COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

கண்டங்கத்திரி. Solanum indicum Linn.


 (ஆற்றுமுல்லி,இயக்கினி, கடுமுள் , கடுமுன் , கண்டகாரி , கண்டகாரிகை , கண்டுகபநாசம் ,காரளிகம் ,காரி , தாவணி , நித்தியம் ,நித்திரம், பிரகநிகத்திரி , பூட்டுக்கனி ,வியாக்கிரி , சித்திரவாரத்தி ,சுந்தரம்)


முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிற மலர்களையும் சிறுகத்திரிக்காய் வடிவிலான காய்களையும் மஞ்சள் நிறப்பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறுசெடியின் வகை கண்டங்கத்திரி. இதன் தண்டுப் பகுதி முதல் இலைகள் வரை பூனை முட்கள் செடி முழுவதும் இருக்கும். இது கத்திரியின் வகைகளில் ஒன்றாகும். இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவ குணமுடையவை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தரிசு நிலங்களிலும் தானே வளர்கின்றது.


கோழை அகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் பயன்படுகின்றது.


கண்டங்கத்திரி அனைத்து வகை நிலங்களிலும் நன்கு வளரும். முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீல நிற மலர்களையும் சிறு கத்திரிக்காய் வடிவிலான உருண்டையான காய்களையும். மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறு செடியினம்.


பழத்தை  நெருபிலிட்டு வாயில்  புகைப் படிக்க பல் வலி, பல் அரணை தீரும்.
இது ஒரு அனுபவ வைத்தியம்.


 கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகிறது.


ஆஸ்துமாவிற்கு இச்செடியினை பொடித்து உண்ணுவது பழக்கத்தில் உள்ளது. காரணமில்லாத வரட்டு இருமலுக்கும் இது நல்ல மருந்து.


கீல் வாதம், மார்சளி, வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.


வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க சீதளக்காச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும்.


சமூலம் 1 பிடி, ஆடாதொடை 1 பிடி, விஷ்ணுகாந்தி பற்படாகம் இரண்டும் 1 பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரைலிட்டராக்கி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் சாப்பிட புளு சுரம், நிமோனியா சுரம், மண்டை நீர் ஏற்றக் காயச்சல் முதலியன தீரும்.(கண்டங்கத்திரி குடி நீர்)கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வேர் வகைக்கு 40 கிராம் அரிசிதிப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி.வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் ( ஆஸ்துமா ) என்புருக்கி ( க்ஷயம் ) ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் தீரும்.

கண்ணுக்குக் கண்ணாடி அழகு அன்று ; அல்லது மைதீட்டிக் கொள்வது அன்று; துன்பப்படும் மக்களிடம் இரக்கம் காட்டுவதே கண்ணுக்கு அழகு. மதியாதார் தலைவாசலை மிதிப்பதற்குச் செல்லாமைதான் காலுக்கு அழகு; இத்துணை என்று தவறாமல் கணக்கிட்டுக் கூறுதலே கணக்குக்கு அழகாகும்; கேட்பவர்கள் நன்று ! நன்று ! என்று சொல்லிச் சுவைக்கும்படி பாடுவதுதான் பாட்டுக்கு அழகு; அரசனுக்கு அழகு தனது நாட்டு மக்களைத் துன்புறுத்த மாட்டான் என்று சொல்லப்படுவதாகும்.


கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண் டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.


காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.
ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், சீந்தில் கொடி, வகைக்கு சிறிதளவு எடுத்து, 16 பங்கு நீர் சேர்த்து 8ல் 1 பங்கு ஆகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து தினமும் 2-3 முறை கொடுத்து வந்தால் இருமல், கோழைக்கட்டு, காய்ச்சல் தீரும்.
வெண் மணலிலுண்டாகின்ற கண்டங்கத்திரிக்காயால் சிலேத்தும நோய் தீரும். சீதம் கலந்த மலமும் பசியும் உண்டாம்.


சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.


இதன் வேரையும், கண்டங்கத்திரி வேரையும், குடிநீரிட்டு அதில் திப்பிலிப் பொடியை சேர்த்து கொடுத்தால் இருமல் நீங்கும்.

சாலை யோரத்தில் அழகிய வண்ணத்தில் பூ பூத்து ,சிறிய கத்திரிக்காய் போன்ற மூலிகை கண்டால் அதை கவனித்திப்பார்த்து ,பரிச்சிய படுத்திக்கொள்ளுங்கள் .
மருத்துவ பயன்கள்:
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண் டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல் லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும். கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.

குப்பைமேனி (Indian acalypha)

நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. 
குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்க

குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
சொறி, சிரங்கு நீங்க

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.


 குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.

குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.

மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.

குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.

குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.
-

உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம்.

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.

இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும.;
-

இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும்.எங்கும் காணப்படுகிறது.
இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். வசீகரப்படுத்தும்இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். .

  • நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
  • இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.
  • வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.
  • தோல் நோய் நீக்கும் குப்பைமேனி!
  • மருத்துவ குணங்கள்: குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
  • குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
  • குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
  • குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.
  • குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
  • குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.
  • குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து 48 நாள்கள் தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.
  • ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிப்பவை. குணமாக்கும் பண்பையுடைய மிளகின் மற்ற குணநலன்களையும் அறிந்துகொள்வோமா......
  • * ஒரு தேக்கரண்டி மிளகை லேசாக வறுத்து ஒன்றிரண்டாய் தட்டி நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட பசியின்மை தீரும்.
  • * தலைவலி அதிகமாக இருப்பின் உப்பையும், மிளகையும் நன்கு அரைத்து தலையில் பற்றிட குணமாகும்.
  • * ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.
  • * பத்து மிளகினை பொடி செய்து அதனுடன் பாகல் இலைச்சாறும், கரிசலாங்கண்ணி இலைச்சாறும் கலந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.
  • * சந்தனம், மிளகு, கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு எளிதில் குணமாகும்.
  • குப்பை மேனி இலையை மைய அரைத்து கடிவாயில் பத்து போட எலிக் கடியின் விஷம் குறையும்
  • ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.
  • கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து சிரங்குகள் மீது தடவி வர விரைவில் சிரங்கு அகன்றுவிடும். தேள், பூரான், வண்டுக்கடி வீக்கத்தின் மீது இலையை அரைத்துப் பூசிவர விஷம் முறியும்.
  • இலையை கஷாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் அகலும். வேருடன் குப்பை மேனிச் செடியைப் பிடிங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப் பூண்டு, சீரகம் சேர்த்துக் கஷாயம் செய்து பருகிவர குடலிலுள்ள தீமை தரும் பூச்சிகள் அழியும். குப்பை மேனி இலையுடன் மஞ்சள், வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும் புள்ளிகள் மீது தடவி வர சருமம் முன்பு இருந்த இயல்பானதாக இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
  • குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும். குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசி facial செய்தால் முகம் அழகு கொடுக்கும

    1. மருத்துவக் குணங்கள்:
  1. நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
    சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலை ஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும்.
      வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிநீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்.
        இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும்.
          இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும்
            இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
              மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள் நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும். பதினெட்டு வகை எனவும், கூறுவர். அவை இவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து இதில்2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும். மோரில் சாப்பிடவும். புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.
                குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகியவற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.
                  குப்பைமேனிச்சாற்றில் சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு, எலி, முதலியனவற்றில் கடிவாயில் தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.
                    ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இளஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.
                      இந்த இலையின் பொடியை மூக்கில் பொடி போல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.
                        குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி சிரங்கு படை குணமடையும்.
                          எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.


                            குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
                            10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.
                            குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.

                            அகத்தி(Sesbania grandiflora)

                                                                அகத்தி மரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும்.
                             சாளை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக, அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிகப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என அழைக்கப்படுகிறது.
                            • அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் ப்யன் படுகிறது.
                            • அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
                            • வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிற
                            மாகவும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது.
                            உடலின் உட்புற உஷ்ணத்தைத் தணிப்பதால், அகம்+தீ=அகத்தீ என்று அழைக்கப்பட்டதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர்
                            இதன் இலைகள் வாய்ப்புண், தொண்டைப்புண் மற்றும் குடல்புண்களை ஆற்றுகிறது. மேலும், பித்தம், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யும் தன்மையுடையதாக இருப்பதால் இதை தோட்டங்களில் பயிராக வளர்க்கின்றனர்.
                            குடற்புண் குணமாக:

                            அகத்திக்கீரை 2 கைப்பிடி அளவு, வெங்காயம் 50 கிராம், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, மல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை தேவையான அளவில் எடுத்து தட்டி, கீரையுடன் சேர்த்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, பாதியாகச் சுண்டச் செய்து இறக்கிவிடலாம். இந்த அகத்திக்கீரைச் சூப்பை வாரம் மூன்று நாள் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வர, எப்பேர்ப் பட்ட குடற்புண்ணும் குணமாகும்.

                            கண்ணோய்கள் விலக: 

                            கண்ணைப் பற்றிய அத்தனை நோய்களுக் கும் அகத்தியே நன்மருந்தென்றால் மிகையல்ல. இன்றும் கிராமங்களில் "மெட்ராஸ் ஐ' என நாம் குறிப்பிடும் கண்ணோய் வந்தால், அகத்தியே மருந்தாய் பயன்படுத்தப்படுகிறது.

                            பெரும்பாலும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு உடம்பில் உண்டாகும் அதி உஷ்ணமும் அதனைச் சார்ந்து உண்டா கும் தொற்றே (ஒய்ச்ங்ஸ்ரீற்ண்ர்ய்) காரணமாகிறது. கண் சிவந்து, வீங்கி, நீர்வழிந்து, வலியை உண்டாக் கும். இத்தகைய கண்ணோய்க்கு அகத்தி இலையை கண்களில் இரண்டு, மூன்று மணி நேரம் வரை ஒற்றியெடுத்து வர கண் சிவப்பு மாறி, வீக்கம் குறைந்து, வலி மறைந்து கண்ணோய் விலகும்.

                            கால்வெடிப்புகள் மறைய:

                            அகத்திக்கீரையையும், மருதாணி இலை யையும் சமஅளவில் எடுத்து விழுதாய் அரைத்து கால்வெடிப்புகளில் பற்றுப்போட வெடிப்புகள் மறையும். இதேபோல் அகத்திக்கீரைச் சாற்றை சேற்றுப்புண்களில் தடவி வர புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாய் அரைத்துப் பூசி வர தேமல் முற்றிலுமாய் மறையும்.

                            சோரியாஸிஸ் குணமாக:

                            சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதை என் அனுபவத்தில் கண்டி ருக்கிறேன்.

                            அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.

                            சிறுநீர் பிரிய:

                            கிராமப்புறத்தில் அகத்திக்கீரைக்கு தனி மதிப்பும், மரியாதையும் இருப்பதை இன்றும் காணலாம். உடல் உஷ்ணம் காரணமாக உண்டாகும் நீர்ச்சுருக்கு, மாரடைப்பு, நீர் எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து வருதல் போன்ற குறைபாடுகளுக்கு மிக எளிய மருத்துவ முறையை கிராம மக்கள் கையாளுகின்றனர்.

                            அகத்திக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து, தண்ணீர் கணிசமாய் ஊற்றி அவித்து, நீரை வடிகட்டி ஒரு டம்ளர் எடுத்து, அத்துடன் பழைய சாதத்துடன் கலந்த நீர் ஆகாரத்தையும் எடுத்து ஒன்றாய்க் கலந்து அருந்துகிறார்கள். மேற்சொன்ன நோய்கள் எல்லாம் உடனே சரியாகி விடுகிறது.

                            தலைவலி தீர

                            அகத்தி இலைச்சாற்றை மூக்கில் ஓரிரு துளிவிட, தலைவலி உடனே தீரும். அகத்திக்கீரையுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்து தலை உச்சியில் இருபது நிமிட நேரம் வைத்துவர, தலைவலி, தலைபாரம் போன்ற குறைபாடுகளும் விலகும்.

                            அகத்திப் பூவை மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, மல்லி இலை சேர்த்து கசாயமிட்டுச் சாப்பிட்டால் மூக்கிலிருந்து உண்டாகும் ரத்த ஒழுக்கு உடனே விலகும்.

                            அத்திமரப்பட்டையை முறைப்படி கஷாய மிட்டுச் சாப்பிட்டுவர, அம்மைக் காய்ச்சல், விஷக்காய்ச்சல், பெரியம்மை போன்றவை குணமாகும். மேலும் தண்ணீர் தாகம், கை, கால், உடல் எரிச்சல், ஆண் உறுப்பு வேக்காடு, தொடை இடுக்குகளில் உண்டாகும் வேக்காடு போன்றவை விலகும்.

                            மருந்தை முறிக்கும் அகத்தி;

                            அகத்திக்கீரைக்கு மருந்தை முறிக்கும் தன்மை உள்ளதாக சித்தர்கள் குறிப்பிடு கின்றனர். எனவே நாள்பட்ட நோய்களுக்குத் தொடர்ந்து மருந்து எடுத்து வருபவர்கள் இதனைச் சமைத்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். குடற்புண்ணால் பாதிக்கப்பட்ட வர்கள், வயிற்று நோய் உள்ளவர்கள் இதனை மிகக் கவனமாய் சமைத்துச் சாப்பிட வேண்டும். தத்தமது செரிப்புத் திறனுக்கு ஏற்ற வகையில் அகத்திக்கீரையைச் சாப்பிடலாம்.

                            அடிக்கடி இந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் ரத்தத்தைக் கேடுறச் செய்து, உடலில் சொறி, சிரங்கு நமைச்சலை உண்டாக்கிவிடும். வயிற்றுக்கடுப்பு, பேதியும் உண்டாகலாம். அகத்திக்கீரை உள்மருந்தாய் உபயோகிப்பதைவிட வெளிமருந்தாய் உபயோகிக்கும் பொழுது வியத்தகு பலனைத் தருகிறது.



                            அகத்திக்கீரை, நாம் உண்ணும் உணவு நன்றாகக் ஜீரணிக் உதவுகிறது. நீர்க்கோவைக் காரணமாகத் தோன்றும் தும்மல் போன்று நோய்களுக்கு அகத்திக் கீரையின் சாற்றையும், அகத்திப் பூவின் சாற்றையும் சம அளவு கலந்து மூக்கில் இரண்டொரு சொட்டு விட்டுவந்தால் நோய் நீங்கும். பொதுவாக நீர்கோவைக்கு அகத்தி இலைச்சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து உள்ளுக்குச் சாப்பீட நல்ல குணம் கிடைக்கும். அடிபட்டு கன்றிப்போன வீக்கங்களுக்கு அகத்திக் கீரையை அரைத்துச் சுடவைத்து பற்றாகப் போட்டால் சிறந்த குணம் கிடைக்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி, அனல் ஆவிபிடிக்கக் கடுமையான தலைவலி நீங்கும்.

                            மலோரியா போன்ற முறைக் காய்ச்சல்களுக்கு அகத்தி இலைச் சாற்றை ஒரு நாளைக்கு ஒருதடவை இரண்டொரு துளிகள் மூக்கில்விட காய்ச்சலின் வேகம் குறைந்து குணமடையும்.

                            சரி யாக பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நன்கு பால் சுரக்கும். மூளை தொடர்பான பிணிகள் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை உண்பதன் மூலம் நல்ல பயன் பெறலாம்.

                            அகத்திக் கீரையிலிருந்து ஒரு வகைத் தைலம் எடுக்கப்படுகிறது. இந்த அகத்தித் தைலத்தைத் தேய்ப்பதினால் கண் குளிர்ச்சி அடையும்; பார்வை தெளிவாகும்; மயிர் செழித்து வளரும், அகத்திப் பூவின் சாற்றைக் கண் பார்வைக் குறைவை நீக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

                            அகத்தியின் பட்டையைப் பொ¢யம்மை எனப்படும் "லைசூ¡¢" நோய் காணப்பட்டால் அதன் ஆரம்ப காலத்தில் கொடுக்கலாம். அம்மை நோயின் வேகத்தைத் தணிப்பதற்கு விதிப்படி குடிநீர் செய்து கொடுக்கலாம்.

                            அகத்தி வேர் ஓர் சிறந்த மருந்தாக விளங்குகிறது. அகத்தி வேர் பட்டை விதிப்படி குடிநீர் செய்து உட்கொள்ள மேகம், தாகம், மெய் எ¡¢வு, கை எ¡¢வு, ஆண் குறியின் உள் எ¡¢வு, ஐம்பொறிகளை சேர்ந்த எ¡¢வு ஆகியவைகள் நீங்கும்.

                            இவ்வளவு சிறந்த மருத்துவப் பயனுடைய இக் கீரையை அடிக்கடி உண்பதினாலோ நாள் தவறாமல் சேர்த்துக் கொள்வதினாலோ நன்மைக்குப் பதில் தீமையே அதிகமாகும். இவ்வாறு உண்பதினால் உடலிலுள்ள நல்ல இரத்தத்தையெல்லாம் முறித்து வாய்வைப் பெருக்கிச் சோகை, பாண்டு முதலிய நோய்களை உண்டாக்கும்.

                            அன்றியும் அகத்திக் கீரையை அதிகம் உண்டால் கடுவனும் வாயுவும் உண்டாகும். அகத்திக் கீரை பத்தியத்தை முறிக்க வல்லது. ஆதலால் மருந்துண்ணும் காலங்களிலோ பத்திய மிருக்கும் போதோ அகத்திக் கீரையை உண்ணக் கூடாது.

                            ஆகையினால் இக் கீரையை நாள்தோறுமின்றி -வேண்டும் பொழுது கறியாகச் சமைத்துண்பதே நல்லது. பொதுவாக வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்கட்கொரு முறையோ இக்கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வது நல்லது. அகத்திமரம் மிளகு, வெற்றிலை முதலிய கொடிகளுக்குப் படரும் கொழு கொம்பிற்காக பயி¡¢டுகிறார்கள். இது கொழு கொம்பாகப் பயன்படுவதோடு அப்பயிர்களுக்கு நிழல் தரும் மரமாகவும் உதவுகிறது

                            அகத்திக் கீரையை உண்பவருக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்துக்கு ஒருமுறையேனும் தவறாமல் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் தேகத்தில் உஷ்ணம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும். மலம், சிறுநீர் தாரளமாக கழியும். குடல் புண் ஆற்றும்.
                            அகத்திக்கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிட நோய்கள் அகலும்.



                            வெயிலில் சுற்றி அலைபவர்கள், தேயிலை, காப்பி போன்ற பானங்களைப் பருகிப் பித்தம் அதிகப்பட்டவர்கள், மலச்சிக்கல் உள்ளோர் அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை உண்பது நல்லது 


                            இடு மருந்துகளின் வேகம் தணிய வயிற்றைவிட்டு இடு மருந்துகள் கழியவும் இந்த அகத்தி மிகவும் பயன்படுவதாக நம்பப்படுகிறது.
                            சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் இக்கீரையில் அதிகம் இருப்பதைக் காணலாம். 93 கலோரி சக்தியைக் கொடுக்க வல்லது. நூறு கிராம் கீரையில் 1,130 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 80 மில்லிகிராம் மணிச்சத்தும் 3.9 மில்லிகிராம் இரும்புச் சத்தும் அடங்கி இருக்கின்றன.


                            இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். உயிர் சத்தான வைட்டமின் A, நூறு கிராம் கீரையில் 9, 000 உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லிகிராமிலும், ரைபோ பிளேவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் C 169 மில்லி கிராம் இருக்கின்றன.
                            அகத்தியின் இளம்பூவும், மொட்டுக்களும் உணவாகச் சமைக்க உதவுகின்றன. பொதுவாக இப்பூவை தனியாகச் சமைத்து உண்பதில்லை. ஆனால் வடநாட்டில் பூவையே தனியாகச் சமைத்துண்கின்றனர்.

                            இதன் காயையும் கறி சமைத்து உண்ணலாம். அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன.
                            அகத்திக் கீரை குடலில் தேங்கும் மலம் மற்றும் நிணநீர் ஆகிய அசுத்தங்களைச் சுத்தம் செய்யும் ஆற்றல் பெற்றது மலர்ச்சிக்கலை நீக்கி மலத்தை உடைத்து வெளியேற்றும் தன்மை பெற்றது.
                            அகத்திக் கீரை பித்தச் சூட்டையும் தணிக்க வல்லது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். 
                            தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும். இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையைது.

                            அகத்தியை அகத்தீஸ்வரனாகவே காணுங் கள். கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அகத்தீஸ்வரன் மற்றும் அமுதவல்லித் தாயாரை ஒருமுறை தரிசித்து வாருங்கள்.

                            800 ஆண்டுகள் பழமையான இவ்வாலயம் நாகர்கோவிலிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அகத்திய முனிவர் தன் மனைவி லோகமுத்திரையுடன் இந்த ஆலயத்துக்கு வந்து எம்பெருமானைத் தரிசித்து பாக்கியம் பெற்றதை புராணங்கள் 
                            கூறுகின்றன.

                            இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.

                            காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.

                            சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

                            குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். 

                            அகத்தியிலையை அவித்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.

                            அகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் சம அளவாக எடுத்து அரைத்து வாதவீக்கத்திற்கும், கீல் வாயுக்களுக்கும் பற்றிட குணமாகும். இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.

                            பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும். 

                            அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.

                            இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.

                            அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

                            இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.

                            அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும். 

                            அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும். 

                            இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும். 

                            பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.

                            அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும். 

                            அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும். 

                            அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது. 

                            வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும். 

                            அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும். 

                            இக்கீரை பித்த நோயை நீக்கும்

                            மருத்துவப் பயன்கள்;

                            அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும்.

                            தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும்.

                            இது மருந்து முறிவு கீரையாகும். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.

                            அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. அளவு இருவேளை குடித்து வர காய்ச்சல், தாகம், கைகால் எரிச்சல், மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.

                            அகத்தி இலைச்சாறும், நல்லெண்ணெய்யும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமாகக் காய்ச்சி வடிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக்கிழங்கு, விளாமிச்ச வேர் வகைக்கு 20 கிராம் பொடி செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்துவரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.

                            சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடவும் செய்யும்.

                            ஆவாரை

                            இதை யாரும் பயிர் செய்வது இல்லை.சாலை ஓரங்களிலும் காடுகளிலும் தானாகவே முளைத்துக் கிடக்கும்.இரண்டு அல்லது மூன்று அடி உயரத்திற்கு மேல் வளர்வது இல்லை.இதன் பூக்கள் மஞ்சள் நிறம் கொண்டவை.இதன் தண்டு துவர்ப்புச் சுவை கொண்டது.இதன் பூக்களைப் பறித்து சமைப்பது உண்டு.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என்பாரும் உண்டு."ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டீரோ" என்ற சொல்வழக்கு இதன் பெருமையை உணர்த்தும்.
                            ஆவாரை செடியானது சர்வ பிர மேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.
                            ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்கறை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.

                            இதன் முக்கிய வேதியப் பொருட்கள் -: மர்பட்டையில் டானின்கள் உள்ளன. பீட்டா ஸிஸ்டீரால் மற்றும் கெம்ப்பெரால் பூக்களில் உள்ளன. இலைகளில் 3 வகை கீட்டோ ஆல்கஹால்களும் சாமோடிக்கும் உள்ளன. இது தவிர கொரடென்சிடின் மற்றும் ஆரிகுளமாசிடின் உள்ளன. 



                            மதிப்புத்தேரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூ பூத்து மண்டிக்கிடக்கிறது.  இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள் ,பூ ,கிளைகள் ,காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ்சக சூரணம் தயாரித்து அதை தொடர்ந்து உபயோகித்தால் சர்க்கரை வியாதி குணமாகிறது.ö

                            இதன் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம் .
                            இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் .இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன் படுத்தலாம் .அதிக பயன் தரும் .

                            உடலில் தேய்த்து குளித்தால் சிலர் மேனியில் வரும் மேனி வாடை போய் விடும் .
                            சிறந்த தோல் காப்பான் .தொடர்ந்து பூசி குளித்து  வர உடல் தங்கம் போல் ஆகும் .
                            இது ஒரு மொத்த  மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்,.
                            நமது உடலில் இருக்கும் பல மில்லியன் செல்களிலும் சேரும் கழிவுகளை நீக்க முடியாமல் போகும் போதுதான் வியாதிகள் வருகின்றன என்பது நமது கிழை  நாட்டு வைத்திய தத்துவும் .

                            அந்த செல்களில் இருக்கும் ப்ரீ ராடிகால்சை நீக்க நமது பல மூலிகைகள் உதவுகின்றன ..
                            இது வெற்றியடைந்தால் செல்களுக்கு அழிவில்லை .பின் என்றும் இளமைதான் .
                            இவைகளையே காயகல்ப்ப மூளிகள் என நமது சித்தர்கள் கூறுகிறார்கள் .எனவே அவர்கள் கூறும் காயபலப்ப மூலிகைகளை மட்டுமாவது தொடர்ந்து எதோ ஒரு தகுந்த முறையில் உபயோகித்தால் நாம் முதுமையை வென்று ,நோயின் பிடியில் இருந்து தப்பி வாழலாம் 

                            அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மது மேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் இவை போம். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி லேகியமாகவும், சூரணமாகவும் கியாழமாகவும் கொடுப்பதுண்டு.

                            பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

                            ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

                            ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

                            20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்



                            இது சருமவியாதி , மூகத்தினால் வரும் வியாதிகள் அனைத்தயும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது .

                            ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.

                            பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம்.

                            இதன் பூவை இனிப்புடன் கிளறி ஹாலவா செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும். சொப்பணஸ்கலிதம் நிற்கும். பெரும்பாடு என்னும் நோய் போகும். நீரில் சர்க்கரை குறையும்
                            .

                            அரிவாள்மனை பூண்டு

                            அரிவாள்மனை பூண்டு
                            அரிவாள்மனைப் பூண்டின் இலையை கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய ரத்தப்பெருக்கு உடனே நின்றுவிடும். அரிவாள்மனைப் பூண்டின் இலை, அதேயளவு குப்பை மேனி இலை கைப்பிடியளவு, பூண்டுப் பல் 2, மிளகு, 3 சேர்த்து அரைத்த புன்னக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் வைத்துக் கட்ட நஞ்சு முறியும் (உப்பு, புளி நீக்கவும்)
                            அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை சம அளவு எடுத்து அரைத்து புழுவெட்டின் மீது தடவி வர விரைவில் மாறும். இதன் இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மீது தடவி வர குணமாகும். மேலும், அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை, எலும்பு ஒட்டி இலை வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்துப் பற்றிட காயங்களில் உண்டான வீக்கம் விரைவில் குணமாகும்.
                            அரிவாள்மனைப் பூண்டின் இலை, குப்பைமேனி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வர விரைவில் குணமாகும்.
                            அரிவாள் மூக்குப் பச்சிலை 
                            நுனிப்பற்கள் ஆப்பு வடிவ இலைகளை உடைய குறுஞ்செடி இனம் 
                            அரிவாள்மனைப் பூண்டு. இலையே மருத்துவக் குணம் உடையது. 
                            இரத்தக் கசிவைத் தடுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. மாரிக்காலத்தில் தமிழகம் எங்கும் சாலை ஓரத்தில் தானே வளரக் கூடியது. 


                            மருத்துவக் குணங்கள்:

                            அரிவாள்மனைப் பூண்டின் இலையை கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய ரத்தப்பெருக்கு உடனே நின்றுவிடும். அரிவாள்மனைப் பூண்டின் இலை, அதேயளவு குப்பை மேனி இலை கைப்பிடியளவு, பூண்டுப் பல் 2, மிளகு, 3 சேர்த்து அரைத்த புன்னக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் வைத்துக் கட்ட நஞ்சு முறியும் (உப்பு, புளி நீக்கவும்)

                            அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை சம அளவு எடுத்து அரைத்து புழுவெட்டின் மீது தடவி வர விரைவில் மாறும். இதன் இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மீது தடவி வர குணமாகும். மேலும், அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை, எலும்பு ஒட்டி இலை வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்துப் பற்றிட காயங்களில் உண்டான வீக்கம் விரைவில் குணமாகும்.

                            அரிவாள்மனைப் பூண்டின் இலை, குப்பைமேனி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வர விரைவில் குணமாகும்.

                            அரளி.அறலி பூ,வெள்ளரளிப் பூக்கள்

                            அரளி நச்சுத்த் தன்மை வாய்ந்த தாவரம். இதன் மலர்மாலைகளைக் கோயில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவர். மலர்கள் காட்சிக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளன.வெள்ளரளிப் பூக்கள்கரித்துண்டு அரளி விஷத்திற்கு ஓரளவுக்கு ஏற்ற மருந்துஎன்று சொல்கிறார்கள். அதாவது யாராவது அரளியை அறைத்துக் குடித்துவிட்டால் உடனடியாக அவருக்கு அடுப்பில் அணைத்த கரியைத் தின்னக் கொடுக்கலாம்.   வெறும் கரியைத்  தின்பதன் மூலம் 70% சாவுகள் தவிர்க்கப்படலாம் என்று  தெரிகிறது.  இப்படியான முட்டாள்தனமான திட்டங்களால் ஒருபோதும் பயனிருக்காது. (ஒரு அரளி மரம் 500-2000 காய்கள் வரைத் தரக்கூடும். எல்லா மரங்களையும் அழித்துவிட்டு ஒன்றை விட்டால் கூட அதன் விஷத்தினால் ஒரு கிராமத்தையே அழிக்கலாம்). இந்தியா இலங்கையில் இருப்பவர்கள் இயன்ற அளவு மக்களிடம் அரளியின் விஷத்தைப் பற்றிச் சொல்லுங்கள். கூடவே முதலுதவியாக அடுப்பணைத்த கரியைப் பயன்படுத்தலாம் என்றும் சொல்லுங்கள். (குறிப்பாகச் சொல்லப்போனால் ஆராய்ச்சிக் கட்டுரை Activated Charcoal என்றுதான் சொல்கிறது.   இது கரியில் ஆக்ஜிஸனைப் பாய்ச்சப்படுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.  இந்தவகை கார்பனுக்கு உறிஞ்சு திறன் அதிகம். ஆனால் எடை குறைவாக உள்ள விறகு அணைத்த கரியும் Activated Charchoal-ஐப் போலவே செயல்படக்கூடும்.)

                            அம்மான் பச்சரி


                            1. மருத்துவக் குணங்கள்: இந்த மூலிகையின் தண்டை கிள்ளினால் ஒரு வித பால் வரும் அது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.
                            2. அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்  மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.  சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.
                            3. தாய்ப்பால் சில தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு சுரக்காமல் இருக்கும். போதுமான அளவு சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
                            4. சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும். அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும் .அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும் அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.
                            5. ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. இலை, தண்டு, பால், பூ ஆகியவை பயன்தரும்.
                            6. இதன் பாலை நக சுற்றிக்கு தடவ குணமாகும்.
                            7. சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம் ஆகியவை போகும். சுக்கில தாது விருத்தியாகும். இதை வெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.  இதன் பாலை வைத்துக்கொண்டு ஒரு வித்தைக் கூட காட்டலாம் ஒரு காகித துண்டில் அம்மான் பச்சரிசி பாலால் ஏதாவது ஓர் உருவம் வரைந்து உலர்த்தி பின் நண்பர்களிடம் காட்டவும்  பின் அனைவரும் அது வெறும்  காகிதம்  தான்  எனக்  கூறியதும்  அதைத்  தீயில் கொளுத்திக் காட்ட வரைந்த உருவம் தோன்றும்..