COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

நாவல் (மரம்)

சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு சிறுவர்களின் விளையாட்டு தளமாக இருக்கிறது. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை ((Eugenia Jambos) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்.
நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்த்து நிர்வாணமாக வெட்கப்பட்டு நிற்க்கும் நாவல் மரம் சந்திரமுகியின் கண்களாக கருமை நாவல் பழங்களை கொத்துகொத்தாக தாங்கி வனப்புடன் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது.. கிராமங்களில் மரத்தில் ஏறி இதனை உதிர்த்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 கிலோ பழங்கள் கிடைக்கும்.நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். நா வறண்டு நீர் வேட்கை மிகும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் 'நா+அல்' (நாவல்) என்றனர். துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம்.
நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.

தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்

நாவல் பழம்
நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ரத்தப்போக்கு:
பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.

சிறுநீர் எரிச்சல்:
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.

பேதி:
நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

தொண்டைப் புண், தொண்டை அழற்சி:

10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும். இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.

பிற பயன்கள்:
* நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.
* தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.
* நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.
* நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.
* இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.
 நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

இது ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரைக் கிடைக்கும்.

இதைச் சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். இதன் துவர்ப்பு ருசியும், இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் நாவில் படிந்துவிடும் நீல நிறமும் காரணங்களாக இருக்கலாம்.

வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது. 
சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப்போக்குக் குறையும்.

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

மூல நோய்க்கு

மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.

பழம் அதிகம் விளையும் காலத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில் சாப்பிட வேண்டும்.

இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.

தொழு நோய்க்கு நல்ல மருந்து

நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், இரத்தம் சுத்தமாகி தொழுநோய் முற்றிலும் குணமாகவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணிய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.

அளவோடு சாப்பிட வேண்டும்

நாவல் பழத்தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.

பழத்தையோ, பழச்சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடவேக் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் 3 மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாது.
பழத்தின் மருத்துவபண்புகள்
நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.

பழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். இரத்தத்தை சுத்தி செய்யும். இரத்தம் விருத்தி ஆகும். சிறுநீர்க்கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும். பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாக தரையில் விழுந்த பழங்களை சாப்பிடும் போது இது போன்று நடக்கிறது!
இந்த பழத்தின் பளபளப்பான கருமை நிறத்தில் மயங்கி சாப்பிடும் சிலருக்கு தொண்டைக்கட்டும் ஏற்படலாம். டோண்ட் ஒரி நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.
பழுக்காத நாவல் காய்கள் இருந்தால் விரயம் செய்யாமல் நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும்.
விதையின் குணங்கள்
நாவல் பழத்தை சப்பித்தின்ற பிறகு( தான் சாப்பிட்டதைதான்) மிஞ்சும் கொட்டையை நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 முதல் 4கிராம் வீதம் மூன்று வேளை தண்ணீரில் கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது. விதையை பொடித்து மாம்பருப்பு தூளுடன் சேர்த்து தர சிறுநீரை பெருக்கும். இந்த கொட்டை தூளை அதிக அளவில் உண்ண கூடாது. அது நஞ்சாகும்.
இலையின் குணம்
நாவல் கொழுந்து சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்சல் குணமடையும். நாவல் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து மோரில் அல்லது தயிரில் கலக்கி சாப்பிட வயிற்று போக்கு, இரத்தத்துடன் காணப்படும் பேதி ஆகியவை குணமாகும்.
மரப்பட்டையின் குணம்
நாவல் மரம்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும் என்று கூறுகிறார்கள். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, இரத்த பேதி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்த நல்லது. நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கு இந்த மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்தால் குணம் காணலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத்தயிரில் கலந்து குடிக்க பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும். ( ஏன் பெண்களுக்கு மட்டும் எருமை?)குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், ரத்தகழிச்சல் ஆகியவற்றுக்கு வெள்ளாட்டுபாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சங்கு அளவில் மூன்று முறை தரலாம். எதற்கும் பக்கத்தில் உள்ள பாட்டியை கேட்டுக்கொள்ளுங்கள் இந்த மரப்பட்டையின் கசாயத்தை கொண்டு புண்களை கழுவலாம். கிருமிநாசினி போல் செயல்படும் என்கிறார்கள்.
வேரின் குணம்
மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் தரும்.
நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்
புரதம் 0.7 கிராம்
கொழுப்பு 0.3 கிராம்
மாவுப்பொருள் 0.9 கிராம்
கீழ்வருபவை எல்லாம் (மில்லி கிராம் அளவில்)
கால்சியம் 14.0 பாஸ்பரஸ் 15 இரும்பு 1.2 தயமின் 0.03 நியாசின் 0.2 வைட்டமின் சி 18 மெக்னீசியம் 35 சோடியம் 26.2 பொட்டாசியம் 55 தாமிரம் 0.23 கந்தகம் 13 குளோரின் 8 ஆக்சாலிக் அமிலம் 89 பைட்டின் பாஸ்பரஸ் 2 கோலின் 7 கரோட்டின் 48


 நாவல் பழம் பசி எடுக்க வைக்கும். இரைப்பை, மற்றும் கல்லீரலுக்கு பலம் தரக்கூடியது. வயிற்றுப்போக்குகளை நிறுத்துவதற்கும் பயன் படுகிறது. இதன் விதைகள் சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்த வல்லவை. இலைகளின் பொடி பற்களுக்குப் பயன் தரக்கூடியது. நாவல் இலையின் தூளை மூன்றிலிருந்து 5 கிராம் வரையிலான அளவில் பயன்படுத்த வேண்டும்.
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.  மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்.  மலச்சிக்கலைப் போக்கும்.  மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்  வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி  அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும்,  உடல் சூட்டைத் தணிக்கும்.  ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் கொட்டை

நாவல் பழத்தின் கொட்டைகளை எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.  சர்க்கரை நோய் கட்டுப்படும்.   சர்க்கரை நோயின் பாதிப்பிற்கு ஆளானவர்களும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் இதனைச் சாப்பிடலாம். 

நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்கும் தன்மை கொண்டது.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.  நாற்பது வயதை அடைந்தவர்கள் அனைவரும்  நாவல் கொட்டைச்  சூரணம் சாப்பிடுவது நல்லது.

நாவல் கொட்டையை லேசாக வறுத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து டி, காஃபி க்கு பதிலாக அருந்தலாம்.   இன்றும் மலைவாழ் மக்கள் நாவல் கொட்டையை டீ, காஃபிக்கு பதிலாக அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நாவல் இலை

நாவல் கொழுந்து இலைச்சாறு     - 1 ஸ்பூன்

தோல் நீக்கிய ஏலக்காய் அரிசி    - 4

இலவங்கப்பட்டை தூள்    - 1/2 ஸ்பூன்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும்.

நாவல் பட்டை

100 ஆண்டுகள் பழமையான நாவல் மரப் பட்டை காயகற்ப மருந்து செய்ய பயன்படுத்தப் படுகிறது.
நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.