COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

ஊமத்தை

  • வேறுபெயர்கள் -: ஊமத்தம் உன்மத்தம் எனவும் படும்.இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா

  •  வகைகள் -: வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை,கருஊமத்தை எனும் வகைப்படும். 
  •  பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்குமயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

  • இலையைநல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.

  • இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்துகாச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.

  • இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும்இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.


  • இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் சதைவளரும் புண்புரைகள், தீரும்.

  • ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில்மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.

  • இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.

  • ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். விடத்தன்மையுடையது. இதன் விடம் முறிய தாமரைக்கிழங்கை அரைத்து பாலில் இரு வேழை மூன்று நாள்கொடுக்கலாம். இக்காய் பில்லி, சூன்யம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும்.

  • சித்தம் பிரமை -: ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில்போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலைதலைக்குத் தேய்த்துக் குளிக்கவைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.
  • அனைத்து வகைப் புண்ணுக்கும். - ஊமத்தம்இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும்மேல் பூச்சாக இட குணமடையும்.மேகப் புண், நீரிழிவுப்புண், ஆராத குழிப்புண், வளர் புண் குணமடையும்.

  • பேய்குணம் - :இதன் காய்,விதையும், மருதாணிப் பூவும், உலர்த்திய தூள் புகைக்க பேய் குணம் விலகும்.-ஊமத்தை இலை சாறு சூடேற்றி தேய்க்கும் போது பேன்,ஈறு தொல்லை நீங்கும்


  • இலை : இலையை நல்லெண்ணெயில் வதக்கி, இதமான சூட்டில் ஒத்தடமாகக் கொடுத்து, கட்டி வந்தால் வாதவலி, மூட்டுவலி, வாயுக்கட்டிகள், அகண்ட வாயு, தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மார்பகங்களில் ஏற்படும் வலி ஆகியவை குறையும்.
  • இலையைக் காயவைத்து பொடியாக்கி குண்டுமணி அளவு தேனில் கொடுத்தால் சுவாசகாசம் குணமாகும்.
  •  இலை, பூ, விதை, மூன்றையும் சம அளவாக எடுத்து பாலாவியில், பிட்டவியலாக்கி அவித்து உலரவைத்து, ஒன்றிரண்டாக இடித்து அதில் சிறிது அளவு ஒரு இலையில் வைத்து சுருட்டாக்கி புகைத்தால் மூச்சுத் திணல் குணமாகும். இலையுடன், சம அளவு அரிசி மாவு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து களிபோலக் கிளறி, இதமான சூட்டில் பற்று போல போட்டு வந்தால், மூட்டு வீக்கம், வலியுள்ள கட்டிகள், வெளிமூலம் போன்றவை குணமாகும்.
  • இலைச்சாற்றை 2, 3 துளி அளவு வெல்லத்தில் கடைந்து காலை, மாலை 3 நாட்கள் கொடுத்து பத்தியமாக இருந்து வந்தால் வெறி நாய்க்கடி விஷம் தீரும். உப்பு, புளியை நீக்கி, பால், மோர், சோறு மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும். இலையை தண்ணீர் விடாமல் அரைத்து, நல்லெண்ணெயில் வதக்கி புண்ணில் கட்டினால் புண் ஆறும்.
  • இலைச் சாற்றுடன், அதே அளவு தேங்காயெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி ஒரு சில துளிகளைக் காதுகளில் விட்டு வந்தால் ஏற்படும் காதுவலி குணமாகும்.
  • இலைச் சாற்றுடன், அதே அளவு தேங்காய் எண்ணெயும் கலந்து பதமாகக் காய்ச்சிய பிறகு, சிறிதளவு மயில் துத்தம் தூளாக்கி போட்டு வடிகட்டிய பின் மேலாக பூசி வந்தால்  புரையோடிய புண், சதை வளரும் புண், ஆறாதபுண் எனும் புண் பிளவையும் கூட குணமாக்கும்.
  • காய் : வாதநோய், கரப்பான், கிரந்தி, சொறி நீக்கும். பித்த மயக்கத்தை உண்டாக்கும்.
  • பிஞ்சு : இதன் பிஞ்சை எச்சிலில் அரைத்துத் தடவி வர புழுவெட்டு தீரும்.
  • விதை : இதன் விதையை நெய்யில் அரைத்து மூல முளையில் பூசி வந்தால் குணமாகும்.
  •  50 கிராம் அளவு விதையை ஒன்றிரண்டாய் இடித்து சுமார் 400 மிலி அளவு நல்லெண்ணெயில் இட்டு 7 நாட்கள் பொறுத்து அரைத்து, வெயிலில் வைத்து வடிகட்டி வைத்திருந்து, அடிவயிற்றில் தடவி வந்தால் சூதக வயிற்று வலியும், நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கன்னம், முகம், காது என அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் குடைச்சல் நோய்க்கு தடவி வந்தால் குணமாகும்.
  • வேர் : விதை மற்றும் வேர் வயிற்றுப் போக்கை தடுக்கிறது. காய்ச்சலைப் போக்கி, கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தனது நிலையை மறந்தவர்களுக்கு மருந்தாகிறது. தோல் வியாதிகளைப் போக்குகிறது
  • ஆச்சார்யர் சரகர் இந்த ஊமத்தையை விஷ சிகிச்சையிலும் தோல் வியாதி சிகிச்சையிலும் கூறுகிறார் .
  • ஆசார்யர் சுஸ்ருதர் முக்கியமாக அலர்க விஷம் என்னும் -நாயகடியால் ஏற்படும் ரேபிஸ் நோயில் கூறுகிறார் .
  • ஹிரித சம்ஹிதையில் மூல நோய்க்கான சிகிச்சையில் கூறுகிறார் .
  • பயன்பாடுகளில் -ஜ்வரம்,தோல் நோய்கள் ,புண் ,அரிப்பு ,கிருமி ,விஷ ரோகம் ,நீர் கடுப்பு 

  • நாய் கடிகளில்(அலர்க்க விஷம் ) -ஊமத்தை ,வெள்ளை சாரணை வேர் இரண்டும் சேர்ந்து நாய்கடி விஷத்தை போக்கும் 
  • கிருமி -ஊமத்தை இலை சாறு சூடேற்றி தேய்க்கும் போது பேன்,ஈறு தொல்லை நீங்கும் 
  • பிடக ஆமாய -வேனல் கட்டிகளில் -வல்லாரை இலை சாறு+ஊமத்தை வேர் -வேனல் கட்டிகளுக்கு ,கட்டிகளை கரைக்க வெளிப்ர்யோகமாக உதவும் 
  • மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் -கனகாசவம் ,சூத சேகர ரசம் ,மகா விஷ கர்ப்ப தைலம் ,உன்மத்த ரசம் 
  • ஆஸ்தமா குணமாக -கனகாசவம் உதவும் 
  • அட்ரோபின் என்னும் ஆங்கில மருந்துக்கு இது தாய்.-தற்கொலைக்கு  விஷம் சாபிட்டவர்களின் உயிர்களை இந்த அட்ரோபின் காப்பாற்றி யுள்ளது எனவே -ஆயுர்வேத சித்தா மருந்துகில் குறிப்பிட்டது போல் விஷ வைத்தியத்தில் உதவுகிறது .
  • அட்ரோபின் கண்ணின் விழிபாவையை விரிக்க உதவும் .இந்த கண் சொட்டு மருந்து இல்லாமல் கண் விழித்திரையை எந்த கண் மருத்துவரும் பார்க்கமுடியாது


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மஞ்சள் ஊமத்தை பூ செடி உள்ளதா. அதன் பூ மற்றும் காய் படங்களை பதிவிடவும். நன்றி.