COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

வாழைப்பழம்

முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம், பலமருத்துவ குணங்களைக்கொண்டது வாழைப்பழம், நமது சமூகத்தில் வாழைப்பழம் 100ல் 99 பேர்உயயோகப்படுத்துகிறோம்.
செவ்வாழை
ரஸ்தாளி
கற்பூரவல்லி
பேயன்
பச்சைநாடன்
பூவன்
மொந்தன்
கதலி
நவரன்
குணங்கள்
:வாழைஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 8௰ அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம்அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்துவிடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள்கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின்விந்தை.
நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
 
நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.
பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.
 
மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.
ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.
பச்சைவாழை: வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.
வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது
 
தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.
காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.
பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.
 
மருத்துவப் பயன்மிக்க மூலிகைகளுள் வாழையும் ஒன்று. இதில் மலைவாழை, மொந்தன், பூவன், பேயன், ரஸ்தாலி ஆகியவை முக்கியமானவை.
மலச்சிக்கல், மூலநோயால் அவதியுறுவோருக்கு பூவன் பழமும், வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்படுவோருக்கு பேயன் பழமும் தேவை. சுலபத்தில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குவது மலைவாழை.
ரஸ்தாலியில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம்.
சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள்,ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள், ரத்தக் குறைபாடுகள் ஆகியவற்றை வாழைத் தண்டு போக்குகிறது. பல மருத்துவப் பண்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது.
வாழைச்சாறு வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.
 
மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது. ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக் காய்க்கு நிகரில்லை. அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாயுத் தொல்லை உண்டாகும்.
வாழைப்பழத்திற்கு இளக்கும் தன்மை உண்டு. இதில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, வைட்டமின் ஆகியவை உள்ளன. சில நோய்களுக்கு வாழையை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்களேன்.
தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.
காயங்கள்- தோல் புண்களுக்கு- தேங்காய் எண்ணெயை மஸ்லின் துணி யில் நனைத்து புண்கள்மேல் போட்டு இவற்றின் மீது மெல்லிய வாழையிலையை கட்டுமாதிரி போடவேண்டும்.
சின்ன அம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்கவைக்கவேண்டும். இதை தொடர்ந்து செய்தால் குணமாகும்.
சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள்- பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
 
குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி சாம்பலை எடுத்து கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து சாப்பிட்டுவர மேற்சொன்னவை சரியாகும்.
அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம்சாப்பிட்டுவர அஜீ ரணம் சரியாகும். தொடர்ந்து 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
காசநோய்- அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்து தினமும் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வர சரியாகும்.
சின்ன அம்மை, டைபாய்டு, மஞ்சட் காமாலை- தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடவேண்டும்.
இருமல்- கருமிளகு கால் தேக் கரண்டி எடுத்து பொடி செய்து அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
சிறுநீரக நோய்கள் மற்றும் இரத்தக் குறைபாடுகள்-நெல்லிச்சாறு அரைக் கரண்டியும் பழுத்த வாழையை கலந்து 2-3 வேளை சாப்பிட்டு வர மேற் சொன்ன குறைபாடு நீங்கும்.வாழை இலையின் நன்மைகள்...
* அழகை கெடுக்கும் வகையில், சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. இதன் புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் ஜூஸை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால், அந்த பிரச்சனையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் இதன் இலையை தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

வாழை இலையில் பல மருத்துவ பொருட்கள் இருப்பதால், இவை விஷமிக்க பூச்சிக்கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் அரிப்புகள் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது. சொல்லப்போனால், இத்தகைய சிறப்பால் இதனை ஒரு இயற்கை அளிப்பான் என்றும் சொல்வார்கள்.
* அழகுப் பொருட்களான கிரீம் மற்றும் லோசனில் இருக்கும் அலன்டாயின் (Allantoin) என்னும் பொருள், இந்த சிறப்புமிக்க வாழை இலையில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பொருள் கிருமிகளை அழிப்பதோடு, விரைவில் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும். மேலும் இது புதிய செல்கள் வளரவும் வழிவகுக்கும்.
* குழந்தைகளுக்கு டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும்.
* மன அழுத்தம் போவதற்கும் மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கும், வாழை இலையில் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறெல்லாம் செய்தால், சருமமானது மென்மையடைவதோடு, எந்த ஒரு நோயும் சருமத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.
  • சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள்,ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள், ரத்தக் குறைபாடுகள் ஆகியவற்றை வாழைத் தண்டு போக்குகிறது. பல மருத்துவப் பண்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது.
  • வாழைச்சாறு வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.
  • மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது. ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக் காய்க்கு நிகரில்லை. அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாயுத் தொல்லை உண்டாகும்.
  • வாழைப்பழத்திற்கு இளக்கும் தன்மை உண்டு. இதில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, வைட்டமின் ஆகியவை உள்ளன. சில நோய்களுக்கு வாழையை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்களேன்.
  • தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.
  • காயங்கள்- தோல் புண்களுக்கு- தேங்காய் எண்ணெயை மஸ்லின் துணி யில் நனைத்து புண்கள்மேல் போட்டு இவற்றின் மீது மெல்லிய வாழையிலையை கட்டுமாதிரி போடவேண்டும்.
  • சின்ன அம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்கவைக்கவேண்டும். இதை தொடர்ந்து செய்தால் குணமாகும்.
  • சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள்- பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
  • குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி சாம்பலை எடுத்து கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து சாப்பிட்டுவர மேற்சொன்னவை சரியாகும்.
  • அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம்சாப்பிட்டுவர அஜீ ரணம் சரியாகும். தொடர்ந்து 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
  • காசநோய்- அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்து தினமும் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வர சரியாகும்.
  • சின்ன அம்மை, டைபாய்டு, மஞ்சட் காமாலை- தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடவேண்டும்.
  • இருமல்- கருமிளகு கால் தேக் கரண்டி எடுத்து பொடி செய்து அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
  • சிறுநீரக நோய்கள் மற்றும் இரத்தக் குறைபாடுகள்-நெல்லிச்சாறு அரைக் கரண்டியும் பழுத்த வாழையை கலந்து 2-3 வேளை சாப்பிட்டு வர மேற் சொன்ன குறைபாடு நீங்கும்.
  • வாழைப்பழம்* மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்