சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் .கற்பகத் தரு என்றே அழைக்கின்றனர். முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல்
முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக்
கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.
மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு
உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா
வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். முருங்கையில் காட்டு
முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு. இதில் காட்டு
முருங்கை இலை மிகவும் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவக்
குணங்கள் மிக மிக அதிகம்.
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ
குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால்
உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு,
கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக
வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம்
என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில்
மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.
பொதுவாக முருங்கையின் பூ
மிகவும் சக்தி வாய்ந்தது. முருங்கைப் பூ சாப்பிட்டு வந்தால் ஆண்மைச் சக்தி
அதிகரிக்கும். விந்தணு பெருகும். விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது
என்று சொல்பவர்கள் சாப்பிட்டால் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும். நாய்க்
கடி விஷத்தைப் போக்கவும் முருங்கை பயன்படும். கிட்னி தொடர்பான
பிரச்சனைகளுக்கும் முருங்கை இலை முக்கியத்துவம் வாய்ந்தது. இரத்தக்கட்டு
வீக்கத்திற்கு முருங்கை இலையை அரைத்துப் பூசினால் நீங்கும்.
முருங்கைப் பூ உடல் சூட்டைக் குறைக்கும், தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும். சளி தொந்தரவையெல்லாம் முருங்கைப் பூ நீக்கும். கண் பார்வைக்கு நல்லது. முருங்கை மரத்தில் இருக்கும் பிசினை பதப்படுத்தி சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சிகளெல்லாம் வெளியேறிவிடும். அதனால் வீட்டில் முருங்கையை வளர்த்தால் எல்லா விதத்திலும் நல்லது

இது ஒரு சத்துள்ள
காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால்
சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.
எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை
அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ
அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு
அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை
இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து
சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும்
நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலைகளில்
இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை
நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல
ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப்
பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக்
கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
முருங்கைக்
காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய்
சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும்
இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு
மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை
காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன.
வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல்,
மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து
சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு
பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கை
மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது.
பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று
விடும்.
இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட
டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம்
வராமல் தள்ளிப்போகும்.
மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி
செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்
என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை
லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு
அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
முருங்கை
இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு
தந்தால்,இரத்தசுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில்
கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.
கர்ப்பையின்
மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு
தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்
ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப்
நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப்
போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை
இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.
முருங்கை
இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி
இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு
கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம்
திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து
வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து
சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி
குணப்படும்.
வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயம்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்
முருங்கைப்பூ ஒரு கைப்பிடி
அளவு எடுத்து சுத்தப் படுத்தி, அதை 250 மில்லி பசும்பாலில் கொதிக்க வைத்து,
அதனுடன் கற்கண்டு கூட்டி, ஒரு மண்டலம் குடித்து வர ஆண்மை பெருகும்.
முருங்கைப் பூ
நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில்
வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி
பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக
இருக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து
அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள்
புத்துணர்வு பெறும். அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம்
சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். இல்லற உறவில் நாட்டம் கொள்ளச்
செய்யும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்
படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும்.
முருங்கைப் பிஞ்சு
முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு
வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த
சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம்
கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி
செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.
முருங்கைக் காய்
அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது. உணவில் சுவையை அதிகரிக்கக்
கூடியது. அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்தான்“ முருங்கைக் காய்.
மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும்.
விதை
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி
பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.
விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல்
வலுப்பெறும். உடல் சூடு தணியும்.
இலைக்காம்பு
சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு
விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.
முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை,
சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப்
செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள்
வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல்
வன்மையைத் தரக்கூடியது.
முருங்கைப் பட்டை
முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.
முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும்.
முருங்கை வேர்
வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும்.
நல்ல பச்சையாக உள்ள முருங்கைக்காயை எடுத்துக் கொண்டு அதனை சாறாக்கி, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.
சிலருக்கு கழுத்து வலி ஒரு பிரச்சனையாக இருந்து வரும். இவர்கள்
தினந்தோறும், முருங்கை கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டால் நாளடைவில்
கழுத்து வலி குறையும்.
முருங்கை
வேரை நீர் விடாமல் நன்கு அரைத்து, பசும்பாலில் கலந்து காய்ச்சி, 2 வேளை
குடித்து வரவும் அவ்வாறு செய்துவர 4 நாட்களில் ‘ஹிஸ்டிரியா’ எனப்படும்
மனச்சிதைவு நோய் கட்டுப்படும்.
முருங்கைப்
பூவுடன் சமளவு துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து பகலில்
சாப்பிட்டு வர, உடலில் வலு ஏற்படும். ரத்தம் அதிகரிக்கும். பெருப்பாடு
குணமாகும்.
முருங்கைக்
கீரையில் வைட்டமின் ஏ,பி, சி, புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து
உள்ளது. ‘வெந்து கெட்டது முருங்கை’ என்பது பழமொழி. எனவே இதை அதிகம்
வேகவிடாமல், பக்குவத்துடன் சமைக்க வேண்டும்.
முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என
இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக்
கோளாறுகள் நீங்கும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
ஞாபக சக்தியைத் தூண்ட:
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.
இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் குறைய:
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும்.

பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு:
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்
பெண்களுக்கு:
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
தாது புஷ்டிக்கு:
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
மேலும் இப்பூவின் சில மருத்துவ குணங்கள்
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.
முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும் .
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி பொடியாக்க காலையில் கஷாயம்-செய்து அதனுடன் பனைவெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் , நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும் , கண் பார்வை குறைபாடு நீங்கும்.
கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
"ஞாபக மறதி நோய்" மிக கொடிய நோயாகும் .இந்த ஞாபக மறதி நோயைப் போக்கி நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி முருங்கை பூவிற்கு உண்டு.
முருங்கைப்பூவை நன்றாக அரைத்து பாலில்-கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்க்கண்டை சேர்த்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் நமது நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கை பூவை நிழலில் உலரவைத்து பொடியாக்கி தினமும் கஷாயம் செய்து காலை மாலை என்று இரண்டு வேலையும் அருந்தி வந்தால் உடலில் இருக்கும் பித்தம் குறைந்து, உடலின் அசதி நீங்கி உடல் நிலை சீரடையும் .
முருங்கை பூவை நன்றாக அரைத்து பசும் பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டை கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். நீர்த்துப்போன விந்து கெட்டியாகும் .

ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
வாழை பழததை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது
இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது .எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.
தவசு
முருங்கை....
தவசு
முருங்கை எல்லா வழமான நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் வளரக்கூடியது.
தென்இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. எதிர் அடுக்கில் சிறு இலைகளை இரு
பக்கமும் கொண்டிருக்கும். இலைகளின் இடுக்குகளில் சிறு மலர்கள் தென்படும்.
தவசு முருங்கை சுமார் ஆறு அடி உயரம் வரை வளரும். இந்த இலைகளின் சுவை
துவர்ப்பாக இருக்கும். இதன் தன்மை வெப்பம், கார்ப்புப் பிரிவு. இதன்
செய்கை கோழையகற்றியாகவும், கரஹபகாரியாகவும் செயல்படும். குச்சிகள் மூலம்
கட்டிங்காகவும், விதைகள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.
மருத்துவப்
பயன்கள் :- தவசு முருங்கையினால் மூக்கு நீர்பாய்தல், உண்ணாக்கு நோய்,
ஐயம், இரைப்பு, பொடியிருமல் நீங்கும். கோழையகற்றும் குணமுடையது.
"தவசு முருங் கைத்தழைக்குத் தையலே கேளாய்
அவசியம் பீநசம்உண் ணாக்கும்-உவசர்க்க
ஐயஞ்சு வாசகபம் அண்டாது குத்திருமல்
வையம் விடுத்தேகும் வழுத்து"
இலை இரசத்தை வேளைக்கு ஓர் உச்சிக் கரண்டி அளவு உட்கொள்ள பிள்ளை பெற்ற அழுக்கு வெளிப்படும்.
இதன் சாற்றில் வெள்ளியைப் பழுக்க க்காய்ச்சி தோய்த்து வர கவட்டையாகும். (பக்குவம்)
இலைச்சாற்றை 15 மி.லி. காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், சளி, இரைப்பிருமல், பொடி இருமல் ஆகியவை தீரும்.
செடியை
முழுமையாக உலர்த்திப் பொடித்துச் சமனளவு சர்கரைப்பொடி கலந்து அரைத்
தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டு வர சளி, இருமல் ஆகியவை தீரும்.
அடிபட்ட வீக்கம் காயங்களுக்கு இலையை வதக்கிக் கட்ட உடன் வேதனை குறைந்து குணமாகும்.
1 கருத்து:
முருங்கைக் கீரை உண்பதால், தாதுபலம் பெருகும் முருங்கைக் கீரையின் மருத்துவ குணம்
கருத்துரையிடுக