பற்பாடகம் என்பதும் மூலிகையே. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி நன்றாக சுத்தி செய்து அல்லது தண்ணீரில் நன்கு கழுகி 5 கிராம் அளவு எடுத்து அதை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி இரு வேளையும் கொடுத்து வர குழந்தைகளுக்கு காணும் சீதபேதி, மற்றும் சுரம் ஆகியவை கட்டுக்குள் வரும். இதை பெரியவர்களும் சாப்பிட நோய்கள் குணமாகும்.
பற்பாடகம் இலையைப் பாலில் அரைத்து தலையில் தடவி குளித்து வரக் கண்ணொளி மிகும். உடல் நாற்றம், சூடு தணியும்.
இனம்தெரியாத எவ்வகைக் கய்ச்சலாயினும் கைப்பிடி அளவு பற்பாடகம் எடுத்து தேக்கரண்டியளவு மிளகு, சுக்கு, அதிமதுரம், வேப்பங்கொழுந்து இடித்துப் போட்டு தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி அதை காலை, மாலை கொடுத்துவரக் குணமாகும். இவ்விதம் மூன்றுநாள் கொடுக்க வேண்டும்.
கண்டங்கத்திரி இலை, ஆடாதொடை, விஷ்ணுகாந்தி, பற்பாடகம் , சீரகம், சுக்கு ஆகியவைகளை சேர்த்து காய்ச்சி குடித்தால் தலையில் ஏற்படும் நீர் ஏற்றம் குறையும்.
தேவையான அளவு பற்பாடகத்துடன் சிறிது பச்சைப் பயிறும் சேர்த்து அரைத்துத் தலைக்குத் தேய்த்து இளம் வெந்நீரில் குளித்துவர உடல் குளிர்ந்து சமநிலைக்கு வரும்.
3 கருத்துகள்:
நீங்கள் வைத்திருக்கும் படம் பொடுதலை மூலிகை
நன்றி
இல்லை
கருத்துரையிடுக