவும் கூறுவர்.
ஆடாதொடைப் பன்னம் ஐயமறுக்கும், வாதமுதல்
கோடா கோடிச் சுரத்தின் கோதொழிக்கும், – நாடின்
மிகுந்தெழுந்த சன்னிபதின் மூன்றும் விலக்கும்,
அகத்து நோய் போக்கும் அறி. 
இதன் பொருள் :  ஆடாதொடை இலை சளியை அறுக்கும். வாதம்

முதல் வரும் பல சுரங்களை ஒழிக்கும். பதின்மூன்று சன்னியையும், வயிற்று நோய்களையும் நீக்கும்.ஆடாதொடை இலையையும், சங்கிலையையும் 100 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுப் பாதியாக காய்ச்சிக் குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.
இதன் கிளைகளை வெட்டி வைத்தாலே முளைத்துவிடும். பிழைக்கும் வரை தண்ணீர் ஊற்றினால் போதும்; நன்கு வளர்ந்து வடும். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கிய பச்சிலையாகும்.
சில மருத்துவர்கள் இதனைப் பெரியா நங்கை எனக் கூறுகின்றனர். இன்று நாம் பெரியா நங்கை எனக் கூறுவதைச் சிறியா நங்கை என்கின்றனர். இது ஆராய வேண்டிய ஒன்று.
இதை வளர்ப்பவர்கள் அடர்த்தியாக இல்லாமல் வெட்டி வளர்க்க வேண்டும். இல்லை என்றால் பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் வளரும் இடமாகி விடும்
 எல்லாச் சுரங்களும் நீங்க :
1) ஆடாதொடை இலையின் ஈர்க்கு பத்து,
2) நிலவேம்பு 10 கிராம்,
3) சீந்தில் கொடி 10 கிராம்,
4) பேய்ப்புடல் 10 கிராம்,
5) வெட்பாலை அரிசி 10 கிராம்.
இவற்றுள் 2-3-4-5 மருந்து சரக்குகள் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
எல்லாவற்றையும் நசுக்கிக் கால் லிட்டர் தண்ணீரில் போட்டு 50 மில்லி கிராமாகக் காய்ச்ச வேண்டும். வேளைக்கு 25 மில்லி வீதம் தினம் 2-3 வேளைகள் சாப்பிட வேண்டும்.
சுரம் தீரும்வரை இதைச் சாப்பிடலாம். குடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கி உடல்நலம் பெறும். ஆங்கில மருந்துகள் சாப்பிடும்போது  இதைச் சாப்பிடலாம். கசப்பு மிக அதிகமாக இருப்பதை உணர்ந்தால் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
2. கபம் கஷ்ட சுவாசம் நீங்க : நான்கைந்து இலைகள் எடுத்து, குறுக அறுத்துக் கொள்ளவும். முசுமுசுக்கை 10-15 எடுத்துக் கொள்ளவும். 1) மிளகு 5 கிராம், 2) சித்தரத்தை 5 கிராம், 3) அரிசித்திப்பிலி 5 கிராம்.
இந்த மூன்றும் எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இவை அனைத்தையும் ஒன்றிரண்டாக நசுக்கி அரை லிட்டர் தண்ணீரில் போடவும். 100 மில்லியாகக் காய்ச்சவும். வேளைக்கு 20 மில்லி வீதம் 3-4 வேளைகள் சாப்பிடவும். பனங்கற்கண்டு அல்லது பனை வெல்லம் தேவையான அளவு போட்டுக் கொள்ளவும்.
இப்படிப் பத்துப் பதினைந்து நாட்கள் சாப்பிடவும். இதனால் ஈளை முதலானவைகள் கரையும். கஷ்டசுவாசம் நீங்கும். சுரங்களும் நீங்கும்.

3. ஆடாதொடைச் சூரணம் :

1) ஆடாதொடை வேர்ப்பட்டை 50 கிராம்
2) ஆடாதொடைப் பூவின் கதிர் 100 கிராம்
3) பேரரத்தை 50 கிராம்          4) சித்தரத்தை 50 கிராம்
5) வாய்விளங்கம் 50 கிராம்      6) சிறுதேக்கு 50 கிராம்
7) கோரைக் கிழங்கு 50 கிராம்    8)கரிமஞ்சள் 50 கிராம்
9) மிளகு 50 கிராம்              10) கண்டங் கத்திரி 50 கிராம்
11) அரிசித் திப்பிலி 150 கிராம்    12) காஞ்சோரி வேர் 100 கிராம்
13) கோஷ்டம் 25 கிராம்          14) காட்டாத்திப்பூ 25 கிராம்
இவைகளில் முதல் இரண்டு வகைகளை விட்டுவிட்டு, மற்றவைகளைத் தனித்தனியே பொன் வறுகலாக வறுக்க வேண்டும். பிறகு அனைத்தையும் ஒன்று கலந்து இடித்துச் சூரணம் செய்து கொள்ளவும்.
இதில் 5 கிராம் சூரணம் பாலிலோ வெந்நீரிலோ கலந்து சாப்பிட வேண்டும். காலை மணி 6க்கும், மாலை மணி 4க்கும் சாப்பிட வேண்டும். 20-30 நாட்களில் குளிர்ச்சியால் உண்டான சுவாசகாசம், இளைப்பு, சளி, இருமல் இவைகள் போகும்.
4. ஆடாதொடைக் குடிநீர் :
1) ஆடாதொடை 50 கிராம்,
2) துளசி 50 கிராம்,
3) கண்டங்கத்திரி 50 கிராம்.
இவைகளை நசுக்கிக் கொள்ளவும். அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மில்லி கிராமாகச் சுண்டக் காய்ச்சவும். இதை நான்கு வேளையாகப் பங்கிடவும். காலை மணி 6க்கும், மாலை மணி 4க்கும் சாப்பிடவும். இத்துடன் ஒரு சிட்டிகை அரிசித் திப்பிலிச் சூரணம் இருந்தால் சேர்த்துக் கொள்வது நல்லது.

இப்படிச் சில நாட்கள் சாப்பிட்டு வர இருமல், கபக்கட்டுச் சுத்தமாய் எடுபட்டுப் போகும்.




நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய
குறுஞ்செடி. சிற்றூர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பூ, வேர் ஆகியவை
மருத்துவப் பயனுடையவை.

சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்.

  • இலைச் சாறும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை
  • கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல்,
  • இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.

  • குழந்தைகளுக்கு 5 + 5 துளி
  • சிறுவர் 10 + 10 துளி
  • பெரியவர் 15 + 15 துளி

  • 2 இலைச் சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்தப்பேதி குணமாகும்.

  • 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன்
  • கலந்து காலை, மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் காசம், இரத்தக்
  • காசம், சளிச்சுரம், சீதளவலி, விலாவலி ஆகியவைத் தீரும்.

  • ஆடாதொடை
  • வேருடன் கண்டங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல்
  • 1 கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி,
  • ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணப்படும்.

  • ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில்
  • போட்டுப் பாதியாகக் காய்ச்சிக் காலை, மாலை பருகி வரக் குட்டம், கரப்பான்,
  • கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றவலி தீரும்.

  •  உலர்ந்த ஆடாதொடை இலைத் தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகைப்பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.


  • 700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம்,
  • சித்தரத்தை வகைக்கு 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைத் தூள் செய்து போட்டுப்
  • பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி
  • வடிகட்டியதில் 1 கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி(ஆடாதொடை
  • மணப்பாகு) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை
  • தீரும். ஒரு நாளைக்கு 3 வேளையாக நீண்ட நாள்கள் கொடுத்து வரக் காசம்,
  • என்புருக்கி, மார்புச்சளி, கப இருமல், புளூரசி, நீடித்த ஆஸ்துமா, நிமோனியா
  • ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.

  •  ஆடாதொடை,
  • கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல்,
  • கஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி 1 லிட்டர் நீரில் போட்டு அரை
  • விட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. அளவாகப் பருகி வர (அஷ்ட மூலக்
  • கஷாயம்) எவ்விதச் சுரமும் நீங்கும்.

  • வேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை, மாலை கொடுத்து வரச் சுகப்பிரசவம் ஆகும்.

ஆடாதொடை சூப்

தேவையான பொருட்கள்
ஆடாதொடை பச்சை இலை - 1 கப்
(அ) காயவைத்த இலை, பொடி - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 250 மி.லி
பீன்ஸ், பூண்டு, காரட், தக்காளி,
வெங்காயம், எல்லாம் கலந்து - 1 கப்
மிளகுத்தூள், சீரகத்தூள் - சிறிதுநெல்லித்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
ஒட்ஸ் மாவு - 2 டீஸ்பூன்
செய்முறை
ஆடாதொடை இலையைத் தண்ணீரில் சூடுபடுத்தி மற்ற பொருட்களைக்கலந்து பசுமைமாறுமுன் கொதிநிலையில் மசித்து சூப் தயாரிக்கவும். ஓட்ஸ் மாவு கலந்து கொதிக்க வைத்து சூடு ஆறுமுன் வடிகட்டி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை: