COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

சீரகம்

சீரகச் செடி 35 – 45 செ.மீ. உயரம் வளரும் சிறு செடி. இதன் தண்டு பல கிளைகளுடன் கூடியதாகவும், இலைகள் நீட்டமாக, நன்கு பிரிந்து பச்சையாகவும் (கொத்துமல்லி இலையைப் போல்) இருக்கும்.
செடியின் உருண்டையான பகுதிகளில் வெண்ணிறமுள்ள சிறு மலர்கள் தோன்றும். பூத்ததும் இந்த உருண்டையான முடிச்சுகள் பிளந்து அவற்றில் மூன்று அங்குலம் நீளமான பழங்கள் தோன்றும். அவற்றில் விதைகள் மிகுந்திருக்கும். கோள வடிவில் 6 மி.மீ நீளமாக மஞ்சள் – பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த விதைகள் தான் சீரகம். நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
பழைய காலங்களிலிருந்தே உபயோகத்தில் இருக்கும் சீரகம், எகிப்து, சிரியா, துருக்கி, மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் தோன்றியது. இப்போது வட ஆப்ரிக்கா, இந்தியா, சீனா தேசங்களில் பயிரிடப்படுகிறது.

சீர்+அகம்=சீரகம் என்று கூறப்படுகிறது ஆனால் சரி என்பதற்கு காரணம் இல்லை
ஆனால் தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது .திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
என தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல ஒன்று உண்டு .

 100 கிராம் சீரகத்தில் ஈரப்பசை 6.2%, புரதமும் 17.7%, கொழுப்பு 23.8%, நார்ச்சத்து 9.1%, மாவுப்பொருள் 35.5%, தாதுப்பொருட்கள் 7.7 உள்ளன. தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தியாமைன், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின்கள் சி, ஏ, இவைகளும் உள்ளன. கலோரிகள் 460 காய வைத்த சீரகப் பழத்திலிருந்து டிஸ்டிலேசன் என்ற முறைப்படி, நறுமணமுள்ள, காற்றில் ஆவியாகக்கூடியதும், இலேசானதும் மஞ்சள் நிறம் கொண்டதுமான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவ்வெண்ணெயில் குமிக் அல்கலாயிட் 52% உள்ளது.
பலவகை ரசாயன பொருட்கள் கலந்துள்ள இவ்வெண்ணெயைக் கொண்டு செயற்கை தைமோல் செய்யப்படுகிறது. மற்றும் சீரகத்தில் 10% சீரக எண்ணெயும், பென்டோசன்6.7% உள்ளன.

சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா,
கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
 
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.  சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு  பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். 

மருத்துவக் குணங்கள்:
  1. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து  சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் இந்தச் சீரக நீரூக்கு உண்டு.
  2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
  3. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
  4. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
  5. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட  இதைச் சாப்பிடலாம்.
  6. உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
  7. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடியைச் சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
  8. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
  9. அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டியை பொடித்து சாப்பிட்டால் மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
  10. சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
  11. சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  12. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் வற்றி நலம் பயக்கும்.
  13. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.
  14. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.
  15. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடக்கும்.
  16. சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
  17. சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
  18. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.
  19. மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 மந்தத்தைப் போக்கும்;
*நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
*சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
*அபரிமிதமான பித்தத்தைத் தணிக்கும்.
*மயக்கத்தைப் போக்கி விடும்.
* பித்த நீர் வாயில் ஊறுவதை நிறுத்தும்.
*சீரகத்தில் பொன் சத்து இருப்பதாகச் சித்தர்கள்
கூறியுள்ளார்கள். “நீ இதனையுண்டால் உன் உடல் பொன்னாகக்
காண்பாயாக” என்று அவர்கள் கூறியுள்ளதை
நினைவுபடுத்துகிறேன். அதனால் தான், சீரகத்தைத்
தூள்செய்து சீரணி இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக்
கொடுப்பது உண்டு 

 இரண்டு தேக்கரண்டி சீரகத்தை நன்கு வறுத்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைத்து, வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து மாதவிடாய் காலங்களில் இளம் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு கொடுக்க, வலி சிறிது நேரத்திலேயே குறைந்து விடும். பசி மந்தம், மற்றும் உணவு ஜீரணமாகாமல் இருப்பவர்கள் சீரகம் கொதிக்க வைத்த நீரை அடிக்கடி இளம் சூட்டில் பருகி வர, பசி ஏற்பட்டு ஜீரணம் ஒழுங்காகும். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சீரகத்தண்ணீரை இளம் சூட்டுடன் உணவிற்கு பத்து நிமிடத்திற்கு முன்பும், உணவு உண்டு பத்து நிமிடத்திற்கு பின்பும் அருந்த, உணவு நன்கு ஜீரணமாகி, கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், நீர்கட்டு, நீர்கருக்கு போன்றவற்றிற்கு சீரக தண்ணீரை அருந்த, விரைவில் நிவாரணம் உண்டாகும்.

 ரகம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இயல்புடையது. ரத்த அழுத்த நோயாளிகள் தினம் ஒரு தேக்கரண்டி சீரகம் சாப்பிட, ரத்த அழுத்தம் சீராகும். பிரசவித்த பெண்களுக்கு இது மிக சிறந்த மருந்தாகிறது. சீரகத்தை வறுக்கும் பொழுது நறுமண எண்ணைய் வெளிவரும். அப்பொழுது நீர் ஊற்றி கொதிக்க வைத்து அந்த நீரை பருகும் பொழுது சீரகத்தின் பலன் அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்கள், இந்த சீரக நீரை பருக தாய்ப்பால் பெருகும். கருப்பை பலப்படும். குழந்தை பெற்றதால் கருப்பையில் உண்டான அழற்சி நீங்கும். சீரகத்தில் இரும்பு சத்தும், மங்கனீசிய சத்தும் நிறைந்து உள்ளன. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் பிரண வாயுவை நம் உடலில் உள்ள செல்களுக்கு அளித்து புத்துணர்ச்சியளிக்கின்றது. மேலும் ஈரலை நன்கு வேலை செய்ய தூண்டி, நம் உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.
தைமோலின் பயன்கள்
தைமோலின் வயிற்றுப்பூச்சிகளை கொல்லவல்லது. செப்டிக் மருந்தாகும். சீழையும், கிருமியையும் போக்கவல்லது. அதுவும் கொக்கிப்புழுக்களை ஒழிக்கும். வாய்வு உப்புசத்தை போக்கும். சிறுநீர் பிரிய உதவும்.
ஜீரணத்திற்கு
சீரகம் பல வகைகளில் ஜீரணத்திற்கு உதவும். அஜீரணம், பித்தம், பேதி இவற்றைப் போக்கும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து. இத்துடன் கொத்தமல்லி சாறையும் (ஒரு தேக்கரண்டி) சிறிது உப்பு சேர்த்து குடிக்க வயிற்று கோளாறுகள் குறையும் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் கால் ஸ்பூன் சீரகத்தைத் தூள் செய்து கலந்த நீரை பருகினால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம்.
இது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் போல் பாதுகாப்பானது. வயிற்று வலிக்கு 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் வெந்தயம் தூள் செய்து மோரில் கலந்து குடிப்பது வழக்கம்.
தூக்கமின்மை

வாழைப்பழத்துடன் ஒரு ஸ்பூன் சீரகப் பொடியுடன் இரவில் சாப்பிட தூக்கம் வரும்.
ஜலதோஷம்

மேற்சொன்னபடி, சீரகத்தண்ணீர் குடித்து வந்தால், ஜலதோஷம், அதன் கூட வரும் ஜூரமும் குறையும். தொண்டை கட்டிவிட்டால் சீரகத் தண்ணீருடன் இஞ்சி கலந்து பருக தொண்டை எரிச்சல் குறையும்.
விஷமுறிவு

தேற்கடித்தால் வெங்காய சாறுடன் அரைத்த சீரகம் கலந்து உணவை, தேள் கடித்த இடத்தில் தடவ வலிக் குறையும்.
கருஞ்சீரகம்

சீரகத்தின் ஒரு வகையான கருஞ்சீரகமும் மூலவியாதி, ஞாபக மறதி போன்றவற்றுக்கு நல்லது. சீரகத்தைப் போலவே பயன்படும்.
இதர பயன்கள்

குளிர்காய்ச்சல், காமாலை, வாய்நாற்றம், வாயில் எச்சில் ஊறுவது, பெண்களின் சூதகத்தை கோளாறுகள், இவற்றுக்கு மருந்தாக சீரகம் உதவும்.
தவிர உணவுகளுக்கு சுவை கூட்டவும், மணமளிக்கவும் பயன்படுகிறது. வாசனை பொருட்கள் தயாரிப்பில் சீரக எண்ணெய் பயன்படுகிறது.
 
உள் மருந்தாக மட்டுமல்ல, சீரகம் வெளிமருந்தாகவும் பயன்படும். சீரகத்தை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்துக் கொண்டு வாரம் ஒருமுறை இரத்தக் கொதிப்பு நோயுள்ளோர், பித்த தலைவலி, கிறுகிறுப்பு உள்ளோர் தலைக்குத் தேய்த்துக் குளிக்க நோய் கட்டுக்குள் வரும். 

சீரக பொடி:
சீரகம் - 100 கிராம்
எலுமிச்சம்பழம் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை: சீரகத்தை எலுமிச்சம்பழ சாற்றில் கிளறி நிழலில் காய வைத்து உலர்த்தி நன்கு காய்ந்ததும், பொடி செய்து கொள்ளவும். மிளகை வறுத்து பொடி செய்து சீரகப்பொடியுடன் உப்பு கலந்து வைத்துக் கொள்ளவும். சூடான சாதத்துடன் சிறிது நெய் கலந்து சாப்பிட்டு வர உணவு, நன்கு ஜீரணமாகும். வறட்சி நீங்கும். நோய்வாய்ப்பட்டு பத்திய உணவு உண்பவர்கள், அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் இருப்பவர்கள், சீரகப் பொடி சாற்றுடன் பாசிப்பருப்பு கலந்த காய்கறி கூட்டு கலந்து சாப்பிட, உணவு நன்கு ஜீரணமாகி விரைவில் குணம் உண்டாகும்.

சீரக ரசம்:

சீரகம் - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
- 10 நிமிடம் நீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கடுகு- 1 தேக்கரண்டி
நெய்- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- கைப்பிடி அளவு
பெருங்காய பொடி - 1/4 தேக்கரண்டி
தேவையான அளவு - உப்பு.

செய்முறை: புளியை கரைத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்க வேண்டும். சீரகம், துவரம்பருப்பு, மிளகாய் வற்றல் அரைத்து கொதிக்கும் புளி நீரில் கலந்து, மிதமான தீயில் கொதிக்க வைத்து, உப்பு, பெருங்காய பொடி கலந்து கொள்ளவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். மிக சுவையான சீரணத்தை தூண்டும் ரசம், பிரசவித்த பெண்கள் சாப்பிட உணவு எளிதில் ஜீரணமாகும். எண்ணெய் தேய்த்து குளித்த அன்று இந்த ரசம் சாப்பிடலாம். பத்திய சாப்பாட்டிற்கு உகந்த ரசம். 
 சீரக சூப்
தேவை
துவரம் பருப்பு-1/2கப்
எலுமிச்சம் சாறு-1/2மூடி
மிளகாய் வற்றல்-2
சீரகம்-1டீஸ்பூன்
மிளகு-1/4டீஸ்பூன்
நெய்-1டீஸ்பூன்
கொத்தமல்லி    -சிறிது
செய்முறை
துவரம் பருப்பை நீர்விட்டு நன்கு வேகவைத்து மசிக்க வேண்டும். பிறகு மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். பின்பு சீரகம், மிளகு இரண்டையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்து பொடி செய்து சூப்பில் போட வேண்டும். நுரை நன்கு பொங்கி வந்ததும் எலுமிச்சம் சாறு சேர்க்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
“எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு ஆறு மாச கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது,” என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் ¼ ஸ்பூன் அளவு சாப்பிட தீரும்.
சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர்  நோய் தீரும். சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.

நன்னாரி வேர்

வேறு பெயர்கள்
                              ஆனந்த மூலம்
ஆயுர்வேதத்தில் -நன்னாரியை சாரிப என்று கூறப்படுகின்றது.
 நன்னாரி ” சுகந்த திரவியங்கள்” குழுவில் சேர்க்கப்பட்ட மணமூட்டும் செய்கையுடைய மூலிகை. இதன் பெயரே நல் + நாரி. அதாவது நல்ல மணமுடையது என்று பொருள். இதை பாதாள மூலிகை என்றும் சொல்வதுண்டு. நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியாவேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.). நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.
சாரிபாத்யாசவம் ,சாரிபாதி வடி ,சாரிபாதி க்வாதம் ,சாரிபாதி லேஹியம் போன்ற மருந்துகளில் -இந்த நன்னாரி சேர்க்கிறது
  • இதன் வகை பலவகை உண்டு - நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி.
    இது  இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. . இதன் வேரின் மேற்புறம்  கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும்.
  • சலதொடம் பித்தமதி தாகம் உழலை
    சலேமேறு சீதமின்னார் தஞ்ச்சூடு லகமதிற்
    சொன்னமது மேகம் புண் சுரமிவை யெ லா மொழிக்கும்
    மென்மதுர நன்னாரி வேர் (அகத்தியர் குணபாடம்)

    அன்காரிகை மூலி யாச்சியாத்தோ டுண்ண நித்தி

    யங்கா ரிகை மூலி யாளுமே-யன்காரி
    பற்றாது (தேரையர் வெண்பா )

    காமவல் லியனடிக் கரியுணப் பித்தமா

    நேமமே கப்பிணி நிலை குலைந்தாலுமே (தேரையர் கா )
  •  
  •  
  • மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக...பச்சை நன்னாரி வேர் 5 கிராம்
எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
.
பொது குணங்கள்- ஆயுர்வேதப்படி நன்னாரி, மதுர ( இனிப்பு) குணமும் கசப்பும் இணைந்தது. கனமானது. குளிர்ச்சியூட்டும். பசியின்மை, உணவு கசப்பது, இருமல், ஜுரம், உதிரப் போக்கு, இவற்றுக்கு நல்லது.
குணங்களும், பயன்களும்
நன்னாரி செடியில், வேர்களுக்குத்தான் முக்கியத்துவம். இதன் இலை, கொடி, காம்பு எதிலும் நறுமணமில்லை. மருத்துவ பயன்களும் இல்லை. நன்னாரி இனிப்பானது. எரிச்சலை குறைத்து சமனப்படுத்தும்.
வியர்வையை உண்டாக்கி, உடல் உஷ்ணத்தை தணிக்கும். சிறுநீர் பிரிய உதவும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.
நன்னாரி சேர்க்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் அஸ்வகந்தா சூரணம், அஸ்வகந்தாதி லேஹம், சந்திரனஸவா போன்றவை.
தாவர விவரங்கள்
நன்னாரி படரும் புதர்ச் செடி/ கொடி. கங்கை சமவெளி, அஸ்ஸாம், மத்திய, மேற்கு மற்றும் தென்னிந்தியாவும் வளரும். நன்னாரி விஞ்ஞான ரீதியாக பயிரிடப்படுவதில்லை. ஆனால் பரவலாக காட்டுச் செடியாக வளருகிறது. சரியான முறையில் பயிரிட்டு வளர்த்தால், இந்த மூலிகை மேலும் மேன்மையாகும்.
நன்னாரி வேர் – புதிய வேர் நல்ல நறுமணத்துடன் இருக்கும். காரணம் அல்டிஹைட். முதிர்ந்த வேர்களில் நறுமணம் குறைவு


  • பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.


  • சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.


  • நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.


  • சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .


  • பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.


  • பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.


  • வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்.


  • ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.


  • குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.


  • சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.
  • வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
  • விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.
  • கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.
சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் வெப்பத்தை தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. 

முக்கியமாக மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.
இதுவரை சரிவர பயன்படுத்தப்பாடதது .இதன் வேரை தொடர்ந்து பயன் படுத்தினால் எயிட்ஸ் என்னும் கொடிய நோயில் இருந்து தப்பலாம்.


பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து கால் லிட்டர் . பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, , மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள்  தொடர்ந்து சாப்பிட  நரை மாறும்.


பச்சைவேரை சிறிது இடித்து   நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி காலை, மாலை குடித்து வரப் , , நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும்.    ஆனால் பத்தியம்  மிக அவசியம்.


ஆண்மை பெருக நன்னாரி வேர் ஊறிய நீரை  இளஞ்  சூடாக அருந்தி வரவேண்டும். . இது ஒரு இயற்க்கை  தரும் டானிக் உடல் தேற்றி ! கண்டவற்றை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட நன்னாரி வேர் நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும்  நிற்கும்.


பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும்,இதுவே மாவலி அல்லது மாகாளி  ஊறுகாய் எனப்படும். சித்தமருத்துவத்தில் நன்னாரி  லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.

நன்னாரியின் இதர பயன்கள்
1. நன்னாரியின் வேரை உபயோகித்து செய்யப்படும் “சர்பத்” உடல் சூட்டை தணிக்கும். கோடையில் சிறந்த பானமிது.
2. சுத்தம் செய்து நன்னாரியை ஊற வைத்த ( 24 மணி நேரம்) தண்ணீரை அரை கப் காலை; மாலை குடித்து வர, பித்த நோய், தாகம், மேக நோய், நீரிழிவு இவை குறையும்.
3. நன்னாரி வேரை கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரை காலை, மாலை இரு வேளை குடித்து வந்தால், வாதம், பித்தம், பக்கவாதம், பாரிச வாதம் இவை விலகும்.
4. உடல் சூட்டை தணிப்பதால், நன்னாரி நீருடன் பாலும் சர்க்கரையும் சேர்த்து குடித்து வர, ஆரோக்கியம் அதிகரிக்கும்.
5. யூனானி வைத்திய முறையில் ரத்த சுத்திகரிப்புக்கு நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.
மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத இயற்கைச்சத்து உண்டு. எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும்
கோடைக்காலம் வந்து விட்டால் நா வரச்சியை  தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது  .இது உடலின் உள் வெப்பத்தை தணிப்பது .ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரை கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை பருகினால் உடலுக்கும் மனதிற்கும் குளுகுளு .
காசிற்க்கும் கேடில்லை.
 
1 நன்னாரி வேரை பச்சையாக நசுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து தொடர்ந்து சாப்பிட நரை, திரை மாறும்.
2 நன்னாரி இலைகளை சாப்பிட உடலில் வியர்வை நாற்றம் மாறும்.
3 நன்னாரி வேரை கொதிக்க வைத்து ஆற வாய்த்த நீரில் 8 மணி ஊற வைத்து சாப்பிட உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு நல்ல தீர்வு. இது உடலுக்கு aircondition செய்தது போலிருக்கும்.
4 பொதுவாக நன்னாரி வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிடலாம்
5 மாகாளி கிழங்கு எனும் பெரு நன்னாரி நல்ல பசி தூண்டி ஊறுகாய் செய்து சாப்பிட நல்ல பசி எடுக்கும்

சித்த மருத்துவத்தில் இதன் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.
 
  1. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.
  2. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி, சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.
  3. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள், செரியாமை, பித்த குன்மம் தீரும்.
  4. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இளஞ்சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு, உப்பு, புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய் சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
  5. நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
  6. நன்னாரி வேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிருநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.
  7. நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்தமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மன கோளாறுகள் நீங்கும். தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
  8. நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.
  9. வேர் சூரணம் அரை கிராம் காலை மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் கொள்ள பாண்டு, காமாலை தீரும். அதிகமாகச் சாப்பிட்டால் பசி இருக்காது.
  10. சித்தமருத்துவத்தில் நன்னாரி பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.
  11. பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.
     
  12. உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.
     
  13. ரோட்டோரத்தில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது-இது நல்லதில்லை.
  14.   கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.

காட்டாமணக்கு

வேறுபெயர்கள் -: ஆதாளை, எலியாமணக்கு ஆகியவை.
 \
காட்டாமணக்கு சுமார் 5 மீட்டர் உயரம் வரை வளர்க்கூடிய சிறிய மரம். இது வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப நாடுகளில் நன்றாக வளர்க்கூடியது. தமிழ் நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் வேலிக்காக இது பயிர் செய்யயப்படுகிறது. இது 30-35 வருடங்கள் வரை வளர்ந்து பயன் தரக்கூடியதாகும் இது தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டு பின்னர் போர்த்து கீசியர்களால் ஆப்பிரிகா மற்றும் ஆசிய நாடுகளிக்கு கொண்டு வரப்பட்டவை. வரட்சியைத் தாங்கி வளர்க்கூடிய பயிராக இருப்பதாலும் தரிசு நிலங்களில் பயிரிடக் கூடிய பயிராகக் கருதப்படுகிறது. இதன் இலைகள் நன்கு அகலமாக விரிந்து 3-5 பிளவுகளை நுனியில் கொண்டதாகவும் நல்ல கரும்பச்சை நிறத்திலும் இருக்கும். 8 செ.மீ. நீளமும் 6 செ.மீ.அகலமும் உடையதாக இருக்கும். இதன் மலர்கள் கொத்தாகப்பூக்கும் தன்மையுடையது. இதன் தண்டு மிருதுவாகவும் 6 செ.மீ.முதல் 23 செ.மீ.வரை நீளமுடையதாகும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக வெப்பமான காலங்களில் பூக்கும் காய்கள் கரு நீல நிறத்திலும் பெரிதாக இருக்கும். ஒரு கொத்தில் சுமார் 10 க்கு மேலான காய்கள் இருக்கும். காய்கள் பச்சை நிறத்திலிருந்து 4 மாதங்களில் மஞ்சளாக மாறி விதைகள் முற்றி வெடிக்கும். விதையிலிருக்கும் வெள்ளையான சதையிலிருந்து பயோ டீசல், எண்ணெய், புண்ணாக்கு கிளிசரால் கிடைக்கும்.

8. மருத்துவப் பயன்கள் -: இலை தாய் பாலையும் உமிழ் நீரையும் பெருக்கும், பால் இரத்தக்கசிவை நிறுத்தவும், சதை நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படும். இது சோப்புத் தயாரிக்கவும், இதில் ‘ஜெட்ரோபைன்’ எனப்படும் ஆல்க்கலாய்டு புற்று நோய் எதிர்ப்பிற்கும், தோல் வியாதிகளுக்கும் கால்நடைகளின் புண்களுக்கும் ஈக்களினால் உண்டாகும் தொல்லைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இயற்கை பூச்சிக் கொல்லியாகவும், உராய்வு காப்பு பொருள் தயாரிக்கவும், உருவமைப்பு செய்யும் பொருட்களுக்கும், அழகு சாதனப் பொருட்களாகவும் மின் மாற்றி எண்ணெயாகவும் நீண்ட தொடர் எரிசாராயமாகவும், தோல் பதனிடவும், ஒரு வகை பிசின் தயாரிக்கவும், நூற்பாலைகளில் பயன்படும் எண்ணெயாகவும் தீ தடுப்பு சாதனங்களாகவும் பயன்படுகிறது. மேலும் இந்த மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் கருநீல வண்ணம் துணிகளுக்கும், மீன் வலைகளுக்கும் நிறம் கொடுப்பதற்குப் பயன்படுகிறது. காட்டாமணக்கு இலைகள் பட்டுப்பூச்சிகளுக்கு உணவாகப்பயன்படுகிறது.

இலையை வதக்கி மார்பில் கட்டப் பால் சுரக்கும். ஒரு படி நீரில் ஒரு பிடி இலையை போட்டு வேகவைத்து இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்த்து மார்பில் ஒத்தடம் கொடுத்து, வெந்த இலைகள் வைத்துக் கட்டப் பால்சுரப்பு உண்டாகும்.

விளக்கெண்ணையில் வதக்கிக் கட்டக் கட்டிகள் கரையும் வலி அடங்கும்.

இளங்குச்சியால் பல் துலக்கப் பல் வலி, பல் ஆட்டம், இரத்தம் சொரிதல் தீரும்.

காட்டாமணக்கு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூச புண், சிரங்கு ஆறும்.

பாலை வாயில் கொப்பளிக்க வாய்புண் ஆறும். பாலைத் துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைக்க இரத்தப் பெருக்கு நிற்கும். புண் சீழ் பிடிக்காமல் ஆறும்.

வேர்ப்பட்டையை நெகிழ அரைத்துச் சுண்டைக்காயளவு பாலில் கொடுத்து வரப் பாண்டு, சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுக் கட்டி, பெருவயிறு, குட்டம் ஆகியவை தீரும்.

 காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமணக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்

காட்டாமணக்கு எண்ணையின் பயன்கள்

காட்டாமணக்கு விதையிலிருந்து 30 சதம் திரவ எரிபொருளும் மீதி 70 சதம் புண்ணாக்கும் கிடைக்கிறது.

இந்த திரவ எரிடிபாருளை சுத்தப்படுத்தி டீசலுக்கு மாற்றாக இயந்திரங்களில் பயன் படுத்தலாம்.
• இதன் புண்ணாக்கை இயற்கை உரமாக வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம்.
• எண்ணையை சுத்தப்படுத்தும்பொது கிடைக்கும் கிளிசரால் என்ற உபரிப்பொருளை மருந்துகள் மற்றும் அழகுச்சாதனப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

• காட்டாமணக்கு விதையிலிருந்து பயோ டீசல் எனப்படும் திரவ எரிபொருள் கிடைக்கிறது.
• விலை வீழுச்சி இல்லாத நிரந்தர வருமானத்தைக் கொடுக்கக்கூடியது.
• நாட்டின் பொருளாதார தற்சார்பை ஏற்படுத்தும்.
• கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கும்.
• குறைந்த நீர் கொண்டு வளரக்கூடியது.
• இதிலிருந்து தயாரிக்கப்படும் திரவ எரிபொருள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

இன்சுலின் செடி

 இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதை நான் வீட்டிலும், வரகம்பாடி தோட்டத்திலும் வளர்க்கிறேன். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும். ஆரம்பத்தில் இதன் நாற்றை கேரளாவிலிருந்து திரு.வின்சென்ட் அவர்கள் ஒரு நாற்று ரூ.50-00 என்று வாங்கி வந்து நாற்றுக்கள் உற்பத்தி செய்கிறார். தற்போதும் அவரிடம் நாற்றுக்கள் உள்ளன. அவரது போன்- 9894066303 0422-2566303.


5) மருத்துவப் பயன்கள் -:
சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.


பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.

கோரை.

தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த பின் உச்சியில் மூன்று பிறிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும். இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையது. பெரும் கோரைக்குக் கிழங்குள் கிடையாது வேர் மட்டும். மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலம் மற்றும் பயிர்களுக்கு இடையே களையாகவும் வளர்ந்திருக்கும். பன்றிகள் இதன் கிழங்கை விரும்பித் தின்னும். கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாக இருக்கும். உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது கசப்புத் தன்மையுடையது. ஆனால் நறுமணமாக இருக்கும். பெருங்கோரையை வயல்களில் வளர்த்திப் பெரிதாக வளர்ந்த பின் அதை பாயாகப் பின்னுவார்கள். கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும்.

 மருத்துவப்பயன்கள் -: கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், உடல் பருமனைக் குறைத்து தாது வெப்பு அகற்றி பலமுண்டாக்குதல், இதயம், மூளை, வயித்துக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்பப்பை கோளாறு குணப்படுத்தல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும்.

கிழங்கு சூரணம் 1 கிராம் காலை, மாலை தேனில் கொள்ள புத்திக்கூர்மை, தாதுவிருத்தி, பசித்தீவனம், உடற்பொலிவு உண்டாகும்.

கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்படாகம், பிரமட்டை, சுக்கு வகைக்கு 5 கிராம் சிதைத்து 500 மி.லி. நீரில் போட்டு 125 மி.லி.யாகக் காய்ச்சிக் காலை, மாலை கொடுத்து வரத் தாகத்துடன் கூடிய சுரம் நீங்கும்.

கிழங்கை குடிநீர் செய்து காச்சிய பாலில் சேர்த்து மோராக்கி அதில் உணவு கொள்ளக் குழந்தைகளுக்குக் காணும் பசியின்மை செரியாமை தீரும்.

இஞ்சியும் கோரைக் கிழங்கையும் நன்கு தேன் விட்டு அரைத்து ஒரு சுண்டக்காயளவு கொடுத்தால் சீதபேதி குணமாகும்.

பச்சைக்கிழங்கை அரைத்து மார்பின் மீது பற்றுப்போட்டால் பச்ச உடம்புக்காரிக்குப் பால் சுரக்கும். தேள் கடி, குளவிக் கடி ஆகியவைகளுக்குப் பற்றிட்டால் குணமாகும். இதை உடல் மீது பூசினால் வியர்வை நாற்றம் வராது.

கோரைக் கிழங்கைப் பாலுடன் அரைத்துப் பசையாக்கி தலைக்குப் பூசினால் ஞாபகசக்தி கூடும். வலிப்பு நோய், காச்சல், பைத்தியம் குணமடையும். மேலும் இரத்தக்கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், சிறுநீர் தாரை சுத்தம் ஆகியவை குணமாகின்றது. கர்ப்பப் பையையும், மார்பகங்களையும் நன்கு வளர்ச்சியடையச் செய்கிறது. இதை 1-3 கிராம் பவுடராகவும், 10-70 மில்லிவரை கசாயமாகவும் குடிக்கலாம். குளந்தைகளுக்கும், பச்சை உடம்புக் காரிகளுக்கும் குடிக்கக்கொடுக்கக்கூடாது. சித்த மருத்துவரின் ஆலோசனைப் படி கொடுக்க வேண்டும்.

கோரைக்கிழங்குப் பவுடரை அரை தேக்கரண்டி வீதம் காலையும் இரவும் உணவுக்கு முன் நீர் அல்லது பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, வயிற்றுப்போக்கு நீங்கும்.


 ஆயுர்வேதத்தில் இதனை -முஸ்தா என்போம் .


  • ஆச்சார்யர் சரகர் இந்த மூலிகையை அரிப்பு நிறுத்தும் வர்க்கம் ,தாகம் தீர்க்கும் வர்க்கம் ,தாய்ப்பால் சுத்தம் செய்யும் வர்க்கத்தில் சேர்த்துள்ளார் மேலும் பேதியை நிறுத்த உதவவும்,பசியை தூண்டவும் ,தோல் வியாதிகளிலும் உள்ள மருந்துகளிலும் பயன்படுத்தியுள்ளார் .
  • ஆச்சார்யர் வாக்பட்டர் காய்ச்சலை நிறுத்த சிறந்த மூலிகை என்று குறிப்பிடுகிறார் 
  • கோரை கிழங்கு -ஜ்வரம்,கிருமி ,தாகம்,பேதி ,அரிப்பு ,கிரஹநீ,தூக்கமின்மை ,ரக்த வியாதிகளில்,அக்கி -விசர்பம் ,வலிப்பு ,தோல் நோய்களில் உபயோகமாகிறது 
  • எளிதாக கிடைக்ககூடிய ஆயுர்வேத மருந்துகளான முஸ்தாரிச்டம்,கங்காதர சூர்ணம் ,சடங்கபானியம் (ஆயுர்வேத நிலவேம்பு குடிநீர்),முஸ்தாதி வடி ,பாலா சதுர்புஜ சூர்ணம் ,முஸ்தாதி கசாயம் போன்ற பல மருந்துகளில் மிக முக்கியமான சேர்மான்மாகிறது
  • தனி மூலிகை வர்க்கத்தில் -முஸ்த எனப்படும் கோரைகிலங்கும் பற்படமும் -காய்ச்சலை நிறுத்த உதவும் (அஷ்டாங்க ஹ்ருதயம் -சி -ஒன்று )
  • பேதியை நிறுத்த -கோரை கிழங்கு கசாயத்துடன் தேன் சேர்த்து பருக பேதி நிற்கும் (சுஸ்ருத சம்ஹித -உத்-நாற்பது )
  • மஞ்சள் காமாலை ஹலீமகதில் -லோக பஸ்மதுடன்,கோரை கிழங்கு சூர்ணம் சேர்த்து -கருங்காலி கசாயந்துடன் பருக தீரும் (பாவ பிரகாஷ )
  • என்னுடைய மருத்துவ அனுபவத்தில் சதை வலி களுக்கு மிக சிறந்த மருந்து 

கோரைக் கிழங்கு
  •    செய்கை -துவர்ப்பி ,வெப்பமுண்டாக்கி உரமாக்கி,சிறுநீர்பெருக்கி,வியர்வை பெருக்கி ,உள்ளழல் ஆற்றி ருது உண்டாக்கி ,புழுவகற்றி
    ·         குணம் -நளிசுரம்,குருதி அழல் நோய்,சுரவகைகள் ,நீர்வேட்கை முப்பிணி ,கழிச்சல் ,பைத்திய தோடம்,பித்த காசம் ,கப ரோகம் குதிகாலை பற்றிய வாயு .வாந்தி இவை போகும் 

    செத்த சுரந்தீர்க்குஞ் செம்புனல் பித்தம் போகும்
    வாத சுரந்தணிக்கும் வையகத்தில் -வேதை செய்ய
    வந்த பிணியையெல்லாம் வாட்டுமுத் முத்தக்காசு
    கொந்துலவும் வார்குழலே ! கூறு
    அதிசாரம் பித்தம் அனற்றாகம் ஐயங்
    குதிவாதஞ் சோபங் கொடிய -முதிர்வாந்தி
    யாரைத் தொடர்ந்தாலும் அவ்வவர்க்கெ லாங்குலத்துக்
    கோரை கிழங்கை கொடு (அகத்தியர் குண பாடம் ) 
    காச நோய் தீர -கோரை கிழங்கின் மாவை கிரமப்படி உபயோகிபின் காச நோய் குணமாகும்-
    கோல வுணவைக் குமர நடலிலடு
    கோல வுணவைக் கொடுக யத்தை-

    • நிலவேம்பு குடிநீருக்கான  பாட்டு 
    முத்தக் காசு பற்பாடகம் முதிர்ந்த விளமிச் சிருவேலி
    சுத்த சுக்கு சண்டனமுஞ் சுகமாய்க் காய்ச்சி குடிபீரேல்
    சித்தப் பிரமை யுடன் பிறந்த தேனே மானே சேர்கன்னாய்
    பித்தத் துடனே வந்த சுரம் பேச தோடிப் போய் விடுமே ..

    இப்போது வந்து கலக்கிய சிக்குன் குனியா ,மற்றுமுள்ள மர்மக்காய்ச்சளுக்கு இந்த மூலிகை கலவையே பயன்பட்டது ..
    ·         கோரைக் கிழங்கு மாம்பட்டை ஆகிய இரண்டையும்இடித்துப் பொடியாக்கிப் பிட்டு செய்துஅதை நன்கு பிழிந்தெடுத்த சாற்றில் அதிடயம்இலவம் பிசின் இவற்றைச் சேர்த்து தக்க அளவில் உட்கொண்டால் கழிச்சல் ஜுரம் தீரும்.

  • ·         இதன் குடிநீரை பேதிகுன்மம்வாந்தி முதலியவற்றிற்குத் தரலாம்.
  • ·         இஞ்சிகோரைக்கிழங்கு இரண்டையும் இடித்து தேன் விட்டரைத்து ஒரு சிறு சுண்டைக்காய் அளவு கொடுத்தால் சீதபேதி போகும்.
  • ·         பச்சைக் கிழங்கை அரைத்து மார்பில் பற்றாகப் போட்டால் பால் சுரக்கும் தேள் கடிபட்ட இடத்திலும் பற்றிடலாம். உடல் மீது பூசி வந்தால்     வியர்வை நாற்றம் போகும்.
  • ·         கோரைக் கிழங்குபேய்ப்புடல்திரிபலைதிராட்சைவேம்புவெட்பாலை இவைகளை வகைக்கு கொஞ்சம் எடுத்து முறையாக குடிநீர் செய்து சாப்பிட்டால் சுரம் நீங்கும்.
  • ·         கோரைக்கிழங்கு முழுகுநீர் கோரைக்கிழங்குதிரிபலைமருக்காரைபுங்குகொன்றைவாலுளுவைவாற்கோதுமைஏழிலைப் பாலைகோட்டம்ஞாழல்மரமஞ்சள்வெண்கடுகு இவற்றை நீரிலிட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் பெருநோய்சொறிவீக்கம்பாண்டு தீரும்.
  • ·         கோரைக்கிழங்குசீந்தில்மரமஞ்சள்அன்னபேதிகோண்டம்வெள்ளிளலோத்திரம்கந்தகம்சாம்பிராணிவாய்விடங்கம்மனோசிலைதாளசம்அலசிப்பட்டை இவற்றைப் பொடித்துஉடலில் எண்ணெய் தடவிஅதன்பின் மேற்படி பொடியைத் தேய்க்கசருமப்படைசிரங்கு நீங்கும்.
  • ·         கோரைப்பாய் இது சிறியபெரிய கோரைக்களால் செய்யப்படுகிறது. இதில் படுத்து வந்தால் பசிமந்தம்காய்ச்சல் வேகம் நீங்கும்உடலுக்கு குளிர்ச்சி தரும்தூக்கம் உண்டாகும்
  •  கோரை கிழங்கை காய வைத்து சூரணமாக்கி 1 முதல் 2 கிராம் வரை , தினம் இரு வேளை பாலில் உண்டு வர உடல் பருக்கும். மேலும் இந்த சூரணத்தை உடம்பில் தேய்த்து குளிக்க உடம்பில் உள்ள துர் நாற்றம் , கத்தாளை நாற்றம் ஆகியவை தீரும். கோரை கிழங்கு சூரணம் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். எவ்விதமான பத்தியமும் கிடையாது.கோரை புற்களை வேர் வரை தோண்டினால் கிடைக்கும் கிழங்கே கோரை கிழங்கு ஆகும்
  •  கோரை கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் குறையும்.
  •  திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரையாகும். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகிறது. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான இலையையுடைய சிறுபுல்லினம். முட்டை வடிவான நறுமணமுடைய சிறுகிழங்குகளைப் பெற்றிருக்கும். இக்கிழங்குகள் முத்தக்காசு எனக் குறிக்கப்பெறுகின்றன. இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. 
  •  

வெந்தயக்கீரை,வெந்தயம்

 உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.  அவை ராஜஸ்தான், குஜராத், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஸ்ட்ரா, ஹரியானா, மற்றும் பஞ்சாப். வளமான மண்ணில் வெந்தய விதையை விதைத்தால், ஈரப்பதம் கிடைத்தவுடன் செடி முழைக்க ஆரம்பிக்கும். இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. 

 வெந்தயக்கீரை என்பது முளைத்து வளர்ந்துள்ள சுமார் 3 அங்குலம் உயரமுள்ள வெந்தயத்தையே குறிக்கும். வெந்தயக்கீரையானது வெந்தயத்திற்கான அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே கொண்டது. வெந்தயக்கீரை மேலும் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது.
வெந்தயக்கீரை எளிதாக மல ஜலம் கழிய வழி செய்திடும். சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மூப்படைந்த தசைகளை இறுக்கி இளமையை காத்திடக்கூடிய ஓர் உன்னத மூலிகையாகத் திகழ்கிறது. மேலும் வெந்தயக்கீரை வயிற்றுப்பொருமலை தவிர்க்கக் கூடியது. ஜூரத்தை குறைக்கக் கூடியது. இருமல், சளி போன்ற கப கோளாறுகளை சீராக்கக் கூடியது. ஜீரண சக்தியை தூண்டக் கூடியது. வயிற்றுப்போக்கை தவிர்க்கக் கூடியது. நரம்புகளுக்கு வலுவூட்டக் கூடியது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது மற்றும் வயதிற்கு முந்திய முதிர்ச்சியையும் முடி உதிர்வதையும் தவிர்க்கக் கூடியது.
வெந்தயக் கீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து போன்றவை தாராளாமாக உள்ளது.
வெந்தயக்கீரையை எவரும் எளிமையாகத் தாங்கள் வீடுகளிலேயே தேவைக்கு ஏற்ப வளர்த்துக் கொள்ளலாம். வீடுகளில் இருக்கக் கூடிய பயனற்ற டப்பாக்கள் மற்றும் தகரங்கள் அல்லது தொட்டிகளில் சிறிது குப்பை மண்ணை போட்டு வைத்துக் கொண்டு அதில் வெந்தயத்தை தூவி தினசரி நீர் தெளித்து வர வெந்தயக்கீரை வீட்டிலேயே நினைத்த மாத்திரத்திலேயே கிடைக்கும்.
நன்கு கீரையாக வளர்ந்த வெந்தயம் பயன்தர சுமார் 7 – 10 நாட்கள் ஆகும். எனவே 3 – 4 தொட்டிகளில் மண் நிரப்பி 10 நாள் இடைவெளியில் வெந்தயத்தை தூவி தினசரி நீர் தெளித்து வந்தால் வாரம் ஒரு நாள் வெந்தயக்கீரை தொடர்ச்சியாக கிடைத்து விடும்.கடல் கரை சார்ந்த மணற்பாங்கான இடங்களில் நன்கு வளர்கிறது. நன்சை நிலத்திலும் புன்சை நிலத்திலும் வளரும். இதற்கு வெய்யிலும் தேவை.  இது ஒரு சிறு செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும்.. இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும்.  இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. நீளமுடையது. இது செடியாக இருக்கும் பொழுது பூ பூக்கும் பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன் படுத்துவார்கள். இதை கடைகளில் கிடைக்கும். பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். அதைக் காயவைக்கவேண்டும். காய்ந்த விதையை வெந்தயம் என்பார்கள் விதை இரு பிளவு போன்றிருக்கும்  அது 50 -110 மில்லி  நீளம் இருக்கும். அது மரக்கலரில் இருக்கும். ஒரு கிலோ வெந்தயத்தில் சுமார் 50,000 விதைகள் இருக்கும்.  இது மூன்று மாத த்தில் வளரக்கூடியது.  இந்தச் செடியை ஆதிகாலத்தில் மாட்டுத்தீவனமாகவும் பயன் படுத்தினார்கள்.  இதை சமயல் மற்றும், மருந்தாகவும் பயன் படுத்துவார்கள்.

மருத்துவப்பயன்கள் :;- வெந்தயம் வயிற்றுப் போக்கைக்குணப்படுத்தும், தாய்பால் பெருகும்,  தீப்புண்ணை ஆற்றும், மதுமேகம் குணமாகும், உடல் கட்டிகள் பழுத்து உடையச் செய்யும், வலி போக்கும். சர்கரை வியாதியைக் குறைக்கும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

 வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும்.

வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.

இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும்.

தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.
முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.

முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.

வெந்தயக்கீரை.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.  வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது  வாய்ங்குவேக்காடு வராது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.
வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது.
 வெந்தயக் கீரை: வயிற்று வலி, குடல் புண், வயிற்றுக்கடுப்பு போன்றவைக்கு நல்லது. உயிர்ச்சத்து ஏ அதிக அளவில் உள்ளது. கண் பார்வைக் கோளாறை நீக்கும். இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் கூடவே இருப்பதால் அனைவருக்கும் நல்லது. முக்கியமாய் வளரும் குழந்தைகளுக்கு, மூல நோய் இருப்பவர்களுக்கு, அதிகமாக வெள்ளை படும் பெண்களுக்கு, நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை நல்லது. இது உடல் சூட்டைத் தணித்து, உடலுக்கு வலுவையும் ஊட்டும்.

இதைப் பயிராக்குவதும் எளிது. வெந்தயத்தை எடுத்துக்கொண்டு சிறிது நீர் தெளித்து ஓர் இரவு முழுதும் வைக்கவும். மறுநாள் அதை ஒரு தொட்டியிலேயோ, அல்லது தோட்டத்திலேயோ விதைக்கவும். ஓரிரு நாட்களில் முளை வந்துவிடும். நான்கு அல்லது ஐந்து அங்குலம் செடி வளர்ந்ததுமே அவற்றைப் பறிக்கலாம். தேவை எனில் மேலும் வளரவும் விடலாம். வெந்தயக் கீரையில் இருக்கும் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் தலை மயிர் வளரவும் உதவி செய்கிறது. வெந்தயக்கீரையை அரைத்துச் சாறோடு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தொடர்ந்து தலைக்குத் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிவிட்டுக் குளித்தால் மயிர் அடர்த்தியாக வளரும். தலையில் இருக்கும் சூடும் தணியும்.


வெறும் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து கொண்டு காலை வெறும் வயிற்றில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். வெந்தயக்கீரையைப் பல விதங்களில் சமைக்கலாம். வெந்தயக்கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு பருப்போடு சேர்த்துக் கூட்டு செய்யலாம்.
 எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
   வெந்தயத்தை அப்படியே உபயோகிப்பதால் கசப்பாகவும், விநோத வாசனையும் உடையதாக இருப்பதால் தான் இதனை வறுத்துப் பொடித்துப் பயன்படுத்துகிறோம். இதன் கசப்பு ருசியும், பாகற்காய் கசப்பைப் போல் ஒருவித ருசியாக நாவுக்குப் பழகிவிடுகிறது. இந்தக் கசப்பு ருசிக்குக் காரணமான க்ளைக்கோசைட்ஸ் (clycosides) வெந்தயத்தில் தூக்கலாக இருக்கிறது. நல்ல பசி கிளப்பியாக இந்த கசப்பு ருசி இருப்பதோடு உணவு ஜீரணத்துக்கு அத்தியாவசியமாக பித்த நீரை தாராளமாக சுரக்கத் தூண்டிவிடுகிறது. அசைவ உணவுக்காரர்களுக்கு இது நன்மை கூட்டுகிறது.
              வெந்தயத்தில் பாஸ்பேட்டுகளும், லிஸிதின், நியூக்லியோ, அல்புமின் நிறைந்து இருப்பதால் உடல் வளர்ப்பதோடு பசியின்மையைப் போக்குகிறது. அனிமியா என்னும் இரத்தசோகை அண்டாது. நிக்கெட்ஸ் நோய்க்கு பரிகாரமும், இதுவே நீரிழிவுக் காரர்களுக்கும் நல்லது.
              தினமும் இரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை பொடித்தோ, முழுசாகவோ கொடுத்து வந்தால் ரத்தத்திலுள்ள கூடுதல் சர்க்கரை கட்டுப்படும். அல்லது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை ம்ட்டும் வடிகட்டிக் குடிக்கலாம்.
              பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க வெந்தயத்தை வறுத்து இடித்துக் கொடுக்கலாம்.
           மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ரத்தப் போக்குடையவர்களுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் வெந்தயத்தை வறுத்து இடித்து நெய், சீனி சேர்த்து ஹல்வா செய்து கொடுப்பது இழக்கும் தெம்பை மீட்க உதவும்.
               நல்ல ருசியான உணவு தயாரிப்புகளின் வாசனை வந்தும்கூடி பசி கிளம்பாமலோ நாவில் ருசி மரத்துப் போயிருந்தாலோ கூட இதுவே மருந்து.
               கணையம், கல்லீரல் வீக்கம், வயிற்றுப் போக்கு, அஜீரணம், நெஞ்சு எரிச்சல்... போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வெந்தயம் ஒரு மாமருந்து. வயிற்றுக் கோளாறுக்கு மட்டுமல்லாது, வெந்தயநீர் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். சிறுநீர்ப்போக்கை சீராக்கும்.
               இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம். 


பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்.   

அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.

பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.   
 இது பாலி யல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது
 ஆண்களின் விந்து உற்பத்தி உட்பட பாலியல் ஹோர்மோன்களைப் பலப்படுத்தக் கூடி யது. படுக்கை அறையை சூ டாக்க வெந்தயம் பெரிதும் கை கொடுக்கும்
வெந்தயக்கீரை சூப்
தேவை
வெந்தயக்கீரை – 1 கைபிடி (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
வெங்காயம் (பெரியது) – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
பால் – 1 கப்
சோளமாவு – 1 டே.ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
நெய் (அ) எண்ணெய் – 1 டே.ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பாத்திரத்தை அடுப்பலிட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இட்டு வதக்கவும்.
பின்னர் சோளமாவைப் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கீரையை அதனுடன் சேர்த்து வேக விடவும்.
எல்லாம் வெந்தவுடன் அதில் பாலை சேர்த்து பின்னர், உப்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.
வெந்தயம் வெந்தய விதையில் எண்ணெய் அடங்கியுள்ளது. வீச்சம் உள்ள கசப்பான எண்ணெய். இதில் உயிர்ச்சத்துக்கள, கனிப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. சமையலில் வாசமூட்ட வெந்தய விதையை சமையலில் சேர்ப்பார்கள். மருத்துவ குணங்கள் எரிச்சலைத் தடுக்கும், சிறுநீரைப் பெருக்கும், இரைப்பை அசௌகரியங்களை நீக்கும். பாலுணர்வைத் தூண்டும், தாய்ப்பாலைப் பெருக்கும், உடம்பின் உள்ளுறுப்புக்களைச் சுத்திகரிக்கும். அழகு சாதனம் மற்றும் கேசப் பராமரிப்பில் வெந்தயம் உபயோகமாகும். உடலில் ஏற்ப்படும் திருகுவலி, வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு வாயு உபத்திரவம், நாட்பட்ட அசீரணம் ஆகிய உபாதைகளில் நல்ல பயனை அளிக்கும். வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகமாதலினால் சோகையில் குணம் பெற உதவும். வெந்தய விதைகளை நெய்யில் வறுத்து, பொடி செய்து அத்துடன் கோதுமை மாவு, சக்கரை சேர்த்து அல்வா தயாரிக்கலாம். தினமும் சிறிதளவு இந்த அல்வாவை சாப்பிட்டு வர பிரசவித்த பெண்கள் விரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். 

இளம் தாய்மார்கள் வெந்தய விதையை கஞ்சி வைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும். உமிழ் நீர் சுரப்பியின் இயக்க கோளாறு காரணமாக சிலருக்கு உணவின் சுவை தெரியாமல் போய்விடும். வெந்தய விதை சுவைத் திறனை ஊக்குவிக்கும். மூக்கில் சளியப்படலம் உருவாகி மணத்தை நுகரமுடியாத நிலையில் உள்ளவர்கள் வெந்தயத்தைக் கொண்டு தங்கள் நுகரும் சக்தியை மேம்படுத்திக் கொள்ளலாம். வெந்தய விதை பொடுகை அகற்றுவும் பயன்படுகின்றது. இரண்டு மேசைக்கரண்டி விதையை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்துவிட வேண்டும். காலையில் மிருதுவாகிவிட்டிருக்கும் விதையை அரைத்து பசை போலாக்கிக் கொள்ளவும். இந்தப் பசையை மண்டையில் தேய்த்து அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு சீயக்காய் கொண்டு தலையை அலசி விடலாம். காய்சலில் அவதிப்படுபவருக்கு வெந்தய விதையை அரைத்து பொடி செய்து தேநீர் தயாரித்து குடிக்கச் செய்தால் காய்ச்சல் தணியும். வுயிற்றில் ஏற்ப்படும் அழற்சிக்கும் வெந்தய தேநீர் மிகவும் நல்லது. குடல, சிறுநீரகம் மற்றும் சுவாசப் பாதையில் உண்டாகும் சளியை அகற்றும். குடற் புண்ணிலும் நற்பலன்களை வழங்கும். மார்ச்சளி, காய்ச்சல், பீனிசம் (சைனஸ்), நீர்க்கோப்பு ஆகிய உபாதைகளின் தொடக்க நிலையில் வெந்தய தேநீர் குணம் பெற உதவும். உடம்பை வியர்க்கச் செய்து நச்சுத் தன்மையை வெளியேற்றும். காய்ச்சல் கட்டத்தை குறுகியதாக்கும். 

வெந்தய தேநீரில் சில சொட்டுக்கள் எலுமிச்சம் சாறு சேர்த்துக்கொள்ள மணம் கிடைக்கும். தொண்டைப் புண்ணுக்கு வெந்தய நீரைக் கொப்பளிக்க சரியாகும். 1.25இலீ. தண்ணீரில் இரண்டு மேசைக் கரண்டியளவு வெந்தய விதையை இட்டு தணிவான தீயில் அரை மணி நேரம் காய்ச்சி எடுக்க வேண்டும், ஆறவிட்டு வடிகட்டி கொப்பளிக்க பயன்படுத்தலாம். வெந்தய தேநீர் வாய் நாற்றத்தைப் போக்கும். வாய் மற்றும் நாசிப் பாதையில் சளி தங்குவதால் கெட்ட நாற்றம் ஏற்ப்படும் இதே பிரச்சனை சிறுநீர்ப் பாதை, இரைப்பை குடல் பாதை, இரத்த ஓட்டம், பிறப்புறுப்பு ஆகியவற்றிலும் ஏற்ப்படக்கூடும். வெந்தய தேநீரை தொடர்ந்து சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும். நீரிழிவுக்கான சிகிச்சையிலும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். தினமும் 25கி. வெந்தயத்தை உட்கொள்ள இரத்தத்தில் கூடிய சக்கரையின் அளவு குறையும். நீரிழிவு நோயாளியின், குளுக்கோஸ், குருதிக்கொழுப்பு (கொலஸ்ரோல);, ட்ரைகிளிசரைட் அளவுகளையும் அது குறைக்கும். வயிறூதல, உதடு வெடிப்பு ஆகியவற்றிற்கும் வெந்தய விதை மருந்தாகும். உணவை எளிதில் சீரணிக்கச் செய்யும், பசி உணர்வைத் தூண்டும். உடல் சூட்டைத் தணித்து குளிர்மை செய்யும். வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்றபின்பு பாலோ, தயிரோ குடிக்க வயிற்றுவலி, வயிற்றுச் சூடு நீங்கும். வெந்தய விதையை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலையில் தடவிவர முடி நீளமாகவும் கருமையாகவும் வளரும். முடி உதிர்வதும் குறையும். புளுங்கல் அரிசி ஒரு கோப்பை, இரண்டு தேக்கரண்டி வெந்தயம், இரண்டு தேக்கரண்டி உழுத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து வெந்தய தோசை மா தயார் செய்யலாம். வெந்தய தோசையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்காது. மாதவிலக்கு ஒழுங்கற்று காண்பது, மாதவிலக்கு ஒழுங்கற்று காண்பதுஇ மாதவிலக்கின் போது வயிற்றுவலி, இடுப்பு வலி ஏற்ப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சக்கரை கலந்து சாப்பிடலாம். வெந்தயக் கஞ்சி தாய்ப்பால் அதிகம் சுரக்க வழிசெய்யும். இந்தக் கஞ்சியோடு தேங்காய்ப்பால், சில உள்ளிப்பற்களை சேர்த்துச் சாப்பிட குடல் வாய்வு நீங்கும். சூட்டால் வரும் வாய்ப்புண்ணும் ஆறும். வெந்தயம் கல்லீரல் நோய்களை நீக்கும்
இருமலை குணப்படுத்தும்.
கபம், சளியை அகற்றுகிறது.
மந்தமாய் இருப்பவர்களை சுறுசுறுப்பாக்குகிறது.
உடலுக்கு வனப்பைக் கொடுக்கிறது.
அஜீரணத்தைப் போக்குகிறது.
பசியைத்தூண்டிவிடுகிறது.
கண் நோய்களைப் போக்குகிறது.
கண் பார்வையைத் தெளிவாக்குகிறது.
சொறி சிரங்கை நிவர்த்தி செய்கிறது.
வயிற்றுக் கோளாறுகளை, வயிற்று உப்புசம், வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, போன்ற நோய்களைப் குணப்படுத்துகிறது.
வாத சம்பந்தான நோய்களை குணப்படுத்தும்.
நிரிழிவு நோயை கட்டுப்படுத்துப்படுகிறது.
நரம்புத்தளாச்சியைப் போக்குகிறது.
பற்களை உறுதியாக்குகிறது.
 மாதவிடாய் கோளாறா?
வெந்தயக்கீரையைஅடிக்கடி சமைத்து சாப்பிட்டுவந்தால்  மாதவிடாய்  கோளாறுகள் நீங்கிவிடும்.

இடுப்பு வலியா ?

இன்று அதிக உழைப்பில்லாதால் ஏகப்பட்ட நோய்களை பெருகின்றன.   , அவற்றில் இடுப்புவலியும் ஒன்று, இந்த வலிக்கு ஆளானவர்கள் படாதபாடுபடுகின்றனர் இவர்களுக்கு நிவராணம்  வெந்தயக்கீரையை ஆகும்.   இக்கீரையோடு தேங்காய்ப்பால் நாடடுக்கோழிமுட்டை நிரிழிவுநோய்  உள்ளவர்களுக்கு  மஞசள் கருவை நீக்கவும்  கசகசா சீரகம்  மிளகுத்தூள் பூண்டு  இவைகளோடு நெய்யையும் சோத்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி பறந்துபோகும்.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சிககு

படிப்பில் கவனம் செலுத்தாத, எவ்வளவு படித்தாலும்  மறந்துபோகிற, படிப்பென்றால் கசக்கிறது என்கிற குழந்தைகளுக்கு, படிப்பென்றால் மகிழ்ச்சி தரக்கூடிதாக மாற்றுகின்ற தன்மை இக்கீரைக்கு உண்டு. இக்கீரையை பாசிப்பருப்பு மற்றும் வேர்க்கடலை நெய்யுடன் கலந்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டுவந்தால் ஒரிரு மாதங்களில்  நன்கு படிப்பார்கள்.
  • இருமலை குணப்படுத்தும்.
  • கபம், சளியை அகற்றுகிறது.
  • மந்தமாய் இருப்பவர்களை சுறுசுறுப்பாக்குகிறது.
  • உடலுக்கு வனப்பைக் கொடுக்கிறது.
  • அஜீரணத்தைப் போக்குகிறது.
  • பசியைத்தூண்டிவிடுகிறது.
  • கண் நோய்களைப் போக்குகிறது.
  • கண் பார்வையைத் தெளிவாக்குகிறது.
  • சொறி சிரங்கை நிவர்த்தி செய்கிறது.
  • வயிற்றுக் கோளாறுகளை, வயிற்று உப்புசம், வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, .
  • மூலவாயுவை குணமாக்குகிறது.
  • தொத்து நோய்களிலிருந்து காக்கிறது.
  • எலும்புகளைக் உறுதிப்படுத்துகிறது.
  • மூட்டுவலிகளை குணமாக்கிறது.
  • வீக்கம் கட்டி புண்களை அகற்றுகிறது.
  • மார்பு வலியிலிருந்து காக்கிறது.
  • தொண்டைப் புண்ணை ஆற்றுகிறது.
  • தலைசுற்றலை நிறுத்துகிறது.
  • பித்தத்தால் எற்படும் கிறுகிறுப்பை போக்குகிறது.
  • உடல்சூட்டை தணிக்கிறது.