COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

எருக்கன், எருக்கு

வேறு பெயர்கள் -: அருக்கன்.ஆள்மிரட்டி என்பன.

எருக்கன் செடி வகையைச் சேர்ந்தது. வறண்ட பிரதேசத்திலும் வளரும்.ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும். அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும்.எருக்கன் செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும். எருக்கன் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும்.சில துளிகள் வெளிவந்தவுடன் தானே நின்று விடும்.
இதன் இலை சாம்பல் நிறத்தில் இருக்கும். 3 செ.மீ. கனமும் 10 செ.மீ. நீளமும் சுமார் 5 - 6 செ .மீ. அகலமும் முட்டை வடிவத்தில் இருக்கும்.
வெள்ளெருக்கனை மாந்தீரீக சம்பந்தமான காரியங்களுக்கும் பயன்படுத்துகின்றனர் எல்லாமே மருத்துவ குணம் உடையன. வெள்ளெருக்கன் வேர் அதிசயமாக சில வினாயகர் உருவில் இருப்பதுண்டு.வினாயகர்சிலை இந்த வேரில் செய்து வைத்து வழிபட்டால் சிறந்த பலன் உண்டு.

வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கு சிறந்தது.

இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்களல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளை உடையது.

1. இலையை அரைத்துப் புன்னைக் காயளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும்.

2. தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

3. இலைச்சாறு மூன்று துளி, 10 துளி த் தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

4. 200 மி.லி. உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய், தொழுநோய் ஆகியவை தீரும்.

5. வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும்.

மலர் பூத்துப் பிஞ்சாகி, காயாகி கொத்தாக இருக்கும். சுமார் 7 - 9 செ.மீ. நீளத்துடன் 3 - 4 செ.மீ. கனமுள்ளதாக இருக்கும். நன்கு முற்றிய பின் வெடித்து பஞ்சாக மாறி காற்றில் பறந்து சென்று விழுந்த இடத்தில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்கிறது.
எருக்கம்பூவினால் செய்த மருந்து -சுவாசகுடாரி மாத்திரை -சளி ,இளைப்பு ,சுவாசம் போன்ற நோய்களை தீர்க்கும்.

இலைகள்​ : எருக்​கன் செடி​யின் இலைகளை எரித்து,​​ அதன் புகையை முகர்ந்தால்,​​ வாய் வழியாகச் சுவாசித்தால்,​​ மார்புச் சளி வெளியேறும்.​ ஆஸ்துமா,​​ இருமல் கட்டுப்படும்.
இதன் இலைகள்,​​ பூக்கள்,​​ வேர்,​​ பட்டைகள்,​​ எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை.


மொட்டுகள்​ : இதன் மொட்​டு​கள்,​​ சுக்கு,​​ ஓமம்,​​ கறுப்பு உப்பு ஆகியவற்றை மெல்லியதாகப் பொடியாக்கி,​​ சிறிதளவு தண்ணீர் கலந்து பட்டாணி அளவிற்கு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.​ தினசரி இரண்டு மாத்திரைகள் வீதம் காலை,​​ மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம்,​​ பசியின்மை,​​ வாயு கோளாறு,​​ வயிறு உப்புசம் ஆகியவை கட்டுப்படும்.பூக்கள்​ : காலரா,​​ வயிற்​றுப் போக்கு,​​ வாந்தி,​​ குமட்டல் போன்றவற்றால் உடல் பலவீனம் அடைவதிலிருந்து காக்க இரண்டு எருக்கம் பூக்களை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும்.பால்​ : எருக்​கம் பால் தலைப் பொடுகு,​​ படை,​​ மூட்டு வலி​கள்,​​ மூட்டு வீக்கம்,​​ மூலநோய்க்கு மருந்தாகப் பயன்தருகிறது.

கிராமப்புறங்களில் காலில் முள் குத்தி ஒடிந்து உள்ளே இருந்தால் அந்த இடத்தில் எருக்கம் பாலைத் தடவுவர். இதனால் வலி குறைவதுடன் முள் குத்திய இடம் விரைவில் பழுத்துச் சீழ் வெளியே வரும். அத்துடன் முள்ளும் வந்துவிடும். குதிகாலில் வலி வந்தால், செங்கல்லைச் சூடாக்கி அதன்மீது பழுத்த எருக்கிலையை வைத்து அதன்மேல் சூடு தாங்கும் அளவுக்குக் குதிகாலை வைத்து எடுத்தால் வலி குணமாகும். உடம்பில் கட்டிகள் தோன்றி உடையாமல் வேதனை கொடுத்தால் எருக்கு இலையை நெருப்பில் வாட்டி, தாங்கும் சூட்டுடன் கட்டியின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடையும். எருக்கஞ் செடியின் குச்சியை, கருப்பைக்குள் செலுத்துவது கொடூரமான கருச்சிதைவு முறைகளில் ஒன்றாக உள்ளது.

வெள்ளெருக்கம்பூ Bronchitis, asthma ஆகியவற்றுக்குச் சிறந்தது.
 
தேவ மூலிகை அல்லது விருட்சம் என்று கூறப்படும் வெள்ளெருக்கு அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குப்பை மேடுகளிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம். எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.

ஆஸ்துமா குணமடையும்
வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும்.

10 கிராம் இஞ்சி,3வெள்ளெருக்கன் பூ,6 மிளகு இவற்றை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் இருவேளை பருகி வர இரைப்பு குணமாகிவிடும்.

வாதவலி வீக்கம் 
எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.

பாம்பு கடி விஷமருந்து 
நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன்பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.
மருத்துவப் பயன்கள்.- 
இதன் பால் தீ போல சுடும். பட்ட இடம் புண்ணாகும். புழுக்களைக் கொல்லும். விஷக்கடிகளை குணமாக்கும். பயிர்களுக்கு எதிர்ப் பாற்றலைத் தரும்.இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைதல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை, ஆகியவை கோழையகற்றுதல் பசியுண்டாக்குதல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது.

பாம்பு - தேள் கடி -: இதன் இலையை அரைத்து 5 கிராம் அளவு பாலில் சாப்பிடவும். அரைத்து கடிவாயில் கட்டவும். விஷம் இறங்கும். எலிக் கடிக்குக் கொடுக்கலாம்.

குதிங்கால் வலி - :பழுத்த இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்துவர குணமடையும்.

மலக்கட்டு - 20 மி.லி. சிற்றாமணக்ககு எண்ணெயில் 3 - 5 துளி எருக்கன் பால் விட்டுக் கொடுக்க மலர்ச்சிக்கல் தீரும்.

வயிற்றுப் பூச்சி -: சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும்.

காது நோய் - : எருக்கன் இலைச் சாறு 50 மி.லி.கலந்து வைக்கவும். இதில் வசம்பு, பெருங்காயம், இலவங்கம், பூண்டு வகைக்கு 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி வடித்து வைக்கவும். இதனைச் சொட்டு மருந்தாகக்காதில் விட காதில் சீழ் வடிதல், குருதி கசிதல், காதில் எழுச்சியினால் வரும் வலி ஆகியன குணமாகும்.

குட்டநோய் -: இதன் இலையும். வேர் பட்டையும் சம அளவில் உலர்த்திய பொடி 2-3 கிராம் ஆளவு பசு எண்ணெயில் கலந்து நாளும் இரு வேளை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும், யானைக்கால் வியாதியும் குணமாகும். உப்பில்லாமல பத்தியம் இருத்தல் வேண்டும்.புளி காரம் எதுவும் கூடாது. தயிர் பால் மோரில்தான் சாப்பிடவேண்டும். இப்பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்குத் தடவ குணமடையும்.

காக்கை வலிப்பு -: எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன் இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும். இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.

பல்வலி -: எருக்கன் பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல் கூச்சம் யாவும் குணமடையும்.

ஆஸ்த்துமா -: வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், இலவங்கம், குங்கும்ப்பூ, கோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும். காலை,மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் 48-96 நாளில் ஆஸ்த்துமா, இழப்பு, இரைப்பு, இருமல், காசம், ஜன்னி குணமடையும்.

சிற்றின்பம் -: இதே மாத்திரை இரண்டையும், 5 கிராம் ஜாதிக்காய்த் தூளையும் பாலில் கலந்து தினமும் இரவில் சாப்பிட்டு வர சிற்றின்பம் பெருகும்.

வாதவலி, வீக்கம் - : எருக்கம் பால் வாதக்கடிகளைக் கரைப்பதன்றி வாத நோய், சந்நிபாதம் ஐவகைவலி இவற்றைப் போக்கும்.

ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயில் 7 துளி எருக்கம் பாலை விட்டு நன்றாய்க் குலுக்கி நாசிக்குள் 2-3 துளி விட அளவு கடந்த தும்மல் உண்டாகும். சிரசிலுண்டான நீரையெல்லாம் வெளிப்படுத்தும். காக்கை வலிக்குச் சிகிச்சை செய்யும் போது முதலில் இச்சிகிச்சை செய்வதினால் மூளையை அனுசரித்த சீதளத்தை அகற்றும் அந்தத் தும்மலை நிறுத்த வேண்டுமாயின் முகத்தில் சலத்தால் அடித்துக் குளிர்ந்த சலத்தைக் கொண்டு நாசியைச் சுத்தப் படுத்த வேண்டியது.

எருக்கன் பூவால் முறை சுரம் ,போகா நீர் பிநசம் சுவாசகாசம், கழுத்து நரம்பின் இசிவு ஆகியவை நீங்கும்.

எருக்கன் பூவிற்குச் சமனெடை மிளகு சேர்த்து மெழுகு வண்ணம் அரைத்து இரண்டு குன்றிப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்திக் கொண்டு தினம் 2 வேளை ஒவ்வொரு மாத்திரை வீதம் கொடுத்துவர முரைசுரம் நீங்கும்.

5 பலம் ஆவின் நெய்யில் 10-12 எருக்கம் பூவைப்போட்டுக் காய்ச்சி வடித்தெடுத்து வேளைக்கு அரை அல்லது ஒரு தோலா வீதம் கொடுக்க சுவாச காசம், நீர்ப்பீநசம் போம்.

10 மில்லி விள‌க்கெண்ணெயில் 3  துளி எருக்கு இலைச்சாறு விட்டு சாப்பிட்டு வ‌ந்தால் மலச்சிக்கல் குறைந்து ம‌ல‌ம் இள‌கும்.
 குறிப்பு : எருக்கு மருந்து சிறுவர்களுக்கு ஆகாது. ஏதேனும் வேதனை இருப்பின் நல்லெண்ணெய் முறிப்பாகும்.

 எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர்.எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.இதை வீட்டிலும் வளர்க்கலாம்.இதன் பூவை வைத்து விநாயகருக்கும்,சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம்.விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும்.இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்..

கள்ளிமுளையான்

நமது உடம்பிற்கு தேவையான ஆற்றலை பெற நமது உதவுவது பசியே. பசி சீராக இல்லாவிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. பித்தம் நமது பசியை சீர்செய்யும் பொருளாக விளங்குகிறது. உடலின் ஆற்றலுக்கு பித்தமே அவசியம். பித்தம் அடங்கினால் பேசாமல் போய்விடு என்று சித்த மருத்துவம் பித்தநாடியின் சிறப்பை வலியுறுத்துகிறது. நமக்கு தேவையான பசியை உண்டாக்குவதும், தேவையற்ற கொழுப்பை கரைத்து, சக்தியாக மாற்றுவதும் பித்தத்தின் பணியாகும். நாம் உண்ணும் உணவை சரியானபடி செரிக்கவைத்து, தேவையற்ற கொழுப்புகள் அங்குமிங்கும் படியாமல் பாதுகாக்கும்
உணவுகள் பித்தசமனி என்று அழைக்கப்படுகின்றன. சீரகம், வெந்தயம், இஞ்சி, பூண்டு போன்ற உணவுகள் பித்தத்தை சமப்படுத்தும் உணவுகளாகும். பித்தம் சரியாக இயங்காவிட்டால் நமது உணவு செரிமானமாவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. பித்தத்தின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபாடுகள் நமது உடலின் ஆற்றலை தடை செய்கின்றன.
நமக்கு பசி ஏற்படும்போதெல்லாம் ஒருவிதமான எரிச்சல் வயிற்றில் ஏற்பட்டு, உணவு உண்ணும் வேட்கை அதிகமாகிறது. நாம் உண்ணும் உணவிலுள்ள பல்வேறு வகையான சத்துகள் உடலின் எடையையும் பருமனையும் அதிகப்படுத்துகின்றன. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உணவின் அளவை குறைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் உடற்பருமன் அதிகமாவதுடன், உடற்பருமன் சார்ந்த சர்க்கரை நோய். ரத்தக்கொதிப்பு, மிகு கொழுப்பு போன்ற தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடற்பருமனின் காரணமாக மூச்சு வாங்குதல், உடலின் அங்கமைப்புகள் மாறுபடுதல், முழங்கால், கணுக்காலில் வலி உண்டாதல், தொண்டை வறட்சி, கழுத்து, புட்டம் போன்ற சதைப்பகுதிகள் தொங்கி காணுதல், நடக்கும்பொழுது அதிக உடல் எடையின் காரணமாக அசைந்து செல்வது போன்ற தோற்றம், பிறரின் கேலிக்கு ஆளாதல் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.
உண்ணும் உணவின் அளவை நமது வேலை மற்றும் எடைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். கூடுதல் கலோரிகள் கொண்ட உணவை தவிர்த்து, நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். நாம் உண்ணும் உணவுடன் பசியை கட்டுப்படுத்தும் பொருட்களையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. இதனால் எடை குறையும். உணர்ச்சிவசப்பட்ட பசி என்ற எமோசனல் பசியை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். நமக்கு பிடித்தமான உணவுகள் என்றால் அதிகமாக சாப்பிடுவதும், பிடிக்காத உணவுகள் என்றால் தவிர்ப்பதும் உடலின் செயல்பாட்டில் மாறுபாடுகளை ஏற்படுத்தி, பல்வேறு உடற்கோளாறுகளை உண்டாக்குகிறது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்ந்து, பல நோய்கள் உண்டாகிறது. நாம் உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்தவும் அதிக பசியினால் உண்டாகும் நாப்புளிப்பு மற்றும் சுவையின்மை ஆகியவற்றை நீக்கவும் பயன்படுவதுடன், செரிமான ஆற்றலைநிலைநிறுத்தும்
அற்புதமூலிகை கள்ளி முளையான். கேரலுமா பிம்பிரியேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த கள்ளி செடிகளின் தண்டுகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. எழுமான்புளி என்ற வேறு பெயர் கொண்ட இந்த மூலிகையின் புளிப்புச் சுவையானது ஊறுகாய்,துவையல் போன்றவை தயார் செய்ய உதவுகிறது. இதன் தண்டுகளிலுள்ள ஸ்டார்வோசைடுகள் மற்றும் பிரக்னின் கிளைக்கோசைடுகள் தேவையற்ற கொழுப்பை நீக்கி, பித்தத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு தேவையான அளவு மட்டுமே பசியை உண்டாக்கு கிறது. அதுமட்டுமின்றி, உடலுக்கு வலுவையும் தருவதால்பஞ்சகாலத்தில்உட்கொள்ளக்கூடிய உணவாகவும் முற்காலத்தில் இவை பயன் பட்டன.
கள்ளிமுளையான் தண்டை மேல்தோல், நார், கணு நீக்கி, நல்லெண்ணெய் விட்டுவதக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு, கடுகை சிவப்பாக வறுத்து, இத்துடன் வதக்கிய கள்ளிமுளையான், தேங்காய் துருவல் சேர்த்து மைய அரைத்து, துவையல் போல் செய்துகொள்ள வேண்டும். இதனை உணவுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட உடலில் தேங்கிய அதிகப்படியான கொழுப்பு கரையும். உடற்பருமன் நீங்கும். கள்ளிமுளையானை தோல் நீக்கி, நார், கணு நீக்கி, நல்லெண்ணெய்விட்டு வதக்கி மைய அரைத்துக்கொள்ள வேண்டும். மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை வறுத்து, பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் நல்லெண்ணெயில் கடுகை போட்டு பொரித்து, அத்துடன் வதக்கிய கள்ளிமுளையான் மற்றும் பொடிகளை கலந்து, சிறிது பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி மூடிவைத்துக்கொள்ள வேண்டும். இதனை உணவுடன் சேர்த்து சாப்பிட தேவையற்ற பசி குறையும். பித்தம் தணியும்.
தாவர அமைப்பு - கள்ளிமுளையான் ஒரு சிறு
கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை போல் குத்தாக வளரும் அடிபாகம்
நாற்சதுரமாகவும் வளர,
வளர நுனி சிறுத்தும் மூங்கில் போத்ததுப் போல வளரும். சாம்பல்,சிவப்பு நிறங்கலந்து, பசுமை வளர்ந்திருக்கும். சுமார் இரண்டடி உயரம்வரை
வளரும்.
வரட்சியைது தாங்கும். நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும். இயற்கையாக சிறு குன்று களில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில் அதிகம் காணப்படும்.ஆதிவாசிகள் மலையில்  நடக்கும்
போது தண்ணீர் தாகம் ஏற்பட்டால் இதன் தண்டைச்
சாப்பிடுவார்கள. இது கைப்பு, கார்ப்பு, புளிப்பு
கலந்த ஒரு சுவை இருக்கும்.இனப் பெருக்கம்
வேர் அல்லது தண்டுகள் மூலம் நடைபெரும்.

பயன்படும் பாகங்கள் - தண்டுகள் மட்டும் பயன்படும்.
மருத்துவப் பயன்கள் - கள்ளிமுளையான் உமிழ்
நீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும், குளிரச்சி
உண்டாக்கும். செரிப்பை விரைவு படுத்தும், உடலை
உரம்பெற வைக்கும். குமட்டல் வாந்தியை நிறுத்தும்,
நாவின் சவையுணர்வை ஒழுங்கு படுத்தும், நீர்
வேட்கையை அடக்கும். ஒரு பாடல் -
"வாய்க்குப் புளித்திருக்கும் வன்பசியை உண்டாக்கும்
ஏய்க்குமடன் வாதத்தையும் ஏறுபித்தம் சாய்க்கும்
தெள்ளிய இன்ப மொழித் தெய்வ மடவனமே
கள்ளிமுளையானை அருந்திக் காண்".
சித்த வடாகம் என்ற நூலில் கும்ப முனி இவ்வாறு
கூறுகின்றார்.
புளிப்புச் சுவையுள்ள கள்ளிமுளையான் பசியையுண்டாக்கும் வாத மந்தத்தையும் பித்த தோஷத்தையும்
மாற்றும் என்க.
உபயோகிக்கும் முறை - இதனைப் பற்றி தின்ன வாய்க்குள் புளிப்புச் சுவையோடு இதமாக இருப்ப
துடன் பசியையுண்டாக்கி பித்தத்தைத் தணிக்கும்.
துவையல் - இதை சிறு துண்டுகளாக நறுக்கி எள்
நெய் விட்டு வதக்கி, உழுந்து, இஞ்சி, கொத்துமல்லி,
மிளகு, சீரகம், புளி, வைத்துத் துவையலாக அரைக்
கவும் வாரம் ஒருமுறை உணவில் உட்கொள்ள மேற்
கண்ட பயனைப் பெறலாம். வாந்தி, நீர் ஊறல் நிற்கும், உடல் வெப்பம்
குறையும், உடல் நலம் பெறும்.
பித்த குன்மம், குடல் வாய்வுக்கு மருந்து செய்வோர்
இதனைச் சேர்த்துச் செய்வார்கள். மேலைநாடுகளில்
கள்ளிமுளையானின் முக்கிய வேதிப்பொருளின்
தன்மையை ஆராச்சி செய்து(CALLOGENESIS&
ORGANOGENESIS)  அது உடல் பருமனைக்
குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயைகுணமாக்கும்
என்று கண்டு பிடித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து செய்துகொண்டுள்ளார்கள். இது தற்போது
தமிழ்நாட்டில் வியாபாரப் பயிராகச் செய்கிறார்கள்.
கள்ளிமுளையானின் மெல்லிய் தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டை தினம் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்
சர்க்கரை வியாதியைக் குணப்படுத்தும் என்று
தற்போது அறிந்துள்ளார்கள்.
 கள்ளிமுளையான் தண்டுப்பகுதியை சாப்பிட்டல் உடல் குளிர்ச்சி அடையும்.

தாமரை

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். தாமரை மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தாமரை மலர்களில் லினோலிக் அமிலம், புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன.
மூலிகைகளின் பலனை அறிய  ஒரு சின்ன சுருக்கு வழி கூட இறைவன் காட்டியிருக்கிறான் . ஒரு ரகசியம் கூறுகிறேன். ஒரு மூலிகை வடிவில்  மனித உறுப்பில் இதை ஒத்து இருக்கிறதோ அந்த உறுப்புக்கு அந்த மூலிகை நிவாரணமாக பயன் படும் .இது பெருவாரியாக ஒத்து வரும் .அதேப்போல் மூடிய தாமரை ஒத்திருக்கும் இதயத்தை தாமரை வலுவாக்கும் தாமரை தண்டுகள் நார்சத்து நிரம்பியவை   விட்டமின் சி பொட்டசியம்  பாஸ்பராஸ் விட்டமின்  B  6     தாமிர   சத்து  இவைகளுடன் 
மாங்கனீஸ்இவைகள் அடங்கியது .இதில் மிக முக்கியமானது இதில் சக்கரையும் கொழுப்பும் சிறிது கூட இல்லை.

இதன் மேல் தோலை சீவிவிட்டு மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவி பயன்படுத்தவும்.தண்டு இளசாகவோ அல்லது முற்றியதாகவோ எப்படிருந்தாலும் சமைத்தாலும்  ஒரே மாதிரி நறுக் நறுக் என்றுதான் தான் இருக்கும்.இதன் தண்டை பச்சையாகவே சாப்பிட்டால்  கூட நன்றாகயிருக்கும்.
உப்பு எப்படிதான் போட்டாலும் தண்டில் ஏறாது, உப்பில்லாமல் சப்புன்னு இருக்கும் எந்த தாமரை  எந்த தண்ணீரில் இருந்தாலும் மாசுபடுவதில்லை .அதேப் போல் சமைக்கும் போதும் அதில் உப்பு ஏறுவதில்லை. 

தாமரைத்தண்டை தோல்சீவி மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவவும்.
அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கார்ன்மாவு - 1 டீஸ்பூன் கடலைமாவு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் அனைத்துப் பொருட்களும் சேர்த்து பிசிறி 1/2 மணிநேரம் அப்படியே  விட்டுவிடவும் பின்  எண்ணெய்விட்டு வறுக்கவும்:இது வாழைக்காய் வருவல் மாதிரி இருக்கும்
 
தாமரை மலர்களின் இதழ்களை நிழலில் காயவைத்து  அவைகளை கஷாயம் செய்து சாப்பிட்டால் இதய மைகள் கட்டுப்படும் .

தாமரை மலரின் நடுவில் இருக்கும் மகரந்த பகுதியை உடைத்துப்பார்த்தால் அதனுள்
விதைகள் காணப்படும் .இவைகள் மிகப்படினமாக இருக்கும் .இந்த விதிகளை உடைத்து அதில் இருக்கும் பருப்பை சாப்பிட இதய நோய் தீரும் .இதயம் பலப்படும் .
சிறுநீரகங்களை  வலுப்படுத்தும்.

தாமரைத் தண்டை நல்ல விளக்கில் திரியாக உபயோகிப்பார்கள் அதை திரியாக உபயோகித்தால் செல்வா வளம் பெருகும். இதன் இல்லை பண்டைய நாள் முதல் உணவருந்த பயன் பட்டு வருகிறது .தாமரை இலையில் சப்பிட்டாலேபல வியாதிகள் தீரும் . முக்கியமாக நரை விரைவில் வராது .
மலர்களும் மருத்துவப்பயன் கொண்டவை.  இன்று உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப் பெற்று வருகிறது.  இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட மலர்களில் தாமரையும் ஒன்று தாமரை மலர் நம் இந்தியாவின் தேசிய மலராகும். தாமரையில் கல்விக்கு உரிய சரஸ்வதியும், செல்வத்துக்கு உரிய மஹாலட்சுமியும்  அமர்ந்திருப்பதாக இந்து மதத்தினர் நம்புகின்றனர்.  தாமரைப் பூவை இறைவனுக்கு பூஜைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

தாமரையில் வெண்மை, சிவப்பு, நீலம், மஞ்சள் என பல வகைகள் உண்டு.


தாமரைப் பூவை அரவிந்தம், பொன்மனை, கமலம், சரோகம், கோகனம், சலசம், வாரிசம், பங்கசம், நளினம், சரோருகம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

 
தாமரை தான் இந்தியாவின் தேசிய மலர் !

வியட்னாமுக்கும் அதுவே தேசிய  மலர்  !
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்

ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும்போங்

கோர மருந்தின் கொடுமையறும்-பாருலகில்

தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே! காந்தல்விடும்

வெண்டா மரைப்பூவால் விள்

            -அகத்தியர் குணவாகடம்

பொருள் - வெண்தாமரைப்பூவால் ஈரல் பாதிப்பு, குடல்புண், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும்.  தேக எரிச்சல் நீங்கும்.


தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை  வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.  


நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும்.


சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.


ஞாபக சக்தியைத் தூண்டும்.  மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.


வயிற்றுப் புண்ணை ஆற்றும்.  சரும எரிச்சலைப் போக்கும்.


இதயத்தைப் பாதுகாக்கும்.  இதய தசைகளை வலுப்படுத்தும்.  இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.


தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.


வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  ஞாபக சக்தியைத் தூண்டுகிறது.  நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.


தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.  காது கேளாமை நீங்கும்.  ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.


மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும்.  அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை அவுன்ஸ் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான  பாதிப்பு குறையும்.


தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில்  தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.


தாமரைப் பூவின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து அதன் முழுப் பயனையும் பெற்று நீண்ட ஆரோக்கியம்பெறும்வோம்.

சித்தவைதியத்தை விட தாமரை ஆயுர்வேதத்தில் மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது. அது என்னவோ உலகம் முழுவதும் எல்லா மதத்திலேயும் தாமரை ஒரு ஆன்மீக மலராகத்தான் மதிக்கபடுகிறது .சீனாவில் நீரிருக்கும் குளம் குட்டைகளிலெல்லாம் வளரக் கூடிய தாமரை மழைக்காலத்தில் அறுவடை செய்யப்படும். இதன் வேர் கிழங்கைப் போன்றிருக்கும். மாவுச்சத்து, அமீனோ அமிலங்கள், நூண்ணுயிர்ச்சத்து, புரதம் போன்ற அனைத்தும் அடங்கிய சத்துமிக்க வேரை உணவாகக் கொள்கின்றனர். தென்சீனத்தில், பறித்ததும் வெடுக்கென்றிருக்கும் பசுமையான நிலையில் பழத்தைப் போலச் சுவைத்துண்கிறார்கள். வடக்கிலோ காய வைத்து பல்வேறு உணவுப் பதார்த்தங்களில் பயன்படுத்துகிறார்கள். தாமரை வேரிலிருக்கும் துளைகளில், பாதி வெந்த அரிசிச் சோற்றை அடைத்து ஆவியில் அவித்தெடுக்கிறார்கள். பின்னர், துண்டுகளாக வெட்டி சர்க்கரை சேர்த்துப் பரிமாறுகிறார்கள். தாமரை மணத்துடன் இனிப்பாக இருக்கும் இந்தப் பதார்த்தம் சீனத்தில் மிகவும் பிரபலம்.
 செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும் வெண்தாமரையே அதிக அளவில் மருத்துவத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது.

மூளை வளர்ச்சி

உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரைக்குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க வெண்தாமரைப் பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட ஜன்னி நோய் குணமாகும்.

கண்பார்வை தெளிவு

வெண்தாமரைப்பூ,இலை,தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து எடுத்து அதனை நன்றாக சாறுபிழிந்து முக்கால்கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆறவைத்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.

உயர் ரத்த அழுத்தம்

வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

கூந்தல் தைலம்

தாமரைப்பூ ,அதிமதுரம்,நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

இருதயநோய் போக்கும்

செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21 குடித்து வர இருதய நோய் குணமடையும்.

இருமல் போக்கும் நீர்

தினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு அதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடித்து வர வறட்டு இருமல் குணமடையும்.
தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவர  ஞாபகசக்தி அதிகரிக்கும்.
 வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறப் போட்டு மறுநாள் அதை அடுப்பில் வைத்து 1 லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை 1 கிலோ கலந்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு 15 மில்லி எடுத்து வெந்நீரில் கலந்து 2 வேளை குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.

பெருங்காயம்

கோந்து போன்ற பசை, இது தண்டிலிருந்து பிழியப்பட்ட வறண்ட சாற்றில் இருந்து வருகின்றது மற்றும் வேரானது மசாலாப் பொருளாக பயன்படுகின்றது. பசையானது புதிதாக இருக்கும் போது சாம்பல்நிற வெண்மையாக உள்ளது. ஆனால் வறண்ட பின்னர் அடர்ந்த மஞ்சள் நிறத்திற்குச் சென்று விடுகின்றது. பெருங்காயப் பசையானது வெப்பம் தாங்காது, மேலும் இது பாரம்பரியமாக கற்கள் அல்லது சுத்தியல் கொண்டு உடைக்கப்படுகின்றது. இன்று, பெரும்பாலும் பொதுவாகக் கிடைக்கின்ற வடிவமான கூட்டுப் பெருங்காயம் தூளானது, 30% பெருங்காயப் பசையுடன் அரிசி மாவு மற்றும் அரேபிய கோந்து கலந்து கிடைக்கின்றது.
பெருங்காயம் என்பது ஒரு பூண்டுத்தாவரம், மானாசியஸ், அம்பெல்லிபெரேயே குடும்பத்தின் பல்லாண்டுச் செடி, அபியாசேயே என்றும் அழைக்கப்படுகின்றது. இச்செடி சுற்றுவட்டத்தில் 30-40 செ.மீ இலைகளுடன் 2 மீட்டர்கள் வரை உயர வளருகின்றது. தண்டு இலைகள் அகன்ற அடிப்பகுதியைக் கொண்ட காம்புகளைக் கொண்டுள்ளன. பூக்களின் தண்டுகள் 2.5–3 மீட்டர்கள் உயரம் உள்ளன மற்றும் 10 செ.மீ கடினமாகவும் மறைவாகவும் உள்ளன. பசைநிறைந்த கோந்தைக் கொண்டிருக்கின்ற மேற்பட்டையில் பல செல் விலகிய நாளங்கள் உள்ளன. பூக்கள் வெளிர் பச்சை நிறத்தில் பெரிய கூட்டு குடைமஞ்சரிகளில் உற்பத்திசெய்யப்படுகின்றன. பழங்கள் நீள்வட்ட, தட்டையாக, மெல்லியதாக சிவப்பு கலந்த மண்ணிறத்தில் உள்ளன மற்றும் அவை பால் சாற்றைக் கொண்டுள்ளன. வேர்கள் கடினமாகவும், மிகுதியாகவும் மற்றும் சதைப்பிடிப்பாகவும் உள்ளன. அவை தண்டுகளைப் போன்றே பசையையும் விளைவிக்கின்றன. தாவரத்தின் அனைத்துப் பகுதிகளும் தனிப்பட்ட துர்நாற்ற மணத்தைக் கொண்டுள்ளன

இது பெர்சியாவைஈரான் பிறப்பிடமாகக் கொண்ட பெருங்காய இனம் ஆகும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இது சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை வழங்குகின்றது. இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது.
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.
 கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும்.
 இந்த மசாலாப் பொருள் உணவில் சுவையூட்டுப் பொருளாகவும் ஊறுகாய்களிலும் செரிமானத்திற்கு உதவும் பொருளாக பயன்படுகின்றது. சமைக்காத போது அதன் துர்நாற்றம் கடுமையாக இருப்பதால் அதை காற்றுப்புகா கொள்கலன்களில் அடைத்து வைக்க வேண்டும்; இல்லையெனில் அந்த மணமானது அருகில் வைக்கப்பட்டுள்ள பிற மசாலாப் பொருட்களிலும் தொற்றிக்கொள்ளும். இருப்பினும், அதன் துர்நாற்றம் மற்றும் சுவை ஆகியவை மிதமாகவும் மற்றும் எண்ணை அல்லது நெய்யில் சூடாக்கும் வதக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை நினைவூட்டுகின்றது
பெருங்காயம் குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் குறைக்கின்றது. வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது
மருத்துவக் குணங்கள்:
  1. நம்ம தமிழ்நாட்டில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, கடவுளர்களின் மருந்து என்று குறிப்பிடுகிறார்கள்.
  2. பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது இதனுடைய வாசனை சமையலில் சேர்த்த பிறகு ஆளை அசத்தும்.
  3. ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் பெருங்காயச்செடி வளருகிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இதில் இரண்டு வகை இருக்கிறது.
  4. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை  உண்டாக்கும் குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.
  5. வாயுக்கோளாறை விரைவிலேயே சரி செய்யும்  மருந்து இது. தசைகளுக்கு பலம் கொடுக்கும், சீறுநீரோட அளவைப் பெருக்கும் என்று  ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கிறது.
  6. தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
 வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பல்வலிக்கும் பெருங்காயம் நல்ல மருந்து. பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், வலி நொடியில் பறந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.


பெருங்காயம் காய்ச்சி காதில்விட காதுவலி குணமாகும். காயத்தைச் சிறிது நெய்விட்டு பொரித்துப் பொடித்து 2-3 குன்றிஎடைவீதம் வெல்லத்துடன் சேர்த்து அருந்திவர வயிற்றுவலி, வயிற்றுப்புசம், அசீரணம் முதலியன குணமாகும். பொரித்த காயத்துடன் வெள்ளைப் பூண்டும் வெல்லமும் சேர்த்து அரைத்துக் கொடுத்துவர மாதர்களுக்கு பிரசவத்திற்குப்பின்காணும் உதிரச்சிக்கலை ந்ன்கு வெளிப்படுத்தும்.

பெருங்காயத்தை நீரில் இழைத்து வயிற்றின் மீது பற்றுப் போட்டு வர வயிற்றுப் பொருமல் குணமாகும்.
பெருங்காயம் கைப்பு சுவை உடையது. பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதற்கு முக்கியக் காரணம், அஜீரணம், வாத குடைச்சல், நாக்குப் பூச்சி பிரச்சினைகள் போன்றவற்றிற்கு பெருங்காயம் மருந்தாக அமைவதே.

வயிற்று உப்பசம் ஏற்பட்டவர்கள் மோரில் சிறிதளவு பெருங்காயத்தை கலந்து குடித்தால் நன்கு ஏப்பம் விட்டு, உப்பசம் குறையும்.

செரியாமை, மந்தம், புளியேப்பம், வாய்ப்பு, வயிற்றுவலி போன்றவற்றிற்கு பொரித்த பெருங்காயம், உலர்ந்த துளசி இலை சம அளவு எடுத்து சூரணம் செய்து கொள்ளவும்.

அதில் ஒரு கிராம் அளவு வெந்நீரில் உட்கொண்டு வர மேற்கூறிய பிரச்சினைகள் எளிதாக தீர்ந்து விடும்.

பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.
பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.

உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.
இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.
இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.
பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.
கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.
வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு பெரு‌ங்காய‌ம் ந‌ல்ல கை மரு‌ந்தாக ‌விள‌ங்கு‌கிறது.
பெரு‌ங்காய‌த்தை ‌நீ‌ரி‌ல் இழை‌த்து வ‌யி‌ற்‌றி‌ன் ‌மீது ப‌ற்று‌ப் போ‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பொரும‌ல் குணமாகு‌ம்.
பெரு‌ங்காய‌ம் கை‌ப்பு சுவை உடையது. பெரு‌ங்காய‌த்தை உண‌வி‌ல் சே‌ர்‌ப்பத‌ற்கு மு‌க்‌கிய‌க் காரண‌ம், அ‌ஜீரண‌ம், வாத குடை‌ச்ச‌ல், நா‌க்கு‌ப் பூ‌ச்‌சி ‌பிர‌ச்‌சினைக‌ள் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு பெரு‌ங்காய‌ம் மரு‌ந்தாக அமைவதே.
வ‌யி‌ற்று உ‌ப்பச‌ம் ஏ‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் மோ‌ரி‌ல் ‌சி‌றிதளவு பெரு‌ங்காய‌த்தை கல‌ந்து குடி‌த்தா‌ல் ந‌ன்கு ஏ‌ப்ப‌ம் ‌வி‌ட்டு, உ‌ப்பச‌ம் குறையு‌ம்.
செ‌ரியாமை, ம‌ந்த‌ம், பு‌ளியே‌ப்ப‌ம், வா‌ய்‌ப்பு, வ‌யி‌ற்றுவ‌லி போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு பொ‌ரி‌த்த பெரு‌ங்காய‌ம், உல‌ர்‌ந்த துள‌சி இலை சம அளவு எடு‌த்து சூரண‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம்.
அ‌தி‌ல் ஒரு ‌கிரா‌ம் அளவு வெ‌ந்‌நீ‌ரி‌ல் உ‌ட்கொ‌ண்டு வர மே‌ற்கூ‌றிய ‌பிர‌ச்‌சினைக‌ள் எ‌ளிதாக ‌தீ‌ர்‌ந்து ‌விடு‌ம்.
பாவப் பிரகாசர் எனும் முனிவர் பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக் கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும் கோளங்களில் படிந்துள்ள அழுக்கை அகற்றி ருசியைத் தூண்டிவிடும்). ஸ்த்ரீபுஷ்பஜனனம் (கருப்பையைச் சார்ந்த முட்டையை நன்றாக உற்பத்தி செய்து மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அதனால்தான் பிரசவித்தவுடன் தாய்க்கு இதைப் பொரித்துப் பூண்டு, பனை வெல்லம், இஞ்சிச் சாறு இவைகளுடன் கொடுப்பது உண்டு), பவ்யம் (உடலுக்கு வலுவைக் கூட்டும் பெருங்காயத்தை நெய்யில் பொரித்துத் தசமூலாரிஷ்டம், வில்வாதி லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சிட்டிகை சேர்த்து உணவிற்குப் பின் சாப்பிட, வயிற்றில் அஜீர்ணம், அஜீர்ண பேதி, குடலோட்டம், பசியின்மை, ஜீரண சக்திக் குறைவு ஆகியவற்றைப் போக்கி, உடலுக்கு வலுவைத் தரும்), மூர்ச்சாபஸ்மாரஹ்ருத்பரம் (மூர்ச்சை எனும் மயக்கநிலை, வலிப்பு ஆகிய நோய்களில் மிகவும் உபயோகமானது) என்று கூறுகிறா
பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம். 
 கருப்பையைக் காக்கும் இந்த காயமென்பதால், பிரசவித்த தாய்மார்க்கு, காயத்தைப் பொரித்து, இஞ்சி, பூண்டு, பனைவெல்லம் சேர்த்துக் கொடுப்பது அருமருந்தாகும்.

கட்டுக்கொடி

கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. தமிழகத்தில் எல்லாப்பகுதிகளிலும் வளர்கிறது. இதன் தாயகம் வட அமரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். 45 அடி நீளம் வரை படரக்கூடியது. பூத்துக் காய்காய்க்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் பழம் விடும். பழம் நீல நிறமாக 4 எம்.எம். உருண்டையானது. இலைச் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.
 


கட்டுக்கொடி வேர், ஒரு கைப்பிடியளவுடன், சுக்கு ஒரு துண்டு, மிளகு 4 சேர்த்து, ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு மணிக்கு ஒரு முறை 50 மில்லி வீதம் குடித்து வர வாதவலி, வாத நோய், கீல் நோய் குணமாகும்.

கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

கட்டுக்கொடியிலையைப் பாலில் அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர விந்து கட்டும். இடுப்பு வலி நீங்கும்.

கட்டுக்கொடி சமூலத்தை அரைத்து எலுமிச்சம்பழ அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மலக் கழிச்சல், பேதி நிற்கும். நீர்த்த இந்திரியம் கட்டும்.

 கட்டுக்கொடியிலையை அரைத்து கோலிக்குண்டு அளவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத்தயிருடன் கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் குடித்து வர பெரும்பாடு, இரத்தபோக்கு குணமாகும்

மருத்துவப் பயன்கள் :- 
இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.

பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.

இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.

பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.

இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.

சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.

இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.

கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.


கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தழர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள். ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

சிலந்தி நாயகம்.

சிலந்தி நாயகம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் காணப்படும். முக்கியமாக சாலையோரங்களில், ஆற்றங்கரைகளில், ஈரமான களிமண் நிலங்களிலும் அதிகமாகக் காணபடும். இதன் பிறப்பிடம் இந்தியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்கா. இது ஆசியாவிலிருந்து வட ஆப்பிருக்காவுக்குப் பரவியது. பசிபிக் தீவிலும் காணப்படும். இது ஒரு தரையில் படரக்கூடிய சிறு செடி. எதிர் அடுக்கில் அமைந்த ஈட்டி வடிவ பச்சை இலைகளையுடையது. இதன் பூக்கள் நீலம், வெள்ளை, கருஞ்சிவப்பு நிறங்களைக் கொண்டது. இதன் பூக்களை வடநாட்டில் Gangesprim rose என்றும், Chinese violet, Philippine violet Coromandal என்றும் அழைப்பார்கள். இதன் பூக்களுக்கு தேனிக்கள் அதிகமாக வரும். இதனால் மகரந்தச் சேர்க்கை உண்டாகும். இந்தப்பூ பட்டாம் பூச்சிகளை இழுக்கக் கூடிய சக்தியுடையது. வெடித்துச் சிதரக்கூடிய முற்றிய காய்களையுடையது. இதன் காய்ந்த காய் வெடிக்கும் போது சுமார் 18 அடி தூரத்தில் விதைகள் சிதரும். விதைகள் மரக்கலரில் இருக்கும். இதனை வெடிக்காய் செடி எனவும் அழைப்பார்கள். கட்டிங் மூலமும் விதை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
 
 மருத்துவப்பயன்கள் :- இந்தோனீசியாவில் இதன் இலைச்சாறு, எலுமிச்சன் சாறு மற்றும் வெங்காயச் சாறு சம அளவு எடுத்துக் கலக்கி வரட்டு இருமல், தொண்டைவலி, மற்றும் இருதய வலிகளுக்கு உபயோகிக்க குணமடைவதாகக் கூறுவர். பிலிப்பையின்ஸ் நாட்டில் இதன் இலை மற்றும் பூவை குடல் புண்ணுக்குப் பயன் படுத்துகிறார்கள். ஆப்பிரிக்காவில் பிரசவ வேதனைக்கும், கழுத்து வலிக்கும் இதைப்பயன் படுத்திகிறார்கள். வேரின் பொடியை வயிற்று வலிக்கும் பாம்புக்கடிக்கும் குணமாக்கப்
பயன்படுத்து கிறார்கள். இதன் இலையை நைஜீரியாவில் ஆஸ்த்துமாவிற்குப் பயன்படுத்திகிறார்கள்.

இலையை நீரின்றி அரைத்து நகச்சுற்றில் கட்டி வர உடைந்து, இரத்தம், சீழ்,முளை யாவும் வெளியேறிக் குணமாகும்.

இலைச் சாற்றுடன் (1 தேக்கரண்டி) சம அளவு பாலில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரக் கட்டிகள் வராது தடுக்கும். உள் உறுப்புகளில் உள்ள புற்று ரணங்கள் குணமாகும். இரத்த சர்க்கரை குறையும்.


பூ, பிஞ்சு ஆகியவற்றைப் பன்னீரில் போட்டு அத்துடன் 4 அரிசி எடை பொரித்த படிகாரம் கலந்து 4 மணி நேரம் கழித்து தெளிவு இறுத்து 2 துளி ஒரு நாளைக்கு 4 முறை கண்ணில் விடக் கண்கோளாறு, கண்வலி, பார்வை மங்கல், கண்சிவப்பு, கூச்சம் ஆகியவை தீரும்.

சமூலச்சாறு 60 மி.லி. கொடுத்து இலையை அரைத்து கடிவாயில் கட்டிக் கடும் பத்தியத்தில் இருக்க அனைத்துப் பாம்பு நஞ்சுகளும் தீரும்.

பனை



பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.
நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
 பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.​
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.
தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர  சீதக்கழிச்சல் நீங்கும்.
பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.
பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை  சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
 பதநீர் மகிமை..
""பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக.

பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இதை லிட்டர் 10 ரூபாய்க்கு வாங்கி, 20 ரூபாய் வரை விற்கிறேன். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',
சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.
பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.
பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.
பயன் தரும் பாகங்கள் -: நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.
வளரியல்பு -: பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 மருத்துவப் பயன்கள்- பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.
அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.
பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.
எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.
தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.