COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

துத்திக் கீரை,துத்தி இலை



துத்திக் கீரை
வகைகள் -: பசும்துத்தி, கருந்துத்தி, சிறுத்துத்தி, பெருந்துத்தி, எலிச்செவிதுத்தி, நிலத்துத்தி, ஐயிதழ்துத்தி, ஒட்டுத்துத்தி, கண்டுத்துத்தி, காட்டுத்துத்தி,கொடித்துத்தி, நாடத்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத்துத்தி, பலன் எல்லாம் ஒன்றே.

துத்திக் கீரை மருத்துவக் குணங்கள் கொண்ட கீரையாகும். இதனை கக்கடி, இக்கசி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இவை இந்தியாவில் உஷ்ணப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இவற்றில் பால் துத்தி, சிறுதுத்தி, கருந்துத்தி, ஐயிதழ்துத்தி, காட்டுத் துத்தி, கொடித்துத்தி, நாமத்துத்தி, நிலத்துத்தி, பொட்டகத்துத்தி என பல வகைகள் உள்ளன. இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.

மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ்
சாலவதக் கிக்கட்டத் தையலே – மேலுமதை
எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும்
இப்படியிற் றுத்தி யிலையை
(அகத்தியர் குணபாடம்)

மலச்சிக்கல் தீர
மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும். மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

மூல வியாதி குணமாக
காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது. இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.

உடல் சூடு தணிய
துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பக்கட்டி குணமாக
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

பல் ஈறு நோய் குணமாக
துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

குடல் புண் ஆற
துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

சிறுநீர் பெருக்கி
சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.


துத்திக் கீரைகளில்- கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணம் பெற்றுள்ளது.


துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.


துத்திக் கீரை இது சிறுநீரைப் பெருக்கும், மலத்தை இளக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும். இக் கீரை குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடலுக்கு ஊட்டமளிப்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்கிப் பல நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.


மூலநோய், கட்டிகள், புண்கள், முழுமையாக நிவாரணம் பெறுகின்றன. எலும்பு முறிவுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. துத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.


மற்ற கீரைகளைக் கடைவது போல துத்திக் கீரையையும் பாசிப் பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து, கடைந்து சாப்பிடலாம். துத்திக் கீரையைத் தினமும் ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் எந்தப் பிணியும் அணுகாது. தேவையான சக்தியும் கிடைத்து விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள், உடல் சூடு உள்ளவர்கள், ஆசனத்தில் கடுப்பு உள்ளவர்கள், மேகச் சூடு உள்ளவர்கள் துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதால் மேற்கண்ட பிணிகளில் இருந்து நிவாரணம் அடையலாம்.


துத்திக் கீரையை மருந்தாகத் தயாரித்துச் சாப்பிட்டால் முழுமையான நிவாரணம் பெறலாம்.


துத்தி இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து கஷாயம் தயாரித்து, இதில் பாலும் சர்க்கரையும் சேர்த்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு தணியும்.


துத்தி இலை, வெங்காயம், பச்சைப் பயறு சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவு சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூடு தணியும்.


துத்தி இலையை அரைத்து முகப்பருக்களின் மேல் போட்டாலும், துத்தி இலையைக் காய விட்டு அரைத்துப் போட்டாலும் சில தினங்கள் உபயோகத்தில் பருக்கள் மறைந்துவிடும். துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி ஆசனவாயில் வைத்துக் கட்டினால் மூலக் கட்டிகள் உடைந்து மூல ரணங்கள் ஆறிவிடும். மூல நோய் அகன்று விடும். பால்துத்தியை தண்ணீர் விடாமல் அரைத்து வெட்டுக் காயத்திலும் அடிபட்ட காயத்திலும் வைத்துக் கட்டினால் காயங்கள் விரைவில் ஆறிவிடும். பால்துத்தியின் அடையாளம் காண பால்துத்திக்காயின் மேல் தண்ணீர் தெளித்தால் வெடிக்கும்.


துத்தி இலையையும் துத்திப் பூவையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து மூலப் பருக்களின் மேல் போட்டால் பருக்கள் மறையும். பருக்களினால் ஏற்பட்ட வீக்கம், வலிநீங்கி பருக்கள் மறைந்து விடும்.


உடம்பில் எந்தப் பாகத்திலாவது வீக்கம், வலி இருந்தால் இதே மருந்தைப் போட்டுவர குணம் ஏற்படும்.


துத்தி இலையை இடித்துச் சாறு தயாரித்து இதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.


துத்தி இலை அல்லது துத்தி வேரை 35 கிராம் எடுத்து 250 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை 60 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளை நோயும், வெட்டை நோயும் குணமாகும்.


துத்திவேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களுக்குத் தடவினால் முகப்பரு நீங்கி விடும்.


துத்தி விதையை 10 கிராம் அளவில் எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து, பிறகு தேவையான அளவில் பால் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். தொழுநோயின் ஆரம்பத்தில் இப்படிச் சாப்பிட்டால், மேற்கொண்டு நோய்முற்றாமல் தடுத்துவிடும். துத்தியின் மூலம் சேகரித்து, 100 கிராம் அளவில் எடுத்து 300 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி தினசரி சாப்பிட்டு வந்தால், காமாலை நோய் குணமாகும் நீர்ச் சுருக்கு நீங்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும். தொண்டை தொடர்பான நோய்கள் இருக்காது. சொறி, சிரங்கு, பத்து, படை, அரிப்பு நீங்கி விடும்.


துத்திப் பூவை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணியும். தாது விருத்தி ஏற்படும். விந்து கூடுதலாக உற்பத்தியாகும்.


துத்தி இலையை நிழற்பாடமாகக் காயவைத்து பொடிசெய்து வைத்துக் கொண்டு, இந்தப் பொடியைக் காலை மாலையாக ஒரு தேக்கரண்டித் தூளைச் சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்து வந்தால் மூலம், ரத்த மூலம் மூலப் புண்கள், மூலக் கடுப்பு முதலிய பிணிகள் முற்றிலுமாக அகலும். நோய் தீர சில தினங்கள் சாப்பிட்டு வரவேண்டும்.


இதே சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், பல பிணிகளில் இருந்து முன் தடுப்பாகச் செய்து கொள்ளலாம். மூன்று தினங்களும் காலை, மாலை சாப்பிட்டால் போதுமானது.


துத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டிப் பொடியில் பால், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரத்த வாந்தி நின்று விடும். உடல் வெப்பம் நீங்கும். தேகம் குளிர்ச்சியடைந்து விடும். நரம்புத் தளர்ச்சி நீங்கி விடும். உடல் போஷாக்கு அடைந்து ஆரோக்கியமான, திடகாத்திரமான உடல் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.


துத்தி விதையைப் பொடி செய்து 10 கிராம் அளவில் எடுத்து 120 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை நீங்கும்.


இரத்த சுத்தி ஏற்படும். இரத்த விருத்தி ஏற்படும். விந்து உற்பத்தி அதிகரித்து போக சக்தியை மேம்படுத்தும்.


துத்தி இலை, துரா இலை, வெங்காயம் இம்மூன்றையும், சம அளவில் எடுத்து, சிறு சிறு பொடியாக அரிந்து சித்தாமணக்கு எண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு விட்டு, இதே மருந்தை ஆசன வாயில் வைத்துக் கட்டி வந்தால் ஆசனக் கடுப்பு நீங்கும்.


துத்தி இலையை அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவில் தயாரித்து எருமைத் தயிரில் குழப்பி 3_5 நாள் சாப்பிட்டால், சிறு நீரில் இரத்தம் கலந்து வந்தால் உடனே நிற்கும். இதற்குக் காரணமான வெட்டை நோய் தீர்ந்து விடும்.


துத்தி விதையைக் காலையில் 10 கிராம் அளவில் ஊறவைக்க வேண்டும். இதை மாலையில் சிறிது கற்கண்டு சேர்த்துச் சாப்பிட வேண்டும். இதே போல் மாலையில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு சில தினங்கள் சாப்பிட்டால் இரத்தபேதி, வயிற்றுக் கடுப்பு, நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை ரணங்கள், வயிற்றில் தொடர்ந்து ஏற்படும் எரிச்சல் முதலிய நோய்கள் தீரும்.


துத்தி விதையைப் பாலில் ஊறவைத்து கற்கண்டு சேர்த்துச் சில தினங்கள் சாப்பிட்டால், சூட்டினால் ஏற்பட்ட இருமல் தீரும்.


வட்டத் துத்தி இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து இதில் நெய் சிறிதளவு சேர்த்து மூன்று தினங்கள் சாப்பிட்டால் மூலமுளை கரைந்து விழுந்து விடும்.


துத்தி இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவு நெய் சேர்த்து 30 மில்லி அளவு சாப்பிட்டால், கடுமையான ஜலதோஷம் குணமாகும்.


தாதுபுஷ்டி லேகியம்


பெரும் துத்தியின் இலைச்சாறு 500 மில்லி, பால் ஒரு லிட்டர், பனங்கற்கண்டு 500 கிராம் இவைகளை ஒன்று சேர்த்து இளந்தீயாக எரித்து மெழுகுபதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். லேகிய பதத்தில் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை காலை, மாலை ஒரு நெல்லிக்காய் அளவில் சாப்பிட்டு வந்தால், தேகம் வலுவடையும், தாது புஷ்டி உண்டாகும்.


எலும்புமுறிவிற்குப் பல அனுபவ முறையில் மூலிகைகளைக் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


எலும்பில் முறிவு ஏற்பட்டவுடன் எலும்புகளைச் சரியாக இணைத்து வைத்து, முறிவு ஏற்பட்ட இடத்தில் துத்திக் கீரையை அரைத்துக் கனமாகப் பூசி இதன் மேல் துணியால் கட்டி, பிறகு இதை அசையாமல் மூங்கில் சிம்புகளை முறையாக வைத்துக் கட்டி அசையாமல் வைத்திருந்தால், சில தினங்களில் உடைந்த எலும்பு கூடிவிடும்.


சமையலுக்குப் பயன்படும் கீரைகளில் ஒன்றாக துத்திக் கீரை திகழ்கிறது. இந்தக் கீரையை பருப்பு சேர்த்து கடைந்தும், பொரியலாகவும் பயன்படுத்தலாம்.


துத்திக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைய அளவில் உம்ளன. இக்கீரையை பச்சரிசி அல்லது துவரம் பருப்புடன் சமைத்து சாப்பிட்டால் வாய்வுக் கோளாறு கட்டுப்படும். மலத்தை இளக்கும்.


முறிந்த எலும்பை ஒட்ட வைக்கும் திறனும் இந்தக் கீரைக்கு உண்டு. குடல் புழுக்கம், குடல் புண், நீர்ச்சுருக்கு, சொறி சிரங்கு, காமாலை போன்ற நோய்களை குணப்படுத்து வதிலும் இக்கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது.


துத்திக் கீரையின் சாறை எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணை கலந்து சுண்டக் காய்ச்சிச் குழந்தைகளுக்கு கொடுத்தால் கரப்பான் நோய் குணமாகும். அதேபோல் இந்த இலையை அரைத்து அதை கோடை காலத்தில் ஏற்படும் வேனற் கட்டிகம் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடைந்து அதனும் இருக்கும் சீழ் வெளியேறும். அதேபோல் இக்கீரையிலிருந்து தயாரிக்கப்பட்ட பொடித் துகளும் தோல் தொடர்பான நோய்களைக் போக்கும்.


துத்தி இலையை கசாயம் செய்து கொப்பளித்தால் பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் நோய்கம் குணமடையும். அதேபோல் அந்தக் கசாயத்துடன் பாலும் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு, மேகச் சூடு போன்றவையும் குணமாகும்.


துத்திக் கீரை காட்டுச் செடியாக வளரக்கூடியது. இதன் இலைகம் அகன்றும், இலைக் காம்புகம் நீளமாகவும் இருக்கும். இலைக் காம்பின் இடுக்கில் மஞ்சம் நிறத்தில் பூ பூக்கும்துத்தி வேரை உலர்த்தி பொடி செய்து மூன்றுகிராம் முதல் ஐந்து கிராம் வீதம் தினமும்பாலில்சேர்த்துக் குடித்து வர மூலச் சூடுதணியும்.




வாயு சம்பந்தப் பட்ட வியாதிகளுக்கும் இடுப்புவலி, பழைய மலத்தினால்உண்டாகும் பூச்சிகள்ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோபொரியல்செய்தோ உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் யாவும் குண்மடையும்.




எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் எலும்பைஒழுங்கு படுத்திக் கட்டிக் கொண்டு இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப்பூச அதன்மேல் துணியைச்சுற்றி அசையாமல்வைத்திருந்தால்வெகு விரைவில் முறிந்தஎலும்பு கூடி குணமாகும்.




துத்தி இலையை நன்றாக அரைத்துக் கசக்கிசாறு எடுத்துக்கொண்டு அந்தச்சாற்றுடன்தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டும்அளவு நன்றாக க்காச்சி வடிகட்டிப் பாட்டிலில்வைத்துக் கரப்பான் கண்ட குழந்தைகளுக்குதடவி வந்தால் இந்நோய் குணமாகும்.




குடற்புண்ணால் வேதனைபடுகின்றவர்கள்துத்தி கஷாயத்தை தினசரி மூன்று வேளைசர்கரை கலந்து குடித்து வந்தால் பூரண குணம்பெறலாம். தவிர நீர்சுளுக்கு, தொண்டை கம்மல்சொரிசிரங்கு உள்ளவர்கள்இந்தக் கஷாயத்தைக்குடித்து குணமடையலாம் 



மூல நோயை ஆர‌ம்ப‌த்‌திலேயே க‌ண்ட‌றி‌ந்து அத‌ற்கான மரு‌த்துவ‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. இத‌ற்கு கை வை‌த்‌திய மு‌றை‌யி‌ல் ந‌ல்ல மரு‌ந்துக‌ள் உ‌ண்டு. 


துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும்.


துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ் மூலம் குணமாகும்.


துத்தியிலையில் வெங்காயம், சிறு பயிறு சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். மூலச் சூடு தணியும்.


கட்டுக்கொடி இலையை பாக்களவு மென்று தின்ன இரத்தபேதி, சீதபேதி, மூலக்கடுப்பு, எரிச்சல் குணமாகும்.


துத்தி இலையை காரமின்றி பொரியலாகச் செய்து உணவுடன் உண்டு வர 120 நாள்களில் மூல நோய் முற்றிலும் குணமாகும். (புளி, காரம், புகை, புலால் நீக்க வேண்டும்..




துத்தி இலையை காய்ச்சி தினமும் குடித்துவர குடல்புண் குறையும்.


துத்தி இலை பவுடர்: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

13 கருத்துகள்:

Gandhi ram ramalingam சொன்னது…

நல்லது

Gandhi ram ramalingam சொன்னது…

நல்லது

Unknown சொன்னது…

நல்லது இந்த கீரை கிடைக்குமா

Jayasriseetharaman சொன்னது…

மிக எளிதாக கிடைக்கக்கூடியது

Unknown சொன்னது…

துத்தி இலையை வியாபாரம் செவது எப்படி

Unknown சொன்னது…

துத்தி இலை தேவைக்கு 8072336992

Unknown சொன்னது…

கிடைக்குமிடம்

Unknown சொன்னது…

கூகிளில் துத்தி இலை பற்றி படித்தேன் அருமை.

Unknown சொன்னது…

கூகிளில் துத்தி இலை பற்றி படித்தேன் அருமை.

eswaran சொன்னது…

Piles நோய்க்கு உடனடி நிவாரணம் துத்தி இலை அரைத்து மோரில் கலந்து குடிக்கவும்

Shunmugam சொன்னது…

பயநுள்ள தகவல்

Unknown சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

பயனுள்ள மருத்துவக்குறிப்புகள்.மிக்க நன்றி