COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

பலாப்பழம்


முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.
1. பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.
2. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
3. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.
4. தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
5. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.
6. வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.
7. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும். பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோயைத் தடுக்கும் "ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்' பலாப்பழத்தில் உள்ளன என சமீபகால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது.

பலாவில் உள்ள சத்துக்கள்

பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் 
காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், 
துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.


நரம்புகளை உறுதியாக்கும் பலா

வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் 
வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், 
நரம்புகளுக்கு உறுதி தரும்.
ரத்தத்தை விருத்தியாக்கும். பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு 
உண்டு. தொற்றுக்கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை 
வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.

தேனில் ஊறிய பலா

பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட 
உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது. 
உடல் பலம் பெறும்.
வெறும் பலாப்பலத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட 
உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு 
வலிமை தரும்.

அதிகம் சாப்பிட்டால் ஆபத்து
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இது பலாப்பழத்திற்கும் பொருந்தும். 
குடல்வால் அலற்சி அதாவது அப்பன்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப் பழத்தை சாப்பிடவே 
கூடாது.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் தவிர்ப்பது நல்லது. இதனால் போக்கு மிகுதிப்படும். 
பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் 
குழந்தைகளுக்கு மாந்தநோய் ஏற்படும்.
மூல நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் தொல்லை அதிகமாகும். வாதநோய்க்கும் 
ஆகாது. இருமல் நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்.

பலாப்பிஞ்சு
பலாப்பிஞ்சு கறி சமைக்க உதவும். இதனை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி 
போன்றவை ஏற்படும். பலாப் பழத்தை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக
சாப்பிட்டால், வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் ஏற்படுத்தும்.
பலாக் கொட்டையை சுட்டு சாப்பிட்டால் அல்லு மாந்தம், மலச்சிக்கல், புளியேப்பம், 
கல் போன்று வயிறு கட்டிப்படல் ஏற்படும்.
பலாப் பிஞ்சினை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான், 
கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.


பலாப்பழத்தில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் சி, ரிபோப்ளவின், தயமின் ஆகிய ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன. மூலநோயுள்ளவர்களுக்கு இதன் பழக்கூழ் மிகச்சிறந்த நிவாரணி, இதன் கொட்டைகள், காய்கறியாகவும், வறுத்தும் உட்கொள்ளப்படுகிறது. பலாப்பழம் அதிக அளவில் உட்கொள்வதினால், ஊட்டசத்து குறைபாடு அதிக அளவில் நிவர்த்தி செய்யப்படுகிறது. இது தொற்று நோய்க்கும், நச்சுப்பொருட்களுக்கும் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும்.

1 கருத்து:

Unknown சொன்னது…

நல்ல உறை