COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

சுண்டை


சுண்டைச் செடி , ஏறத்தாழ் ஓர் ஆள் உயரத்துக்கு வளரும்.இதனை வீடுகளில் வளர்க்கலாம்.சிறிய முட்கள் கொண்டது.வெள்ளை நிறப்பூக்கள் கொத்து கொத்தாகப் பூத்து காய்களாக மாறுகின்றன.சுண்டைக் காயை குழம்பில் போட்டும் கறி செய்தும் சாப்பிடலாம்.மருத்துவ குணம் கொண்டது.

ஒரு மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் உபயோகப்படும் ஒரு செடியாகும். சுவாசப் பாதை நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்பு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. 
சுண்டை ஒரு பெருஞ்செடி இனத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5 அடி முதல் 10 அடி உயரம் கூட வளரக்கூடியது. எல்லா வித மண் வளத்திலும் வளரக்கூடியது. இதற்கு ஆங்கிலத்தில் TURKEY BERRY என்று சொல்வார்கள். சுண்டையில் இரு வகையுண்டு.  மலை காடுகளில் தானே வளர்வதை மலைச்சுண்டை என்றும், தோட்டங்களிலும் சம வெளியிலும் வளர்வதை ஆனைச்சுண்டை அல்லது பால் சுண்டை என்றும் சொல்வர். அகன்ற இறகாக உடைந்த நேர் அடுக்கில் அமைந்த இலைகளையும் வெண்நிரப் பூங் கொத்துக்களையும், உருண்டையான காய்களையும் உடைய முள்ளுள்ள செடியாகும். பச்சைக் காய்கள் பழுத்தால் மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழம் காய்ந்தால் மரநிர வத்தலாக மாறிவிடும். ஒரு பழத்தில் சுமார் 200 விதைகள் இருக்கும். காய்  சற்று கசப்புடையது.  வற்றலாகக் கடைகளில் கிடைக்கும்.. இதை இன விருத்தி செய்ய விதைமூலமாகவும், கிழைகளை வெட்டி வைத்து முறைப்படி வளர்த்தியும் பயிரிடுவார்கள். 

 வேறு பெயர்கள் :- கடுகிபலம், பீதித்தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி.
மருத்துவப் பயன்கள் :- 
சுண்டை கோழையகற்றியாகவும்,   வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும், சுண்டைக் கசாயம் பாம்புக்கடி வீரியம் குறைக்கவும், நீரிழிவு நோய், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு முதலியன குணமாக்கக் கூடியது. மலேசியாவில் இதன் விதையை பல் வலி குறையப் பயன்படுத்துகிறார்கள். வியட்னாமில் இதன் இலையை மாதவிடாய் தொல்லைக்கும், தோல் வியாதியைப் போக்கவும் பயன்படுத்துகிறார்கள். இதன் பழம் சாப்பிட்டால் வயிற்றுவலி போகும்.

பால் சுண்டைக் காயைச்சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி முதலியன தீரும்.

உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின் காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில்  பயன் படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீரும். வயிற்றுப் போக்கு நின்று விடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம்  ஆகியவை தனித்தனியே எடுத்து இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து இடித்த சூரணம் காலை, மாலை 2 சிட்டிகை ஒரு டம்ளர் மோரில் சாப்பிட்டு வர பேதி, மூலம், பசியின்மை, மார்ச்சளி, நீரிழுவு தீரும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை தீரும்.

இதன் வேர்ப்பட்டையை பொடிசெயுது தேய்காய் தொட்டியில் வைத்து ஒரு சிட்டிகை மூக்கிலிட்டு உள் இழுக்க தலைநோய், நீரேற்றம், மண்டைக் குடச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் நிற்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பைப் பிண்ணாக்கு சம அளவு எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழப்பு நோய் தணியும்.

சுண்டை வேர்  ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாச்சல் குணமாகும்.

இதன் வத்தலை காயவைத்து அதனுடன் புளித்த மோர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து உணவுடன் உண்ண நீரிழிவு நோய் குறையும்.
மருத்துவக் குணங்கள்:
  1. பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
  2. சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
  3. சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.
  4. சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
  5. சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.
  6. சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.
  7. சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
  8. சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.
  9. சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
  10. சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.
  11.  சுண்டைக்காயில் இருவகை உண்டு.

    1. காட்டுச் சுண்டை

    2. நாட்டுச் சுண்டை எனப் படும் யானைச் சுண்டை.

    மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை.  இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

    வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம்.  இவற்றின் மருத்துவப்பயன்கள் ஒன்றே.

    நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
    விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே
    வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
    காயைச் சுவைப்பவர்க்குக் காண்
    (அகத்தியர் குணபாடம்)

    குணம் - ஐயம், நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், வளிப்பெருக்கு இவை போகும்.
    சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.  சுண்டைக்காய் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.  சிறுகசப்பு சுவை உடையது.  இதை வாரம் இருமுறை சாப்பிடுவந்தால் இரத்தம் சுத்தமடையும்.  உடற்சோர்வு நீங்கும்.

    மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.  வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.  குடற்புண்களை ஆற்றும்.

    வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மும்முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும்.  வயிற்றுப்புண் ஆறும்.  வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

    சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும். 

    சுண்டைக்காய்     - 10
    மிளகு        - 5
    கறிவேப்பிலை    - 10 இலை

    இவைகளை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.

    சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்.  மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.

    சுண்டைக்காய் சூப்

    சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு,  சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும்.

    இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும்.  உடல் சோர்வை நீக்கும்.  தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.

    மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.  ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

    சுண்டைக்காய் வற்றல்

    முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.  இது மார்புச்சளியைப் போக்கும்.  குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

    சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல் நீங்கும்

மகிழமரம்:

பண்டைய தமிழ் மக்கள் பாரிய கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கும்போது மகிழமரக் கன்று ஒன்றை நட்டு மகிழ்ந்தார்கள். மகிழ மரமும் அதன் மலரின் மணமும் வித்தும் பலத்த விருத்தழயையும் பல ரோகங்களை நீக்கும் சக்தியையும் கொண்டவை.
மகிழமரம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. மேற்குத் தோடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. இதற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. இதன் பூர்வீகம் வட ஆசியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் வட ஆஸ்திரேலியா. இதன் உயரம் 20 முதல் 50 அடி உயரம் வளரக்கூடியது. அடர்த்தியான இலைகளையுடைய பசுமை மரம். நல்ல நிழல் தரும் மரம். மனதைக் கவரும் இனிய மணமுடைய கொத்தான வெள்ளைப் பூக்களையும் மஞ்சள் நிற சாப்பிடக் கூடிய பழங்களையும் உடைய மரம். பூவின் மணத்திற்காக நகரங்களில் பூங்காவிலும் கோயில் களிலும், வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இதன் மணம் மனதை மகிழவைக்கும். மகிழமரம் விதை நாற்றுக்கள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
 மகிழ மரத்தின் மலர்கள் சக்கர வடிவத்தில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும். பழந்தமிழ் இலக்கியமான சீவகசிந்தாமணியில் “ஓடுதேர்க்கான் வகுளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கனிகள் முட்டை வடிவில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இந்த மரத்தின் பூவை மணம் உடையதாகவும், இப்பூவிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பூவில் காய்ந்த பிறகும் நறுமணம் வீசும் என்றும்,இது மகிழவனேஸ்வரர் என்றசொல்லப்படும் சிவனுக்கு உரிய பூ என்பதால் ஆகவே இது சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் என்றும் சொல்லப்படுகிறது
மருதுதுவப் பயன்கள் -: மகிழமரத்தின் பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும். தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும்.

பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.

கருவேலம் பற்பொடியில் பல் துலக்கி மகிழ இலைக் கியழத்தால் வாய் கொப்பளித்து வர பல் நோய் அனைத்தும் தீரும்.

மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும்.

10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து 50 மி.லியாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். காய்ச்சல் தணியும்.

மகிழங் காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும்.

மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்ட் வர தாது விருத்தியாகும். உடல் வெப்பு, மலக்கட்டு, நஞ்சு ஆகியவை தீரும்.

மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அறிந்தி வர காச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோழ்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். மூத்திர எரிச்சல் குறையும். பழத்தை குடநீராக்கிக் குடிக்க குழந்தை பிறப்பின் போது எழிதாக இருக்கும். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது.

"தாதுவைநன் மெய்யழகைச் சக்தியை உண்டாக்கிவிடுஞ்
              சீதளமென்பார் கலிங்கச் செய்மருந்தாம் - வாதை
              மலத்தைவிழித் தோஷத்தை வலவிஷத்தை வெப்பை
              விலக்கும் மகிழம் விதை
              வெகு வனலமாகு விரதமிக வுண்டா
              முகர வரோசக முறியு மிகவு
              மகிழத் துரு மலர்க்க",,,,,,,முகையதீன் ராவுத்தர்
                                                  

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

வகுளத்தின் மருத்துவப் பயன்களுக்கு அடிப்படையாக அமைபவை குர்சிடால், குர்சிடின், அமினோஅமிலங்கள், டி.குளுக்கோஸ், லுபியோல், பெட்டுலினிக் அமிலம் போன்றவை.. இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது.

காமம் பெருக்கும் மலர்கள்

மணமிக்க மலர்களில் இருந்து வாசனைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. மகிழம்பூவில் இருந்து எண்ணெய் எடுத்து அதில் சந்தனமர எண்ணெய் கலந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கலாம்.

மலர்களின் பொடி மூக்குப்பொடியாக உள்ளிழுக்கப்பட்டு தலைவலி போக்க உதவுகிறது. பூ தாது வெப்பமகற்றும், காமம் பெருக்கும், விதை குளிர்ச்சியூட்டும், தாதுபலம் பெருக்கும், நஞ்சு நீக்கும். மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். பட்டை, சத்து மருந்தாகவும் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அருந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோல்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது.

நறுமணம் மிக்க மகிழமரத்தின் பூக்களை நுகர்ந்தலே சளி வெளியேறும், தலைவலி குணமடையும், உற்சாகம் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். மகிழம்பூவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் காயம் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. காய்ச்சலுக்கு டானிக் போல பயன்படுத்தலாம்.

கருவை பாதுகாக்கும்
பெண்களின் கருத்தரித்தலை ஊக்குவிக்கும். 10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து தினம் 50 மில்லி காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். பழத்தை சாறுபிழிந்து குடிக்க குழந்தை பிறப்பின் போது எளிதாக இருக்கும்.

கனிகள் தொடர் வயிற்றுப் போக்கினை தடுக்கும். விதைகள் வயிற்றுப்போக்கினை தூண்டக்கூடியது. குழந்தைகளின் மலச்சிக்கலை போக்க வல்லது. மலர்கள் கனிகளுடன் சேர்ந்து சதை இருக்கிப் பொருளாக புண்களைக் குணப்படுத்துகிறது.

பல்நோய் குணமடையும்

மகிழம்பூ கசாய நீர் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களில் கொப்பளிப்பாக பயன்படுகிறது. இதனைக் கொண்டு வாய்க்கொப்பளிக்க பற்களும், ஈறுகளும் கெட்டிப்படும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும். மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும். பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.

கண் நோய்க்கான சொட்டுமருந்து தயாரிக்க மகிழமரத்தின் விதைகள் பயன்படுகின்றன. விதையில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து வயிற்று வலியை குணப்படுத்துகிறது. விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மூட்டுவலிக்கு மருந்தாகிறது. விதைகளை பவுடராக்கி அதில் தேன், நெய் கலந்து சாப்பிட உடலுக்கு வலு கிடைக்கும். மகிழமரத்தின் வேரை விழுதுபோல அரைத்து வினிகரில் கலந்து வீக்கத்தில் தடவினால் விரைவில் குணமடையும்.
திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர் முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ இறைவழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்துக்களுக்கு மட்டுமின்றி பௌத்தம், சமண சமயத்தவரும் இதனை புனித மரமாக போற்றுகின்றனர்.   

ஞானமரம்

மகிழமரம்: இதை ஞானமரம் என்று புகழ்வார்கள். இதற்கு திருவண்ணாமலை மரம் என்ற வேறொரு பெயரும் உண்டு. வியாழக்கிழமை இந்த மரத்தைக் குருவாக எண்ணி பூஜை செய்து வருவோர்க்கு அறிவு தெளிவாக கிடைக்கும்.

கொன்றை மரம்: இதைப் பிரணவ மரம் என்று சொல்வார்கள். இதை முருகனை நினைத்து செவ்வாய், சஷ்டி காலங்களில் பூஜை செய்திட துஷ்ட சக்திகள் நம்மிடம் நெருங்காது. இந்த மரம் திருவெண்காடு பகுதியில் அதிகம் காணப்படுகிறது.

குறுந்த மரம்: இதை மாணிக்கவாசகர் மரம் என்று சொல்வதுண்டு. வாஸ்து பரிகார மரமாகிய இம்மரத்தை வாஸ்துக்குறையுள்ள வீட்டின் தோட்டத்தில் வளர்க்க வேண்டும்.

வெள்ளை மன்தாரை: குருவாயூர் கோவில் மரம் என்றும் அழைக்கலாம். இதை வீட்டுத் தோட்டத்தில் வைத்து பூஜை செய்து வந்தால் நினைத்ததைக் கொடுக்கும் தன்மை கொண்டது. மந்தாரையில் மஞ்சள் வகையும் உள்ளது. இதை முறையோடு பூஜை செய்தல் வேண்டும்.

சம்தானக மரம்: நந்தி விருட்சம் என்று அழைக்கப்படும் இம்மரத்தை வீட்டில் உரிய திக்கில் வளர்த்து பூஜித்தால் பிள்ளைகள் நல்லவர்களாக வளர்ந்து உயர்நிலையைப் பெறுவார்கள்.


பும்சிக மரம்: சந்தான பாக்கியத்தைத் தரக்கூடிய இந்த விசேட தெய்வ விருட்சத்தைப் பூஜை செய்தால் மலடியும் குழந்தை பெறுவாள் என்று கூறப்படுகிறது. பும்சிகம் தமிழகப் பகுதிகளில் சில இடங்களில்தான் உண்டு. இதை ஆராதனைகள் செய்து இதன்கீழ் யாகம் நடத்தி வழிபட வாரிசு ஒன்றை நிச்சயம் பெறலாம்.

அரிசந்தன மரம்: இந்த விருட்சத்தை தோட்டத்தில் வளர்ப்போ ருக்கு தீமைகள் நெருங்கி வந்தாலும், அருகில் வந்தபின் மறைந்துவிடும்.

பன்னீர்பூ மரம்: இந்த மரத்தை வீட்டில் வணங்குவோருக்கு வாகன விபத்துக்கள் தவிர்க்கப்படும். இதை திருச்செந்தூர் கோவில் மரம் என்றும் அழைப்பார்கள்.

பெருந்தும்பை: தனலட்சுமி செடி என்ற பெயர் இதற்கு உண்டு. இதை வணங்குவதால் பிறரால் நமக்கு வரும் எதிர்ப்புகள் தீயசெயல்கள் அகலும்.

ஜலம்தரா மரம்: தொட்டால் சிணுங்கி செடிக்கு இப்பெயர் உண்டு. இதையும் தனலட்சுமி செடி என்பர். இச்செடி வளரும் இடத்தில் நிலம் வாங்கி வீடு கட்ட அந்த இடம் வளம்பெற்று திகழும்.

குடும்பநலச்செடி: வீட்டுத் துளசி மாடத்தரு கில் துளசிச் செடியும், ஜலந்தரா என்ற தொட்டால் சிணுங்கி செடியையும் ஒரே அளவில் வைத்துத் தனித் தொட்டியில் வளர்க்க வேண்டும். இதனால் கணவன் மனைவி உறவு பலப்படும்  
அகண்ட வில்வம்: காளஹஸ்தி கோவில் மரம் என்ற பெயர் உள்ள இதற்கு அதிர்ஷ்ட மரம் என்றும் பெயர் உண்டு. இம்மரத்தைச் செடி பருவத்தில் திங்களன்று பூஜை செய்துவந்தால் வீடு அதிர்ஷ்டகரமாக விளங்கும். சகல சௌகர்யங்களும் கிடைக்கும். பூஜை ஆகமவிதியோடு செய்தால் பலன் கிட்டும்.


விடாத்ழை மரம்:- ஆரோக்யமாக வாழவும், நோய்கள் விலகி நிம்மதி பிறக்கவும் இம்மரத்தை பூஜை செய்து வரவேண்டும். இதற்குச் சனீஸ்வர மரம் என்ற பெயரும் இருக்கிறது. சனீஸ்வரனின் 7 1/2 பிடி அர்த்தாட்டம சனி காலத்தில் இவ்விருட்ச பூஜை பலன்தரும்.


திருமண மரம்: பின்னை மரம்தான் திருமணப் பேற்றைத் தரும் தெய்வ விருட்சமாக விளங்குகிறது. திருமணம் தடைபடும் ஆண்- பெண்கள் இம்மரத்திற்கு சுபநாளில் பூஜை செய்து அதன்கீழ் மங்கள பூஜைகள் செய்தால் உடனே திருமணக்காலம் வரும்.


கதம்ப மரம்: மதுரை மீனாட்சியம்மன் கோவில் மரம் என்றழைக்கப் படும் இந்த விருட்சம் தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டது. வெள்ளிக் கிழமைகளில் இந்த மரம் பூஜிக்கத் தகுந்தது.


செல்வ மரம்: கருநெல்லி மரத்தைத்தான் செல்வமரம் என்பார்கள்.


இதை லட்சுமி மரம், (ப்ராஸ் பொடி) என்றும் சொல்வது வழக்கத்தில் உள்ளது. இம்மரத்தை இல்லத்தில் வளர்த்து வணங்கி வர செல்வ வளம் பெருகும்.


சௌபாக்ய மரம்: சண்பக மரத்தைத்தான் சௌபாக்ய விருட்சம் என்று அழைக்கிறோம். வெள்ளிக்கிழமை, அஷ்டமி தினங்களில் சௌபாக்ய அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டு பிரார்த்திக்க குடும்பத்தில் சௌபாக்கிய நிலை உண்டாகும்.


பிராய் மரம்: மின்னலைத்தடுக்கும் மரம் என்று இதை அழைப்பார்கள். இந்த வகை மரங்கள் திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் முன்பு இருந்ததால் ஊரின் பெயர் அப்படி வந்தது.
#2


http://www.sivastar.net