COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

அகத்தி(Sesbania grandiflora)

                                    அகத்தி மரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும்.
 சாளை அகத்திசிற்றகத்திசீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக, அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிகப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என அழைக்கப்படுகிறது.
  • அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் ப்யன் படுகிறது.
  • அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
  • வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிற
மாகவும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது.
உடலின் உட்புற உஷ்ணத்தைத் தணிப்பதால்அகம்+தீ=அகத்தீ என்று அழைக்கப்பட்டதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர்
இதன் இலைகள் வாய்ப்புண்தொண்டைப்புண் மற்றும் குடல்புண்களை ஆற்றுகிறது. மேலும்பித்தம்மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யும் தன்மையுடையதாக இருப்பதால் இதை தோட்டங்களில் பயிராக வளர்க்கின்றனர்.
குடற்புண் குணமாக:

அகத்திக்கீரை 2 கைப்பிடி அளவு, வெங்காயம் 50 கிராம், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, மல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை தேவையான அளவில் எடுத்து தட்டி, கீரையுடன் சேர்த்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, பாதியாகச் சுண்டச் செய்து இறக்கிவிடலாம். இந்த அகத்திக்கீரைச் சூப்பை வாரம் மூன்று நாள் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வர, எப்பேர்ப் பட்ட குடற்புண்ணும் குணமாகும்.

கண்ணோய்கள் விலக: 

கண்ணைப் பற்றிய அத்தனை நோய்களுக் கும் அகத்தியே நன்மருந்தென்றால் மிகையல்ல. இன்றும் கிராமங்களில் "மெட்ராஸ் ஐ' என நாம் குறிப்பிடும் கண்ணோய் வந்தால், அகத்தியே மருந்தாய் பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பாலும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு உடம்பில் உண்டாகும் அதி உஷ்ணமும் அதனைச் சார்ந்து உண்டா கும் தொற்றே (ஒய்ச்ங்ஸ்ரீற்ண்ர்ய்) காரணமாகிறது. கண் சிவந்து, வீங்கி, நீர்வழிந்து, வலியை உண்டாக் கும். இத்தகைய கண்ணோய்க்கு அகத்தி இலையை கண்களில் இரண்டு, மூன்று மணி நேரம் வரை ஒற்றியெடுத்து வர கண் சிவப்பு மாறி, வீக்கம் குறைந்து, வலி மறைந்து கண்ணோய் விலகும்.

கால்வெடிப்புகள் மறைய:

அகத்திக்கீரையையும், மருதாணி இலை யையும் சமஅளவில் எடுத்து விழுதாய் அரைத்து கால்வெடிப்புகளில் பற்றுப்போட வெடிப்புகள் மறையும். இதேபோல் அகத்திக்கீரைச் சாற்றை சேற்றுப்புண்களில் தடவி வர புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாய் அரைத்துப் பூசி வர தேமல் முற்றிலுமாய் மறையும்.

சோரியாஸிஸ் குணமாக:

சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதை என் அனுபவத்தில் கண்டி ருக்கிறேன்.

அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.

சிறுநீர் பிரிய:

கிராமப்புறத்தில் அகத்திக்கீரைக்கு தனி மதிப்பும், மரியாதையும் இருப்பதை இன்றும் காணலாம். உடல் உஷ்ணம் காரணமாக உண்டாகும் நீர்ச்சுருக்கு, மாரடைப்பு, நீர் எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து வருதல் போன்ற குறைபாடுகளுக்கு மிக எளிய மருத்துவ முறையை கிராம மக்கள் கையாளுகின்றனர்.

அகத்திக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து, தண்ணீர் கணிசமாய் ஊற்றி அவித்து, நீரை வடிகட்டி ஒரு டம்ளர் எடுத்து, அத்துடன் பழைய சாதத்துடன் கலந்த நீர் ஆகாரத்தையும் எடுத்து ஒன்றாய்க் கலந்து அருந்துகிறார்கள். மேற்சொன்ன நோய்கள் எல்லாம் உடனே சரியாகி விடுகிறது.

தலைவலி தீர

அகத்தி இலைச்சாற்றை மூக்கில் ஓரிரு துளிவிட, தலைவலி உடனே தீரும். அகத்திக்கீரையுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்து தலை உச்சியில் இருபது நிமிட நேரம் வைத்துவர, தலைவலி, தலைபாரம் போன்ற குறைபாடுகளும் விலகும்.

அகத்திப் பூவை மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, மல்லி இலை சேர்த்து கசாயமிட்டுச் சாப்பிட்டால் மூக்கிலிருந்து உண்டாகும் ரத்த ஒழுக்கு உடனே விலகும்.

அத்திமரப்பட்டையை முறைப்படி கஷாய மிட்டுச் சாப்பிட்டுவர, அம்மைக் காய்ச்சல், விஷக்காய்ச்சல், பெரியம்மை போன்றவை குணமாகும். மேலும் தண்ணீர் தாகம், கை, கால், உடல் எரிச்சல், ஆண் உறுப்பு வேக்காடு, தொடை இடுக்குகளில் உண்டாகும் வேக்காடு போன்றவை விலகும்.

மருந்தை முறிக்கும் அகத்தி;

அகத்திக்கீரைக்கு மருந்தை முறிக்கும் தன்மை உள்ளதாக சித்தர்கள் குறிப்பிடு கின்றனர். எனவே நாள்பட்ட நோய்களுக்குத் தொடர்ந்து மருந்து எடுத்து வருபவர்கள் இதனைச் சமைத்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். குடற்புண்ணால் பாதிக்கப்பட்ட வர்கள், வயிற்று நோய் உள்ளவர்கள் இதனை மிகக் கவனமாய் சமைத்துச் சாப்பிட வேண்டும். தத்தமது செரிப்புத் திறனுக்கு ஏற்ற வகையில் அகத்திக்கீரையைச் சாப்பிடலாம்.

அடிக்கடி இந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் ரத்தத்தைக் கேடுறச் செய்து, உடலில் சொறி, சிரங்கு நமைச்சலை உண்டாக்கிவிடும். வயிற்றுக்கடுப்பு, பேதியும் உண்டாகலாம். அகத்திக்கீரை உள்மருந்தாய் உபயோகிப்பதைவிட வெளிமருந்தாய் உபயோகிக்கும் பொழுது வியத்தகு பலனைத் தருகிறது.



அகத்திக்கீரை, நாம் உண்ணும் உணவு நன்றாகக் ஜீரணிக் உதவுகிறது. நீர்க்கோவைக் காரணமாகத் தோன்றும் தும்மல் போன்று நோய்களுக்கு அகத்திக் கீரையின் சாற்றையும், அகத்திப் பூவின் சாற்றையும் சம அளவு கலந்து மூக்கில் இரண்டொரு சொட்டு விட்டுவந்தால் நோய் நீங்கும். பொதுவாக நீர்கோவைக்கு அகத்தி இலைச்சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து உள்ளுக்குச் சாப்பீட நல்ல குணம் கிடைக்கும். அடிபட்டு கன்றிப்போன வீக்கங்களுக்கு அகத்திக் கீரையை அரைத்துச் சுடவைத்து பற்றாகப் போட்டால் சிறந்த குணம் கிடைக்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி, அனல் ஆவிபிடிக்கக் கடுமையான தலைவலி நீங்கும்.

மலோரியா போன்ற முறைக் காய்ச்சல்களுக்கு அகத்தி இலைச் சாற்றை ஒரு நாளைக்கு ஒருதடவை இரண்டொரு துளிகள் மூக்கில்விட காய்ச்சலின் வேகம் குறைந்து குணமடையும்.

சரி யாக பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நன்கு பால் சுரக்கும். மூளை தொடர்பான பிணிகள் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை உண்பதன் மூலம் நல்ல பயன் பெறலாம்.

அகத்திக் கீரையிலிருந்து ஒரு வகைத் தைலம் எடுக்கப்படுகிறது. இந்த அகத்தித் தைலத்தைத் தேய்ப்பதினால் கண் குளிர்ச்சி அடையும்; பார்வை தெளிவாகும்; மயிர் செழித்து வளரும், அகத்திப் பூவின் சாற்றைக் கண் பார்வைக் குறைவை நீக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

அகத்தியின் பட்டையைப் பொ¢யம்மை எனப்படும் "லைசூ¡¢" நோய் காணப்பட்டால் அதன் ஆரம்ப காலத்தில் கொடுக்கலாம். அம்மை நோயின் வேகத்தைத் தணிப்பதற்கு விதிப்படி குடிநீர் செய்து கொடுக்கலாம்.

அகத்தி வேர் ஓர் சிறந்த மருந்தாக விளங்குகிறது. அகத்தி வேர் பட்டை விதிப்படி குடிநீர் செய்து உட்கொள்ள மேகம், தாகம், மெய் எ¡¢வு, கை எ¡¢வு, ஆண் குறியின் உள் எ¡¢வு, ஐம்பொறிகளை சேர்ந்த எ¡¢வு ஆகியவைகள் நீங்கும்.

இவ்வளவு சிறந்த மருத்துவப் பயனுடைய இக் கீரையை அடிக்கடி உண்பதினாலோ நாள் தவறாமல் சேர்த்துக் கொள்வதினாலோ நன்மைக்குப் பதில் தீமையே அதிகமாகும். இவ்வாறு உண்பதினால் உடலிலுள்ள நல்ல இரத்தத்தையெல்லாம் முறித்து வாய்வைப் பெருக்கிச் சோகை, பாண்டு முதலிய நோய்களை உண்டாக்கும்.

அன்றியும் அகத்திக் கீரையை அதிகம் உண்டால் கடுவனும் வாயுவும் உண்டாகும். அகத்திக் கீரை பத்தியத்தை முறிக்க வல்லது. ஆதலால் மருந்துண்ணும் காலங்களிலோ பத்திய மிருக்கும் போதோ அகத்திக் கீரையை உண்ணக் கூடாது.

ஆகையினால் இக் கீரையை நாள்தோறுமின்றி -வேண்டும் பொழுது கறியாகச் சமைத்துண்பதே நல்லது. பொதுவாக வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்கட்கொரு முறையோ இக்கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வது நல்லது. அகத்திமரம் மிளகு, வெற்றிலை முதலிய கொடிகளுக்குப் படரும் கொழு கொம்பிற்காக பயி¡¢டுகிறார்கள். இது கொழு கொம்பாகப் பயன்படுவதோடு அப்பயிர்களுக்கு நிழல் தரும் மரமாகவும் உதவுகிறது

அகத்திக் கீரையை உண்பவருக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்துக்கு ஒருமுறையேனும் தவறாமல் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் தேகத்தில் உஷ்ணம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும். மலம், சிறுநீர் தாரளமாக கழியும். குடல் புண் ஆற்றும்.
அகத்திக்கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிட நோய்கள் அகலும்.



வெயிலில் சுற்றி அலைபவர்கள், தேயிலை, காப்பி போன்ற பானங்களைப் பருகிப் பித்தம் அதிகப்பட்டவர்கள், மலச்சிக்கல் உள்ளோர் அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை உண்பது நல்லது 


இடு மருந்துகளின் வேகம் தணிய வயிற்றைவிட்டு இடு மருந்துகள் கழியவும் இந்த அகத்தி மிகவும் பயன்படுவதாக நம்பப்படுகிறது.
சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் இக்கீரையில் அதிகம் இருப்பதைக் காணலாம். 93 கலோரி சக்தியைக் கொடுக்க வல்லது. நூறு கிராம் கீரையில் 1,130 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 80 மில்லிகிராம் மணிச்சத்தும் 3.9 மில்லிகிராம் இரும்புச் சத்தும் அடங்கி இருக்கின்றன.


இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். உயிர் சத்தான வைட்டமின் A, நூறு கிராம் கீரையில் 9, 000 உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லிகிராமிலும், ரைபோ பிளேவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் C 169 மில்லி கிராம் இருக்கின்றன.
அகத்தியின் இளம்பூவும், மொட்டுக்களும் உணவாகச் சமைக்க உதவுகின்றன. பொதுவாக இப்பூவை தனியாகச் சமைத்து உண்பதில்லை. ஆனால் வடநாட்டில் பூவையே தனியாகச் சமைத்துண்கின்றனர்.

இதன் காயையும் கறி சமைத்து உண்ணலாம். அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன.
அகத்திக் கீரை குடலில் தேங்கும் மலம் மற்றும் நிணநீர் ஆகிய அசுத்தங்களைச் சுத்தம் செய்யும் ஆற்றல் பெற்றது மலர்ச்சிக்கலை நீக்கி மலத்தை உடைத்து வெளியேற்றும் தன்மை பெற்றது.
அகத்திக் கீரை பித்தச் சூட்டையும் தணிக்க வல்லது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். 
தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும். இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையைது.

அகத்தியை அகத்தீஸ்வரனாகவே காணுங் கள். கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அகத்தீஸ்வரன் மற்றும் அமுதவல்லித் தாயாரை ஒருமுறை தரிசித்து வாருங்கள்.

800 ஆண்டுகள் பழமையான இவ்வாலயம் நாகர்கோவிலிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அகத்திய முனிவர் தன் மனைவி லோகமுத்திரையுடன் இந்த ஆலயத்துக்கு வந்து எம்பெருமானைத் தரிசித்து பாக்கியம் பெற்றதை புராணங்கள் 
கூறுகின்றன.

இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.

காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.

சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். 

அகத்தியிலையை அவித்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.

அகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் சம அளவாக எடுத்து அரைத்து வாதவீக்கத்திற்கும், கீல் வாயுக்களுக்கும் பற்றிட குணமாகும். இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.

பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும். 

அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.

இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.

அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.

அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும். 

அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும். 

இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும். 

பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.

அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும். 

அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும். 

அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது. 

வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும். 

அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும். 

இக்கீரை பித்த நோயை நீக்கும்

மருத்துவப் பயன்கள்;

அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும்.

தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும்.

இது மருந்து முறிவு கீரையாகும். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.

அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. அளவு இருவேளை குடித்து வர காய்ச்சல், தாகம், கைகால் எரிச்சல், மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.

அகத்தி இலைச்சாறும், நல்லெண்ணெய்யும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமாகக் காய்ச்சி வடிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக்கிழங்கு, விளாமிச்ச வேர் வகைக்கு 20 கிராம் பொடி செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்துவரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.

சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடவும் செய்யும்.

கருத்துகள் இல்லை: