COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

மலர் மருத்துவம் யாரெல்லாம் உபயோகிக்கலாம்1) யார் யார் மலர் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்? யார் யார் எடுத்துக் கொள்ளக் கூடாது?
பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினரும் அவரவரிடம் அமைந்துள்ள எதிர்மறை இயல்புகளுக்கேற்ப மலர்மருந்துகளை எடுதடதுக் கொள்ளலாம். இதில் எந்தவிதமான தடைகளும் கட்டுப்பாடுகளும் யாருக்கும் கிடையாது.

2) மலர் மருந்துகள் சாப்பிடும் போது காபி, புகை, மது குடித்தல் எதிர்மறையான மோசமான விளைவுகள் ஏற்படுமா?
மலர் மருந்துகளுக்கு எதிர்மறை இயல்புகளை மாற்றும் ஆற்றல்தான் உண்டே தவிர எந்தச் சூழ்நிலையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாது. மலர் மருந்தில் எந்த விதமான நச்சுத் தன்மையோ, கேடான தன்டையோ கிடையாது.

3) மலர் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் அதனையே சார்ந்து கிடக்கும் நிலை/பழக்க அடிமைத்தனம் (Habit Forming) ஏற்பட்டு விடுமா?
மலர் மருந்துகளில் பௌதீக வடிவிலான மருந்துப்பொருள் (Physical Substance) எதுவும் இல்லை. மனச்சமநிலையை ஏற்படுத்தவே மலர் மருந்து உண்கிறோம். அத்தகைய மனச்சமநிலை (மன ஆரோக்கியம்) கிடைத்த பின்னர் மலர் மருந்துகளுக்கு வேலை ஏதுமில்லை. அதன் காரணமாக மருந்து சாப்பிடும் தேவையும் இருக்காது ஆர்வமும் குறைந்து.. மறைந்து போகும். மலர் மருந்தை இயல்பாகவே மறந்துவிட நேரிடும். எனவே மனோரீதியில் மலர்மருந்துகளுக்கு அடிமையாகி அதனை விட்டு விலக முடியாதநிலை ஏற்பட சாத்தியமே இல்லை.

4) உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மனநிலைகளும் 38 மலர் மருந்துகளுக்குள் அடங்கி விடுமா?
நிறங்களுக்கு ஓர் உலகம் உண்டு. அதனோடு இந்தக் கேள்விக்கான பதிலை ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம். சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று வண்ணங்கள் மட்டுமே அடிப்படை நிறங்கள். ஆனாலும் இவை ஒன்றோடொன்று இணையும் போது எண்ணற்ற நிறங்கள் பிறக்கின்றன. அதே போல மனித குலத்தில் 38 விதமான அடிப்படை மனநிலைகள் காணப்படுகின்றன. அவை ஒன்றோடென்று கலக்கும் போது கணக்கில் அடங்காத மனநிலைகள் உருவாகின்றன.

5) மலர்மருந்துகளை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
கடந்த காலத்திலோ, கடந்த ஆண்டோ, கடந்த மாதமோ, கடந்த வாரமோ, நேற்றோ ஒரு நபரின் மனநிலை, உணர்வு நிலை எப்படி இருந்தது என்பதைவிட இப்பொழுது அவருடைய மனநிலை, உணர்வு நிலை எப்படி உள்ளது என்று கேட்டு விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். அந்த நபர் மலர்மருத்துவ மனவகைகளில் எந்த வகையை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அதற்கு பொருத்தமான மருந்துகளை தேர்ந்தெடுப்பது எளிது.

6) கர்ப்பிணிப் பெண்கள் மலர் மருந்துகள் சாப்பிடலாமா?
சாப்பிடலாம். மலர்மருந்துகளால் எந்தத் தீங்கும் ஏற்படாது. மேலும் ஆரோக்கியமான, நேர்மறையான உணர்வுகளும், மனநிலைகளும் அமையப்பெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் சிறந்த நோய் எதிர்ப்பாற்றலும், அறிவாற்றலும், பண்புகளும் உள்ளவர்களாக இருப்பார்கள்

7) ரெஸ்கியூ ரெமடி மிக விரைவாக, உடனுக்குடன் பலனளிக்கும் என்று கூறுகிறார்களே? உண்மையா?
ஆம், ஜெட் வேகத்தில் நிவாரணம் தரும் மலர் மருந்து இது. ஆழமான மனப்பிரச்சனைகளுக்கு அல்லாமல் அவசரமான நெருக்கடியான சூழ்நிலைகளில் தான் பெரும்பாலும் ரெஸ்கியூ ரெமடி பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஆர்.ஆர்.மிகத்துரிதமாகப் பணியாற்றி அதியற்புதமாக தன் ஆற்றலை வெளிப்படுத்தி நிவாரணம் வழங்குகிறது. மலர்மருந்துகள் மனிதநேயமும், எல்லையில்லா கருனைணயும் கொண்டவை என்பதற்கு இம்மருந்து சிறந்த எடுத்துக்காட்டு.

மல்லிகை ---மலர்களின் மருத்துவ குணங்கள் ..!

 • மல்லிகைப் பூவின் மருத்துவ குணம்
 • மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
 • மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
 • குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
 • மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.
 • குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியினர் தொடர்ந்து மல்லிகைத் தோட்டத்தில் உலாவினால் நல்ல பலன் ஏற்பட வாய்ப்பு உண்டு. மல்லிகைப் பூவின் மணத்தை ‘காதல் மணம்’ என்று கூடச் கூறுவர். மன்மதன் – ரதி ஆகியோர் மல்லிகைத் தோட்டத்தில் தான் வசித்தார்களென்று புராணங்கள் கூறுகின்றன. மல்லிகைப் பூ தைலம் எடுக்கப்பட்டு வாசனைத் திரவியங்களில் கலந்து பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.?
 • மல்லிகைப் பூ தைலம் எடுக்கப்பட்டு வாசனைத் திரவியங்களில் கலந்து பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.
 • மல்லிகைப்பூவை நன்றாக அரைத்து உடலில் வீக்கமுள்ள இடங்களில் தடவி வந்தால் வீக்கம் குறையும். சொறி, சிரங்கு, நமைச்சல் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்
 • .
 • மல்லிகை டீ
 • மல்லிகைப்பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து, டீ போல போல் காய்ச்சி குடிக்க சிறுநீரக கற்கள் நீங்கும். நீர்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும். மல்லிகைப் பொடி டீ தினமும் குடித்தால் எலும்புருக்கி நோய், நுரையீரல் புற்று நோய்களின் பாதிப்பு குறையும் என கண்டறியப்பட்டுள்ளது.

 • குடற்புழுக்கள் நீங்கும்
 • குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும். அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வயிற்றுப்புண்களுக்கும். வாய்ப்புண்களுக்கும் 
 • மல்லிகை சிறந்த மருந்து.

 • நரம்பு தளர்ச்சி நீங்கும்
 • நேரங்கடந்த உணவு, சத்தான உணவின்மை போன்றவற்றினால் சிலருக்கு நரம்புகள் தளர்ச்சியடைந்து உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இவர்கள் மல்லிகைப்பூக்களை நிழலில் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

 • கண்களில் சதை வளர்வதால் ஏற்படும் பார்வைக் கோளாறுகள் நீங்க மல்லிகைப் பூக்களை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.
 • மல்லிகைப் பூக்களை நன்றாக கசக்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வர தலைவலி குணமடையும்.

 • பெண்கள் நோய் தீர
 • பிரசவத்தில் ஏற்படும் பிரச்சினையினால் தாய்பால் கொடுக்க முடியாமல் மார்பில் சுரந்த பால் கட்டிக்கொண்டு வலி ஏற்படும். இந்த சமயத்தில் மல்லிகைப்பூக்களை அரைத்து மார்பகத்தில் பற்றுபோல் போட்டால் வலி குறைந்து பால் சுரப்பது நிற்கும். மார்பகத்தில் தோன்றும் நீர்கட்டிகள் குணமடையவும் மல்லிகையை பற்று போடலாம். இதனால் வலி நீங்கி 
 • கட்டிகள் குணமடையும்.

 • மல்லிகைப்பூவை நன்கு கொதிக்க வைத்து ஆறியபின்பு குடித்து வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் பிரச்சினைகள் குணமடையும்.
 • மல்லிகைப் பூக்களைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெய் கர்ப்பப்பைக்கு வலுவூட்டி பிரசவத்தின் போது உண்டாகும் வலியை குறைத்து சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது.
 • பெண்களின் கருப்பையில் உண்டாகும் புண்கள், கட்டிகள் நீங்க மல்லிகை எண்ணெயை பயன்படுத்தலாம். நாள்பட்ட தழும்புகள், அரிப்புகள் குணமடையும்.

 • நோய் எதிர்ப்பு சக்தி
 • மல்லிகைப்பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்கும்.
 • மல்லிகை மொட்டுக்களை புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமடையும்.

 • மல்லிகையின் வேரை காயவைத்து பொடிசெய்து அதனுடன் வசம்புத் தூளை சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். 
 • -.

 • மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.
 • கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

 • பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

 • உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.
 • தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
 • உலர்ந்த மல்லிகைப்பூ - 5 கிராம்
 • கறிவேப்பிலை -10 இலை
 • எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

 • வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.அப்படியானவர்கள் 4 மல்லிகைப்பூவை தண் ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

 • மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது .நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப்பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

 • சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத் து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்து விட்டால் தலைவலி காணாமல் போகும்.

 • மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல்சூடும் மாறும். இதுபோ ன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.
 • குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
 • மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்றுபோட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.
 • மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
 • தொண்டைப்புண் அற்றுப் போவதற்கு மல்லிகைப் பூக்களை அரைத்து, புண் உள்ள பகுதியில் இரவில் பூசி வரவேண்டும்.அதாவது, குடலில் புழுக்கள் தங்கியிருந் தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று விடும்.
 • இதனால் குடல் புண்ணாகும். இதனால் செரிமானத் தன்மை குறையும். இந்த குட ற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீரில்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

 • வயிற்றில் புண்கள் ஏற்படும். இந்த புண்களின் வேகம் வாய்ப் பகுதியில் தாக்கி வாய்ப்புண் உண்டாகும். இவை நீங்க மல் லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இரு வேளையும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.
 • மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்சி குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.