COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

சக்கரவர்த்திக் கீரை



கீரைகளில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. நமக்குப் பிடித்தமான கீரைகளை நாளுக்கொரு வகையாகப் பயன்படுத்தலாம். கீரைகளில் வைட்டமின் A, B, C சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து ஆகியவைகளும் அதிகமாகக் கிடைக்கின்றன. இந்தச் சத்துக்களை மருந்துக் கடைகளில் அதிக விலை கொடுத்து கசப்பான மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதைவிட, மிக மலிவாகக் கீரைகளை வாங்கிச் சுவையோடு சாப்பிடலாம்.


கீரைகளைச் சாப்பிடுவதை தாழ்வாகக் கருதும் நிலை மாற வேண்டும். தினசா¢ உணவில் கீரைகள் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். வசதிகள் பல வாய்க்கப் பெற்றுள்ள மேலை நாடுகளில் கூட தினசா¢ உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ககின்றார்கள். அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று கீரைகளைச் சமைக்காமல் பச்சையாகவே சாப்பிடுகின்றார்கள். கீரைகளைச் சமைக்கும்போது வைட்டமின் சத்துக்கள் விரயமாகி பழகி விட்டார்கள். நம் நாட்டிலுள்ள உணவுப் பற்றாக் குறையையும் அறவே ஒழிக்க கீரைகளை அதிகமாகப் பயிடுவதும், கீரையை தினசா உணவில் சேர்த்துக் கொள்வதும்தான் வழியாகும்.


கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில்தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக நமக்கு எளிதில் கிடைக்கும் ஒரு கிலோ முளைக் கீரையில் உள்ள A வைட்டமின் சத்தைப் பெறுவதற்குச் சுமார் 70 கிலோ வாழைப்பழம் சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அகத்திக் கீரையில் உள்ள சுண்ணாம்புச் சத்தைப் பெற வேண்டுமானால் 113 கிலோ ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும். இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசா¢ சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.


கீரையாகப் பயன்படுத்தப்படும் செடிகளுள் சக்கரவர்த்திக் கீரையும் ஒன்று. இந்த கீரைக்குக் கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. 


இது விளை நிலங்களையொட்டி தானாக வளரக்கூடியது. தமிழகத்தில் சில பகுதிகளில் இதைப் பயிரிடவும் செய்கின்றனர். சக்கரவர்த்திக் கீரை செங்குத்தாக சுமார் மூன்றடி உயரம் வரை வளரும். இது பசுமை கலந்த செந்நிறத் தண்டுகளையும், கருஞ்சிவப்பு நிறத் தழைகளையும் உடையது.


சக்கரவர்த்திக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. இக்கீரையை நெய் விட்டு வதக்கிப் பருப்புடன் சேர்த்து உண்ணலாம். பருப்பும் தேங்காய்த் துருவலும் சேர்த்துப் பொரியலும் செய்யலாம். இதனைக் குழம்பாக வைத்தும் உண்ணலாம்.


இந்தக் கீரையுடன் புளி, மிளகாய் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சூப் தயாரித்தும் பருகலாம்.


சக்கரவர்த்திக் கீரை நாவிற்குச் சுவையூட்டி பசியைத் தூண்ட வல்லது. கிராணி எனப்படும் வயிற்றுப் பே¡க்கு நோய்க்கு இந்தக் கீரை சிறந்த மருந்தாகும். சிறுநீர் கழிக்க முடியாமல் வயிறு உப்பி அவதிப்படுவோர் இந்தக் கீரையைப் பயன்படுத்தி குணம் பெறலாம். இது மலத்தை இளக்கும்.பருப்புடன் இக்கீரையைக் கடைந்து சாதத்ததுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, உடலின் வெப்பந்தணிந்து உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். பசியைத் தூண்டும். தாது விருத்தியைப் பெருக்கும். சோர்வை அகற்றும்.தாது விருத்திக்கு நிகரற்ற கீரை.


சக்கரவர்த்திக் கீரையை வாரத்திற்கு நான்கு நாட்கள் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடலுறவில் விருப்பம் அதிகரித்து இல்லற வாழ்வு இன்பமயமாகும்.


இக்கீரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை ஒழிக்க வல்லது.

கருத்துகள் இல்லை: