COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

பேரீச்சம்பழம்



இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது. 
ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன
உலகின் பழமையான நாகரிகமான “மெசபடோமியா”வில்தான் முதன் முதலாகப் பேரீச்சம்பழத்தின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள பேரீச்சம்பழம் கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் “சத்துணவுப்பழமாக” உலக மக்களால் உண்ணப்பட்டு வருகின்றது. ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்.

தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.

எங்கேனும் அடிபட்டதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும் போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.

தினசரி 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அ மிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.

முடி பராமரிப்புக்கு பேரீச்சம்
1. 100 கிராம் உயர்ரக பேரீச்சம் பழத்தை எடுங்கள்.
2. இதைக் கொட்டையுடன் தட்டி, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
3. ஒரு நாள் இதை அப்படியே விடுங்கள்.
4. ஊறிய பேரீச்சம் பழத்தை அரைத்து வடிகட்டுங்கள்.
5. இதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சுங்கள்.
அவ்வளவுதான் எண்ணெய் தயார்.


கண்பார்வை தெளிவடையபொதுவாக நம் இந்திய குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மெலிந்த குழந்தைகளுக்கு

சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள். பள்ளிக்குச் சென்று வந்தவுடன் கால் முட்டிகளில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் தேறாமல் இருப்பார்கள். இதை ஆங்கில மருத்துவரிடம் காண்பித்தால் சாதாரண வலி என்று கூறுவார்கள். ஆனால் சித்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்பு ஒரு காரணம் என்கின்றனர்.

வர்ம பரிகார நூல்கள் கூட கால்சியம் சத்து குறைவால் ஈரல் பாதிப்பு ஏற்படும் என்கிறது. இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள். சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது. இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.


மருத்துவக் குணங்கள்:
  1. இலகுவில் உடலில் சேரும் சர்க்கரைச் சத்து உள்ளதால் உடனடி சக்தி, தெம்பு தரும்.
  2. சளி, இருமல், ஆஸ்துமா, விரைந்து சரியாகும்.
  3. இரத்தம் சுத்தம், விருத்தி.
  4. தேனுக்கு இணையாக இப்பழம் சிறப்புப் பெறுகிறது.
  5. உடல் உறுதி கூட்டும் உயர்ந்த உணவு.
  6. மலச்சிக்கல் நீக்கி குடலை பாதுகாக்கும்.
  7. உடல் வளம், இளமை, உடல் எடை கூடும்.
  8. எல்லா இயற்கைச் சாறுகளிலும் தேனுக்குப் பதில் பேரீட்சை சேர்த்து ஆரோ க்கியம் பெறலாம்.
VN:F [1.9.11_1134]
 
பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை பழம், இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைத்து அரைத்து அதனுடன் பப்பாளி பழக்கூழை கலந்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
 
இரவில் பேரீச்சம்பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்

4 கருத்துகள்:

சாதாரணமானவள் சொன்னது…

அருமையான வலைத்தளம். நோய்களை பக்க விளைவு இல்லாமல் சரி செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு நல்ல வழிகாட்டி. தொடருங்கள் நண்பரே...

Unknown சொன்னது…

ஒவ்வொரு குறிப்பும் தங்க நாணயம் போன்று மதிப்புமிக்கது உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

இது என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன். எனக்கு 10 ஆண்டுகளாக செரிமான பிரச்சினைகள் உள்ளது. இதனால் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதுவும் சமீப காலங்களில் உடல் எடை வெகுவாக குறைந்தது. இதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது. ஏதேச்சையாக தற்போது ஒரு வாரமாக பேரிச்சம் பழம் நிறைய சாப்பிட நேர்ந்தது. எனக்கு அளவில்லாத ஆச்சரியம். உடல் எடை, வலிமை அதிகரிக்க ஆரம்பித்தது. பார்ப்பவர்கள் எல்லாம் எப்படி உடல் எடை அதிரித்தது என்று கேட்கும் அளவிற்கு சிறப்பாக இருந்தது. அதுவும் ஒரு வாரத்தில். அது மட்டுமல்ல நிறைய பிரச்சினைகள் குறைய ஆரம்பித்தது. நான் அல்லோபதி சிகிச்சையில் மருந்துகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. ஆனால் பேரிச்சம் பழம் இலகுவாக நிறைவு செய்து விட்டது. இது என்னுடை சொந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டது

பெயரில்லா சொன்னது…

பேரிச்சம்பழம் பயன்கள் பற்றி தெளிவாக சொல்லி உள்ளீர்கள் நன்றி