COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

பசியுண்டாக...



சுக்கு: ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் நீரில் போட்டு பாதியாகக் காய்ச்சி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து இருவேளை சாப்பிட்டுவர வாயு அகன்று பசியுண்டாகும். தலைநோய், சீதளம், வாதக்குன்மம், விலாக்குத்து, வயித்துக்குத்து, நீர் பீனிசம், நீர் ஏற்றம், நீர் கோர்வை, கீல் பிடிப்பு, ஆசன நோய், பல் வலி, காது குத்தல், சுவாச ரோகம் ஆகியவை குணமாகும்.

சுக்கு 10 கிராம், மிளகு (Pepper) 6, சீரகம் (Cumin) 35, பூண்டுப் பல் 3, ஓமம் 10 கிராம், உப்பு 4 கல் ஓட்டில் வறுத்து 5 கிராம் வேப்பங்கொழுந்துடன் மைய அரைத்து 50 மில்லி வெந்நீரில் கலந்து வடிகட்டி குழந்தைகளுக்கு 1/2 சங்கு அளவு தாய்ப்பாலில் கலந்து 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறு அனைத்தும் குணமாகும்.

சுக்கு (Dry Ginger), கடுக்காய்ப் பிஞ்சு, ஆவாரை வகைக்கு 10 கிராம் எடுத்து அரைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராக காய்ச்சி, வடிகட்டி 10 கிராம் பேதி உப்பு கலந்து குடிக்க ஆயாசமின்றி பேதியாகும். பேதி அதிகம் காணப்பட்டால் மோர் சாப்பிட நின்று விடும்.

சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தூள், இந்துப்பு சமஅளவாக எடுத்துப் பொடி செய்து பல்பொடியாகப் பயன்படுத்த பல் ஆட்டம், பல் சொத்தை, ரத்தக் கசிவு குணமாகும்.

4 கருத்துகள்:

Sulosundar சொன்னது…

அருமை

rajendran சொன்னது…

உங்கள் வலைப்பூ பணி தொடர வாழத்துக்கள். பல நூல்களையும், அனுபவங்களையும் ஆய்ந்தறிந்து எழுதியமைக்கு எவ்வளவு பாரட்டினாலும் தகும். விலைமதிப்பற்ற தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
அழ.இராசேந்திரன்.

rajendran சொன்னது…

பேதி உப்பு எப்ஸம் உப்புதானா? விளக்கவும்.
நன்றி

இரமணி சொன்னது…

ஆம். பேதி உப்பும் எப்சம் உப்பும் ஒன்றுதான்.