COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

அத்தி. FICUS GLOMERATA, FICUS AURICULATE.

தமிழர் வரலாற்றில் அத்தி மரத்திற்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அத்தி மரத்தில் செய்யப்பட்ட விஷ்ணு சிலை இன்றைக்கும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் 12 வருடத்திற்கு ஒருமுறை இழுப்பது என்பது உள்ளது.
அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி மரம். இந்த அத்தி 
மரம் மிகவும் வலிமையான மரம்.சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கிறது. சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி. அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே. அதை அதிகமாகப் பார்க்க முடியாது. அதனால்தான் இதுபோன்ற பழமொழி உண்டு. அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது. 

கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும். இனக்கமான சூழல் உருவாகும். தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும். அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய வைப்ரேஷன் என்று சொல்வோமே அது கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும். இதுபோன்ற அமைப்புகள் உண்டு. 

அதனால்தான் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு வீட்டிலுமே அத்தி மரம் இருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். இதுபோன்ற வைப்ரேஷன்கள் அத்தி மரத்திற்கு உண்டு. 
அதன்பிறகு, அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும். இதுபோன்ற அபார சக்தியும் அத்தி மரத்திற்கு உண்டு.
அத்தி கல்க மூலிகைகளில் ஒன்றாகும். தெய்வ அருள் பாவிக்கும் மரமும் ஆகும். பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது அதனால் இதை காணாமல் பூப் பூக்கும் கண்டு காய்காய்க்கும். என்ற விடுகதையிலும் சொல்வர். அடிமரத்திலும் மற்றும் கிழைகளிலும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். துவர்ப்பும் இனிப்பும் உடைய இதன் பழம் குருதி விருத்திக்கு உறுதுணையாகும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதில் உள்ள முக்கிய வேதியப் பொருட்கள், பட்டையில், செரில்பெஸ்ரஹென்னேட், லுப்பியால், எ-அமிரின் மற்றும் 3 இதர கூட்டுப் பொருடகள், ஸ்டீரால் மற்றும் க்ளானால் பழத்திலும், பீட்டா சிஸ்ஸடீரால் இலைகளிலும் உண்டு. விதை மற்றும் பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகி

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

அத்திப்பாலை மூட்டு வலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிசர்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த பொடியில் 5 கிராம் 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.

அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.

அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர்- காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

அத்திப்பழத்தை அப்படியே நாளும் 10-20 என்ற அளவில் சாப்பிடலாம். காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம். பதப்படுத்தி -5 நாட்கள் நிழலில் காயவைத்து-தேனில் போட்டு சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம். தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.

பிஞ்சு, காய், பட்டை ஆகியவை குருதி, சீழ்க்கசிவையடக்கும். பழம் மலமிளக்கி, குருதிப் பெருக்கும். பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படுகிறது. 

அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை, பாளையில் பால் சுரக்கும். இதன் வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

இதன் அடிமரப்பட்டையை இடித்துச் சாறெடுத்து 30-50 மி.லி.குடித்து வர பெரும்பாடு, குருதிப் போக்கு குணமாகும். மேக நோய், புண் குணமாகும், கருப்பை குற்றம் தீரும். பட்டையைக் கசாயமிட்டு அருந்தலாம்.

அத்தி மரத்தின் துளிர் வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம், வாந்தி குணமாகும். உலர்த்தி சூரணமாகவும் சாப்பிடலாம்.

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.
இதில் அத்திப்பூ பூப்பதே தெரியாது. அதனால் அத்தி மரப் பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடம்பு நன்றாக விருத்தியாகும். ரத்த விருத்தியெல்லாம் கொடுக்கும். அத்திக்காய், அத்திக்காய் பிஞ்சு இதையெல்லாம் பொரியல் செய்து சாப்பிட்டால் எல்லா சக்தியும் கிடைக்கும். குறிப்பாக தசை இறுகும். சிலருக்கு தொங்கு தசை இருக்கும். அதெல்லாம் நீங்கி, எலும்பு வலுப்பெறும்.
 விட்டமின் ஏ, பி, சி, டி என்று எல்லாமே இருக்கிறது. அதனால் அத்தி மரம் என்பது அவ்வளவு விசேஷமான மரம்.இலைகளை உலரவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

 உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் இரத்தம் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

மரத்தின் பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ வெளி மருந்தாக  பயன்படுத்தலாம்.
மரப்பட்டையை இடித்து, பசுவின் மோரில் உலர வைத்து, அதைக் குடித்தால் பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாதவிலக்கு கட்டுப்படும்.

அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம். இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும். இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை. பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.

அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.


கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் மனித உடலில் படும்போது பலவகையான உடல் மாற்றம், மன மாற்றம், நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 30 நிமிடம் கட்டிப் பிடிக்கலாம். அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.இவ்வாறு மூலிகை வைத்தியர் அப்துல் கௌஸர் கூறுகிறார்.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.   தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.  கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
 இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள். மேலும் இவை கல்லீரல் - மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

அது என்னமோ நமது இந்து மதத்தில் கடவுளர் ரூபங்கள் செய்து வழிபட அத்தி மரம் பெரிதும் பயன் படுகிறது .

உடுப்பியில் கூட கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .புதுவைக்கு அடுத்த வீரம் பட்டினம் என்ற ஊரில் மீனவ  கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரம் செங்கேணி அம்மன் சிலையாக செய்யப்பட்டு வழிபடப் படுகிறது .இதன் வருடாந்திர திருவிழக்கம் பிரெஞ்சு காலத்தில் இருந்து புகழ் பெற்றவை .பெரும் கூட்டத்தை ஈர்ப்பவை .

நகரேஷி காஞ்சி  எனப்படும் கோவில் நகரமான காஞ்சியில் பெருமாள் கோவிலான வரதராஜப் பெருமான் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் அத்திமரத்தால் ஆன வரதாராஜப் பெருமாளை அத்திவரதர் என்றே வழங்குவர். அத்தி பூத்தாற் போல் அவரும் 48 வருஷங்களுக்கு ஒரு முறை 48 நாள்கள் மட்டும் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அப்போது காஞ்சியே மக்கள் வெள்ளத்தில் எம்பெருமானைக் காண திமிலோகப்படும். பெருமானின் உடல் உஷ்ணத்தைக் காக்கவே நீருக்கு அடியில் உள்ளார் என்றும், அவர் அத்திமரத்தினால் ஆன சிலா ரூபம் சூடுதாங்க முடியாது, அதனால்தான் அவர் நீருக்கடியில் இருக்கிறார் என்றும் கூறுவர்.

அதேபோல் மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள சிறிய கிராமம் கோழிகுத்தி. இங்கு அத்திமரமே பெருமாளாக விஸ்வரூபக் காட்சியளிக்கும் ஒரே ஆலயம் வானமுட்டிப் பெருமாள் ஆலயம். பேருக்கு ஏற்றாற் போல் எம்பெருமான் விஸ்வரூபமாக சுமார் 14 அடி உயர அத்திமரக் காட்சி பார்க்கப் பார்க்கப் பரவசம். இக்கிராமத்தின் இயற்பெயர் கோடிஹத்தி பாப விமோசனபுரம் என்பதே ஆகும்.

அத்திப் பழத்திற்கு ரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தும் சக்தி உண்டு. நன்கு பதப்படுத்தப் பட்ட அத்திப்பழம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  மற்ற எல்லா மரங்களை விடவும் பறவைகளை ஈர்க்கும் சக்தி அத்தி மரத்திற்கு உள்ளது.

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

அகில்

திருக்காறாயில் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது அகில் மரமாகும். இது அகருமரம் என்றும் குறிக்கப்படுகின்றது. சிறகுக் கூட்டிலைகளையும், சமமற்ற சிற்றிலைகளையும் உடையது; தமிழக மலைக்காடுகளில் தானே வளர்கின்றது. இதன் கட்டை மணமுடையது; சந்தனம் போல் மணப்பொருளாய் பயன்பாட்டில் உள்ளது. இதன் தூளை தணலில் இட்டால் எழும்புகையானது மிகவும் நறுமணம் கொண்டதாக இருக்கு

அகில் என்பது சந்தனக் கட்டைக்கு அடுத்து மருத்துவ உலகிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்ற ஒன்றாகும். பலவித நோய்களைக் குணப்படுத்தும் இயல்பு கொண்ட இது மிகவும் மலிவாகப் பெறக்கூடிய ஒன்றாகும். அகில் சந்தனமர வகையைச் சேர்ந்த மர வகைகளில் ஒன்று. காடுகளில் பல இடங்களில் சந்தன மரத்தை ஒட்டியே அகில் மரங்களும் வளர்ந்திருப்பதைக் காணலாம். 


உடலில் வெப்ப உணர்வைத் தோற்றுவிப்பது இதன் இயல்பாகும். கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் ஆற்றலும் இதனிடம் அமைந்திருக்கிறது. உடலில் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதைக் குறைக்கும் சக்தி பெற்றது அகில். அகில் மரத்தின் கட்டை மட்டும்தான் மருத்துவச் சிறப்பு பெற்றுத் திகழ்கிறது. 

ஒற்றைத் தலைவலி, மண்டையிடி, சில வகைக் காய்ச்சல், பொதுவான வாத நோய்கள், படை மற்றும் சரும நோய்கள், வாந்தி, அருசி ஆகிய குறைபாடுகளை அகற்றும் ஆற்றல் பெற்றதாகத் திகழ்கிறது அகில். சரியானபடி மருத்துவப் பக்குவம் செய்து சாப்பிட்டால் நரை, திரை போன்ற முதுமைக் கால சருமக் குறைபாடுகளையும் அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். உடல் அயர்வினை உடனே போக்கும் இயல்பும் இதற்கு உண்டு. 

அகில் கட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 300 கிராம் அளவுக்கு மண் சட்டியில் போட்டு 30 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாகச் சுண்டக் காய்ந்ததும் வடிகட்டி ஆற வைத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு அவுண்ஸ் வீதம் காலை மாலை குடித்துவர உஷ்ணம் தொடர்பான வியாதிகளும், பித்தம் தொடர்பான பிணிகளும் விலகி நல்ல குணம் தெரியும். குறிப்பாக பித்தம் தொடர்பாக ஏற்படும் காய்ச்சலுக்கு இது நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. 

அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தி விட வேண்டும். சிறிது எரிந்த பின்னர் நெருப்பை ஊதி அணைத்துவிட்டு அதிலிருந்து வரும் புகையை மட்டும் மூக்கு, வாய் வழியாக உள்ளுக்கு இழுத்தால் கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமாகிவிடும். வாந்தி ஏற்படும் பொழுது இவ்வாறு புகை பிடித்தால் வாந்தி நின்றுவிடும். சுவாசகோசத்தில் ஏற்படக் கூடிய அழற்சியும் சமன்படும். உடலில் ரணங்கள் ஏற்பட்டிருந்தால் அதன்மீது அகில் புகைபடுமாறு செய்தால் ரணம் வெகு விரைவில் குணமாகிவிடும். 

அகில் கட்டியை பசுவின் பால்விட்டு நன்றாக அரைக்க வேண்டும். சந்தனம் அரைப்பது போல அரைக்க வேண்டும். அரைத்த விழுதை உடல் சருமத்தில் தொடர்ந்து பூசி வந்தால் சருமத்தின் சுருக்கம் அகன்றுவிடும். ஊளைச்சதை எனப்படும், அதிக சதை போட்ட உடலைப் பெற்றவர்கள் இந்த அகில் கட்டை விழுதை தொடர்ந்து உடலில் பூசி வந்தால் சதை குறைந்து இறுகி உடல் நல்ல கட்டமைப்பாகக் காட்சியளிக்கும்.

அகில் கட்டியைக் கொண்டு ஒரு தைலம் தயாரிக்கலாம். இந்தத் தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் உட்புறத்தில் ஏற்படக் கூடிய பல பிணிகளை அகற்றும். தலைவலியையும் குணமாக்கும்.

அகில் கட்டை வயோதிகர்களுடைய தளர்ந்த தேகத்தையும் இறுகச் செய்யும்.  இதன் வாசனையால் சிற்சில சுரம் நீங்கும்.  புகையால் வாந்தியும், பசியின்மையும், அழற்சியும் நீங்கும்.  அகில் கட்டை இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.


அகில் கட்டை தைலம் தயாரிக்கும் முறை:

அகில் கட்டையைச் சிறி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு நறுக்கப் பட்ட துண்டுகளை 300 கிராம் அளவு சேகரித்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்ச வேண்டும். தண்ணீர் ஒரு லிட்டராக சுண்டக் காய்ந்த பின்பு இறக்கி வடிகட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நீருடன் ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கூட்டி அடுப்பிலேற்றிக் காய்ச்ச வேண்டும். அடுப்பிலிருக்கும் சாறு சுண்டும் நேரம் அதிமதுரம் 30 கிராம், தான்றிக்காய் 30 கிராம் தூள் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை பாதிக்கப்பட்ட உறுக்குகளின் உள்ளே விட்டு வரவேண்டும். மேற்பூச்சாகவும் தடவலாம். எண்ணெய்க் குளியல் போலவும் செய்து வரலாம். 

அகருக் கட்டையினால் மூக்கடைப்பு, தலைகுத்து, வாதம், நமைப்புடைகள், சிற்சில சுரம், வாந்தி, அருசி, அயர்வு, ஆகிய இவைகள் நீங்கும். தளர்ந்த உடல் இறுகும்.

மேலும்,
அகிற்கட்டையை நீர் விட்டுச் சந்தனம் போலரைத்து, உடலில் பூசிக்கொண்டுவர, தளர்ந்த உடல் இறுகும்.
இதன் புகை மணத்தால் சிற்சில சுரவெப்பம் நீங்கும்.

அகில் கட்டையைப் புகைத்து முகரினும், அல்லது இக் கட்டையின் புகை மேல் படும்படி செய்யினும், அயர்ச்சி, வாந்தி, சுவையின்மை தீரும். இதைப் புண்களுக்கும் புகைக்கலாம்.

இக் கட்டையாலாக்கிய தூள் ஆண்மைப் பெருக்கத்துக்காக செய்யப்படும் சில மருந்துகளில் சேருகிறது.

அகிற்கட்டைத் தைலத்தை முடித்தைலமாகப் பயன்படுத்த, நீர்க்கோவை, மேகம், மூக்கடைப்பு முதலிய நோய்கள் நீங்கும்.

அகிற்கட்டைத் தைலம்:
அகிற்கட்டைக் குடிநீர், நல்லெண்ணெய், பசுவின்பால் வகைக்கு 1.3 லிட்டர் எடுத்து ஒன்று கூட்டி அத்துடன் அதிமதுரம், தான்றிக்காய்த்தோல் வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டரைத்துக் கலந்து, எரித்துப் தைலம் பதத்தில் வடித்தெடுத்துக்கொள்ளவும்.



அகில் கட்டை தைலம் -1

அகில் கட்டையை  சிறிது சிறிதாக நறுக்கி நீரில் போட்டு வற்றக் காய்ச்சி அதனுடன் நல்லெண்ணெய், பசுவின் பால் வகைக்கு 750 மி.லி. எடுத்து ஒன்றாக்கி வைத்துக்கொண்டு  அதிமதுரம், தான்றிக்காய் தோடு வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து சேர்த்து லேசாக கொதிக்க வைத்து வடித்து எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும்.  மூக்கடைப்பு, தலையில் நீரேற்றம், ஒற்றைத் தலைவலி போன்றவை நீங்கும்.

· அடிக்கடி சளி பிடிப்பதைத் தடுக்கும்.

· தலைமுடி நன்கு வளரும். பொடுகு, முடி உதிர்தல், புழுவெட்டு நீங்கும்.

· அகில் எண்ணெயை சருமம் முழுவதும் பூசிக் கொண்டால் சரும நோய்கள் உண்டாகாது.

· அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டு போன்றவற்றிற்கு அகில் எண்ணெயை பூசினால் வீக்கம் குறையும்.  வலி நீங்கும்.

· சரும எரிச்சல், புண், அரிப்பு, சொறி, சிரங்கு போன்றவைற்றைப் போக்கும்.

· இதன் நறுமணத்தை நுகர்ந்தால் வாந்தி, மயக்கம் நீங்கும்.

· கை, கால் மூட்டுகளில் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

· அகில் கட்டையை நீர்விட்டு மை போல் நன்கு அரைத்து உடல் எங்கும்  பூசி வந்தால் தளர்ந்த தசைகள் இறுகி வலுப்பெறும்.  உடல் பொலிவுபெறும்.

· அகில் கட்டையை நெருப்பில் காட்டி வரும் புகையை நுகர்ந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும்.  வாந்தி சுவையின்மையைப் போக்கும்.

· இதன் நறுமணம் மனதிற்கு நல்ல அமைதியையும் சாந்தத்தையும் கொடுக்கும்.

அசோக மரம்

,
மணாளனைப் பிரிந்து நெருப்பிலிட்ட புழுவாய்த் துடித்த சீதாதேவிக்கு, அந்த வனத்தில் இருந்த அசோக மரங்களே சோகத்தை விரட்ட தைரியம் அளித்தன.

அப்பேர்ப்பட்ட அசோக மரம், ஸ்ரீராம பிரான்- சீதாதேவியின் அருட்பார்வைக்கு உட்பட்டு, இன்று அகிலமெல்லாம் கன்னியரின் மனக்குறையைப் போக்கும் தேவ மருந்தாய் பயன்பட்டு வருகிறது. 


கருப்பைக் கோளாறுகள் தீர...

ஒரு பெண்ணின் முழுமை நிலை என்பது அவள் கருத்தரித்து தாய்மையடைந்த பின்னரே உண்டாகிறது. பிள்ளைப் பேறில்லாப் பெண்களை சமூகம் எள்ளி நகையாடுகிறது. தாய்மையடையாத பெண்கள் மன உளைச்சல், வேதனைக்கு உட்பட்டு, நோய்வாய்ப்பட்டு, கடைசியில் மனம் 

பேதலித்து, வாழ்க்கையை வெறுத்து, யாருடனும் ஒட்டாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பேரமுதமாய் இறைவன் அளித்த மூலிகையே அசோக மரமாகும்.

அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம்- இரண்டையும் அரைத் துத் தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்யவும். இதனை காலை- மாலை இரு வேளையும் உண்டு வர வேண்டும்.

இதனால் கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையை யும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள் போன்ற அனைத் தையும் ஓட விரட்டி, உங்கள் வயிற்றிலும் முத்தான பிள்ளைகள் அவதரிப்பார்கள்.
நீங்கள் ஆயிரம் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அசோகினை வழிபட்டு வணங்குங்கள்.


மாதவிலக்குக் கோளாறுகள் சீராக...

ஒரு பெண் தாய்மையடைய இயற்கை சில நியதிகளை வைத்துள்ளது. ஒரு பெண்ணுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை முறையாக மாதாந் திர ருது சுழற்சியாக வந்து கொண்டிருந்தால், அதுவே அவளின் ஆரோக்கியத்தின் அறிகுறி.

பல்வேறு வகையான உடல் சார்ந்த குறைபாடுகளினால் மாதவிலக்கு முறையாக வராமல் போகலாம். அதற்கெல்லாம் கண் கண்ட மருந்து அசோகுவேயன்றி வேறில்லை.

கால் கிலோ அசோகப் பட்டை, மாவிலங் கப் பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று கிராம் அளவு காலை- மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.

மாதவிடாயில் உண்டாகும் வயிற்றுவலி குணமாக...

100 கிராம் அசோகப் பட்டைத் தூளுடன் 25 கிராம் பெருங்காயத்தூளைக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும். இறையாய் பவனி வரும் இயற்கை மருந்தை விட்டொழித்து, நாகரீகம் என்ற பெயரில் கண்டதற்கெல்லாம் நவீன மருந்துகளைப் பயன்படுத்தி வயிற்றைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு மூலிகையும் இறையம்சம் கொண்டதே. நீங்கள்தான் உங்களின் நுண்ணறிவு கொண்டு, அவற்றின் தன்மையை உணர்ந்து மருந்தாக்கிக் கொள்ள வேண்டும்.

மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு உண்டாகிறதா?


கருப்பை புண்ணாகிப்போன நிலை, கருப்பையில் உண்டாகும் சில தொற்றுகள், கருப்பை சற்று கீழே இறங்கிவிடுதல், உடம்பில் இயல்பான அளவில் இருக்க வேண்டிய சத்துகள் குறைந்துவிடுதல், ரத்தப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாத விலக்கில் அதிக ரத்தப்போக்கு உண்டாகலாம்.

ஒரு பெண் என்பவள் செழிப்பான பயிர் களை விளைவிக்கும் வளமையான மண்ணைப் போல் இருக்க வேண்டும். உப்புப் பூத்த நிலத்தில் ஒரு பயிரும் விளைவதில்லை. அதேபோல் இயல்பான உடலமைப்பில் இருந்து ஒரு பெண் மாறி உப்பிப் போயிருந்தால், அவளின் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைந்துவிடும்.

உடம்பு உப்புதல் என்பது, உடல் பருத்தல் என்பதாகும். உடல் பருத்தல் என்பது, உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் தன் நிலையில் இருந்து மாறுபட்ட தன்மையாகும். இத்தகைய உடல் மாறுபாடு குழந்தையின்மைக்கு மிக முக்கிய காரணம்.

அதிக ரத்தப்போக்கினை அலட்சியப்படுத் தாமல் அசோகினை சரணடையுங்கள். ஐந்து கிராம் அசோகப் பட்டைப் பொடியை கட்டித் தயிரில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர, ரத்தப்போக்கு உடனே நிற்கும்.

நீங்கள் ஒன்றை மட்டும் கவனியுங்கள். மாதவிலக்கை முறைப்படுத்துவதற்கும், மாத விலக்கில் உண்டாகும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கும் ஒரே மருந்து அசோகப் பட்டைதான். இதேபோல் முரண்பட்ட இரு பிரச்சினைகளுக்கு ஒரே மருந்தை எந்த மருத்துவ முறையாலும் தர இயலாது.

இது தவிர, பல்வேறு நோய்களைக் குணமாக்கும் தன்மை அசோக மரத்திற்கு உண்டு.

ரத்தபேதி, சீதபேதி, வெள்ளைப்படுதல், சர்க்கரை நோய், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, சிறுநீரக வியாதிகள், சிறுநீரகக் கல் போன்ற வியாதிகளை அசோக மரம் அதிசயமாய் குணமாக்கும்.

அசோகப் பட்டையைத் தனியாகச் சாப்பிடும்பொழுது, மலச்சிக்கல் உண்டாவ தாய் நீங்கள் உணர்ந்தால், அத்துடன் சம அளவு கடுக்காய் கலந்து சாப்பிட்டு வரவும்.

கன்னியரே! உங்கள் நோயால் உங்களுக்கு உண்டாகும் சோகத்தை விரட்ட அசோகம் காத்திருக்கிறது. உங்கள் கருப்பையை வள மாக்கி, உங்களுக்கும் லவ- குசர்கள்போல் பேரறிவு படைத்த பெருமக்களை வழங்க அசோகம் காத்திருக்கிறது. வரும் ராம நவமியில் பிள்ளைப்பேறு விழையும் கன்னியர் கள் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியையும் சீதா பிராட்டியாரையும் வழிபட்டு வணங்கி விரும்பியதைப் பெறலாம். 

அரசு



அரசு என்பது அரச மரத்தைக் குறிக்கும். அரசு எல்லா மரங்களுக்கும் தலையாயது.அதுபோல் எல்லாத் தெய்வங்களுக்கும் தலைமையானவர் சிவன். அரசு தல விருட்சமாகப் பல திருக்கோயில்களில் இடம் பெற்றிருப்பதை நாம் காண்கிறோம்.அரசு மரத்துக்குப் போதிமரம் என்றொரு பெயரும் உண்டு. புத்தர் பிரான் ஞானம் பெற்ற இடம் போதி மரம். எனவே அரச மரம் ஞானத்தின் சொருபம்.

கூரிய இலைகளையுடைய பெருமரம். ஊர் ஏரி, குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது. தமிழகம் எங்கும் காணப்படுகிறது. கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

கொழுந்து வெப்பு அகற்றித் தாகந்தணிப்பானாகவும், விதை காமம் பெருக்கியாகவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும்.

1. துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும்.

2. வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி யாகக் காய்ச்சிப் பால் சர்க்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச் சூடு, சொறி, தினவு, நீர்எரிச்சல், சிரங்கு ஆகியவை தீரும்.

3. மரப்பட்டைத் தூள் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து புண் சொறிகளுக்குப் பூசக் குணமாகும்.

4. பட்டைத் தூள் 2 சிட்டிகை நீரில் ஊற வைத்து வடிகட்டிக் கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.

5. அரசு விதைத் தூள் உயிர் அணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டை நீக்கும்.

6. அரசங் கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியவை தீரும்.

7. உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாள்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்.

அதிமதுரம் (Glycyrrhiza glabra )


 அதிமதுரம் 
               என அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர்Glycyrrhiza glabra  என்பதாகும்.
                வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள்
சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி,
பாம்பு இவற்றின் விஷம் நீங்கும்.ஒன்றரை அடி உயரம் வளரும் இச்செடி இயற்கையாக மலைப்பகுதிகளில் விளைகிறது. இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3 செ.மீ வரை நீளமாக சிறு முட்களுடன் காணப்படும். வேர்கள் கிளைத்தவை. இவை சிறியதும் பெரியதுமாக உட்புறம் மஞ்சள் நிறமாகவும், வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாகவும் காணப்படும். வேர்களே மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகின்றன. மேலும், இவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிமதுரம் வாணிப ரீதியாகப் பயிரிடப்படுகிறது. அதிங்கம்,அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதுரம் ஆகிய மாற்றுப் பெயர்களும் அதிமதுரத்திற்கு உண்டு. அதிமதுரம் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும்.
                ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் நெல் வயல்களில் அதிமதுரமும் அடர்ந்த களைச்செடியாக வளர்கிறது.
                இலைகள் இனிப்பு சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. வேர்கள் குளிர்ச்சித் தன்மை கொண்டவை. வேர் புண்கள், தாகம், இருமல்,தலைநோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை, ஒற்றைத் தலைவலி ஆகியவற்றை கட்டுப்படுத்தும். முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையைப் பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு. ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும்.அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.


கருத்தரிக்க உதவும்....
அதிமதுரம், திரலட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50-100 கிரலம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள்முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வலை 2,3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
தாய்ப்பால் பெருக....
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒருகிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச்சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
கல்லடைப்பு நீங்க....
ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், நீர்க்கடுப்பை போக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
இருமல் நீங்க....
அதிமதுரம், கடுககாய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
இளநரை நீக்க....
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...


அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.



பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...


அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.


மஞ்சள் காமாலை நீங்க...
அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...


அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.


தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.


பெண் மலடு நீங்க...
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.


மலச்சிக்கல் நீங்க...


அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.


சூடு தணிந்து சுறுசுறுப்பாக...
சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.


 நன்கு உலர்ந்த இதன் தண்டு மருத்துவப் பயனாகும். சளியகற்றுதல், வெப்பகற்றுதல்,ஆகியமருத்துவப் பயனுடையது.
1. 1 அல்லது 2 கிராம் அதிமதுரப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை,தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும். இருமல்,மூலம், தொண்டைக் கரகரப்பு, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.
2. அதிமதுரப் பொடி, சந்தனத் தூள் ஆகியவற்றை சமமாகக் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்துவர இரத்த வாந்தி நிற்கும். உள் உறுப்புகளின் புண் ஆறும்.
3. அதிமதுரம், திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் சம அளவாகக் கொடுக்க நெஞ்சுச்சளி தீரும்.
ரத்த வாந்தி நிற்க...


அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.


தாய்ப்பால் பெருக....
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.


வரட்டு இருமல் நீங்க...


அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.


இளநரை நீக்க...
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.


நெஞ்சுச் சளி நீங்க....
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க...



அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..


மஞ்சள்காமாலை தீர...
அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.


தாது விருத்திக்கு...


அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.


கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.


வழுக்கை நீங்கி முடி வளர


அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.


தலைவலிகள் நீக்க...


அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.


தொண்டை கரகரப்பு நீங்க...
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.


ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...


பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.


மஞ்சள்(Curcuma longa)

மஞ்சளின் வகைகள்
  • முட்டா மஞ்சள்
  • கஸ்தூரி மஞ்சள்
  • விரலி மஞ்சள்
  • கரிமஞ்சள்
  • நாக மஞ்சள்
  • காஞ்சிரத்தின மஞ்சள்
  • குரங்கு மஞ்சள்
  • குடமஞ்சள்
  • காட்டு மஞ்சள்
  • பலா மஞ்சள்
  • மர மஞ்சள்
  • ஆலப்புழை மஞ்ச

  • மஞ்சள் ஒரு கிருமி நாசினி

    மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்தவர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள்.
    மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.
    மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.
    மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப்பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.
    கலப்படமில்லாமல் மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான். சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்துபபயன்படுத்துங்கள்.
    • மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.
    • பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
    • மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
    • மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.
    • மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
    • மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
    • மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
    • மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்.
    • மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்
    • மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும்.
    • மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்.
    • மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்.
    • தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.
    • மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்[
    • மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்.
    • மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்
    • மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.
    • மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.
    • அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.
    • அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.
    • பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.
      • நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை. மஞ்சள் பூசிய முகத்திற்கு முன்பெல்லாம் அதிக மவுசு உண்டு. இப்போது கிராமப் பெண்கள் தான் மஞ்சள் பூசுகின்றனர்; அதுவும் ஒரு சிலரே.
        இந்திய கலாசாரத்தில் மஞ்சளின் முக்கியத்துவம்: இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.
      •          மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
      • மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
      • மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன.
      • மஞ்சள்தூளைத் திரவ வடிவத்தில் பயன்படுத்தி வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதரண இயல்பு நிலையில் திரவ மஞ்சள் ஒரு மெல்லிய படலமாக இடப்பட்டால் ஒளியை உறிஞ்சி மிளிரும் தன்மை கொண்டது, மஞ்சளில் உள்ள வேதிப்பொருளானது டி.என்.டி (TNT) போன்ற வெடிபொருட்களின் மூலக்கூறுகளை வளியில் இருந்து அகத்துறிஞ்சுவதனால் மஞ்சளின் ஒளிவெளிவிடும் தன்மை மாற்றம் அடைகின்றது; மிளிரும் தன்மை குறைகின்றது. 
    • பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.
    • மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.
    • மஞ்சளின் மருத்துவ குணம்:
      * வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.
      * உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.
      * ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.
      * உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.
      * மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.
      * மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

      மஞ்சளின் நிறத்தில் உள்ள குர்குமின்வகை வேதிப் பொருட்களின் விளைவே ஆகும். அது மட்டுமல்ல மஞ்சளின் காரச் சுவைக்கும் இந்த வேதிப்பொருளே காரணம். டரிமெரோன் வகை வேதிப்பொருட்கள் மற்றும் லிங்காபரின் வேதிப்பொருள் முதலியவை மஞ்சளின் மணத்திற்குக் காரணம்.

      ஆர்த்தி கரைசல் மஞ்சளும் வெள்ளைச் சுண்ணாம்பும் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இரண்டும் கலந்ததும் கரைசல் இரத்தச் சிகப்பாக மாறுகிறது அல்லவா? சுண்ணாம்பு, காரப் பொருள் - ஆல்லி. அதுபோல அமிலம்- ஆசிடுனும் மஞ்சள் வினைவுரியும். ஆகவே மஞ்சள் வேதி சுட்டி – Chemical Indicater- ஆக பயன்படுத்தப்படுகிறது. PH 7.4-ல் மஞ்சளாக உள்ளது PH 8.6-க்கு மேல் சிவப்பாக மாறும்.
                 மேலும் குர்குமினாய்ட் வகை வேதிப்பொருட்கள் நுண்ணுயிர் கொல்லியாகவும் சீழ் எதிர்ப்பியாகவும் செயல் படுகிறது என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் வெட்டுப் புண்ணுக்கு மஞ்சள் பத்துபோடுவது. அம்மை தழும்பு ஏற்படாமல் தடுக்கப் பூசுவது போன்றவற்றில் மருத்துவ காரணி குர்குமினாய்டு வேதிப்பொருள்தான். மேலும் பாலுடன் மஞ்சள் சேர்த்து குடிப்பதன் வழி தொண்டைப் புண் ஆற்றுவது முதலிய பழக்கங்களையும் நவீன அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது