COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

ஆரை.

ஆரை ஒரு நீர்தாவரம். 
    இது 3000 ஆண்டுகளுக்கு முன்பே
    உணவாகப் பயன் படுத்தியுள்ளார்கள்.
    மத்திய, தெற்கு ஐரோப்பாவில்  காணப்
    பட்டது. பின் ஆப்கானீஸ்தான்
    இந்தியா, சைனாவுக்குப் பரவிற்று. நூறு
    ஆண்டுகளுக்கு முன்பு வட அமரிக்காவில்
    காணப்பட்டது. இது செங்குத்தாக வளர்ந்து
    தண்டில் நான்கு கால் வட்ட இலைகளாக
    கொண்ட மிகவும் சிறிய செடி. இது
    ஆற்றங்கரை, குழம், ஏரிக்கரை களிலும்,
    மணல் பாங்கான ஈரமான இடங்களிலும்
    நன்கு தானே வளர்கிறது.  இது தண்ணீரில் 
   மிதக்கும், தரையிலும் வளரும். இதற்கு
   லேசான நிழல் தேவைப்படும். கரிமலவாயு
   குறைந்து எடுத்துக்கொள்ளும். வளர்ச்சி
   மெதுவாக இருக்கும். இதில் வேறு வகைகளும்
   உண்டு. இதன் இலைகள் பச்சையாக இருக்கும்.
   இது தொடர்ச்சியாக வேர் விட்டுப் படர்ந்து 
   வளரும். இது சுமார் ஒரு அடி நீழும்.
   அதன் வேருடன் 2 அங்குலம் வெட்டி
   இன விருத்தி செய்வார்கள்.

   மருத்துவப்பயன்கள் :- ஆரை வெப்பம்
   நீக்கித் தாகம் தணிக்கும் செய்கையுடையது.
   பாம்புக் கடியைக் குணமாக்கும்.

      கீரையைச் சமைத்துண்ண தாய்பால் சுரப்பை       
      நிறுத்தும்.

      கீரையைச் சமைத்துண்ண பகு மூத்திரம்
      போகும்.

      இதன் இலையை நிழலில் உலர்த்திப்
      பொடி செய்து 30 கிராம் தூளை அரை
      லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி,
      பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை 
      பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம்,
      சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

ஆகாச கருடன் கிழங்கு

மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பன மிகச் சிறப்பு வாய்ந்தன.இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவுவன.

ஆகாச கருடன் எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரும். காடுகளிலும், மலைகளிலும் அதிகம் காணப்படும். தமிழகமெங்கும் காணப்படும். ஆப்பிரிக்காவில் அதிகம் இருக்கிறது. இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையில்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது. காடு, வேலியோரத்தில் உள்ள இதன் கொடி வாடி விட்டாலும் மழைகாலத்தில் தானே கொடி வளர ஆரம்பிக்கும். பின் அருகில் உள்ள மரம், புதர் வேலிகளில் பிடித்து மேல் நோக்கிச் செல்லும்.  இதன் இலை கோவை இலை போன்று இருக்கும். இதன் கொடி மென்பையாக இருக்கும். இதன் பூக்கள் சிறிதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்த மருநாள் உதிர்ந்து விடும். அந்த இடத்தில் சிறிய காய் உண்டாகும். அது பழுத்துச் சிவப்பாக இருக்கும் பின் காய்ந்து கீழே விழுந்து விடும். விதை மூலமும், கிழங்கு மூலமும் இன விருத்தி யுண்டாகும்.
கிழங்கு வகைகளில் ஆகாச கருடன் கிழங்கு சற்று வித்தியாசமானது. இக்கிழங்கு கசப்புச் சுவை உடையது. இதில் உயிர்ச்சத்து அதிகம் உள்ளது எனினும் மனிதர்கள் உண்ணப்பயன்படுவதில்லை. மாடுகளுக்கு வரும் நோய்களுக்கு உள்ளுக்குள் கொடுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

இக்கிழங்கை கண்திருஷ்டி தோஷம் நீங்கப் பயன்படுத்துவர். இக்கிழங்கினை வீடு மற்றும் கடை வாசல்களில் கட்டித் தொங்கவிடுவர். இது முளைவிட்டு வளரும். அப்படி வளர்ந்தால் நல்லது. இல்லையெனில் கெடுதல் என்று நம்புகின்றனர். நீர் இல்லாமலேயே இக்கிழங்கு முளைவிட்டு வளரும்.

மருத்துவப் பயன்கள் -: பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும் படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும்.  விடம் முறிந்து நோயாளி குணமடைவான்.  விடம் முறிந்து உயிர் பிழைத்த பின் அவனை 24 மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது.  பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்துக் கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.

மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக இரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விடம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரிலில் போட்டு நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விடம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும்.

இதே தூளைக் கொடுத்து வந்தால் லிங்கப்புற்று, கொருக்குப்புண், நாட்பட்ட வெள்ளை ஒழுக்கு இவைகள் குணமாகும். மேக ரோக கிரந்திப் புண் யாவும் குணமாகும். மற்ற விடப்பூச்சிகளின் விடத்தையும் முறிக்கும். இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது புளி, எண்ணெய், மிளகாய் ஆகாது. பத்தியம் காக்க வேண்டும்.

இந்தக் கிழங்கின் இலைகளைக் கொண்டு வந்து மை போல் அரைத்து கண்டமாலை, தொடைவாளை, இராஜபிளவை, கழலைகட்டிகள் அரையாப்பு, இரத்தக் கட்டிகள், சிறு கட்டிகள் இவற்றின் மேல் கனமாகப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்து இரத்தம், சீழ் வெளியேறி ஆறிவிடும்.
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, அதே அளவு கொடியின் தண்டு இவைகளைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு சீரகம் தேக்கரண்டியளவு, அதே அளவு மிளகு இவைகளை அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால்  ஓயாத வயிற்று வலி, வாதப்பிடப்பு, குலைநோய், பாண்டு ரோகம் இவைகள் யாவும் குணமாகும். ஆனால் காரம், புளி,  நல்லெண்ணையை விலக்க வேண்டும்.

ஆகாச கருடன் கிழங்கு இலையைக் கொண்டு வந்து பொடியாக நறுக்கு வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்துத் தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்த வுடன், மூன்று கைப்பிடியளவு இலையைப் போட்டு, இலை பதமாக வதக்கியவுடன் அதை சுத்தமாக துணியில் சிறிய முட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன்  வேதனையுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்கள் குணமாகும்.

ஆகாய கருடன் கிழங்கின் இலையைக் கொண்டு வந்து வெய்யிலில் சறுகு போல உலர்த்தி எடுத்து, உரலில் போட்டு இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சொறி, சிரங்கு, ஆறாத புண், குழந்தைகளுக்குத் தோன்றும் அக்கி, கரப்பான் புண்,  சிரங்கு இவைகளுக்கு இந்தத் தூளுடன் தேங்காயெண்ணைய் சேர்த்து,  குறிப்பிட்ட புண்களைக் கழுவி விட்டு மேலே தடவி வந்தால் மூன்றே நாட்களில் மறைந்து விடும்.

ஆகாச கருடன் கிழங்கு 100 கிராம், வெங்காயம் 50 கிராம், சீரகம் 20 கிராம் எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெயில் வதக்கி,  அரைத்து இளஞ்சூட்டில் வாதத்திற்குப் பற்றுப் போட்டால் வாத வலி குறையும் என்பது பாட்டி வைத்தியம்.
விஷக்கடியை குணமாக்க

தேள் கொட்டினால் ஆகாச கருடன் கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்றால் தேள் விஷம் இறங்கும். அதனால் ஏற்பட்ட நெறிகட்டுதலும் நீங்கும். கொட்டைப் பாக்களவு கிழங்கை மென்மையாக அரைத்து 50 மி.லி. தண்ணீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்ப்பூச்சாகவும் பூசி வர நாய், நரி, குரங்கு, பூனை முதலிய விலங்குகளின் கடி நஞ்சு தீரும்.

கிழங்கை தோல் நீக்கி உலர்த்திப் பொடித்து, ஒரு தேக்கரண்டிப் பொடியை சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு, உப்பு, புளி நீக்கி சாப்பிட பாம்பு நஞ்சு, கீல் பிடிப்பு, மேக நோய்கள் தீரும்.

வாதநோய் குணமாகும்

கிராம் கிழங்குப் பொடியை 100 மி.லி தண்ணீரில் கலந்து காய்ச்சிக் காலை மாலை சாப்பிட சீத பேதி தீரும். 100 கிராம் கிழங்குடன் 50 கிராம் 50 கிராம் வெங்காயம் 20 கிராம் சீரகம் சேர்த்தரைத்து விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கீழ வாதத்துக்கு பத்துப்போட குணமாகும்.

சருமநோய்களை குணமாக்கும் தைலம்

இக்கிழங்கில் இருந்து தைலம் இறக்குகின்றனர். இத்தைலத்தை மனிதர்களுக்கு வரும் சரும நோய்களுக்கு மேல்பூச்சாகப் போட ஆறும். கால்நடைகளுக்கு வரும் சரும நோய்களுக்கும் மேற்பூச்சாக பூச நோய்கள் குணமடையும்
கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும்.அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.
கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும்.அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).
இந்தக் கிழங்கை நஞ்சு முறிவிற்காக கொடுப்பர்.இதற்கு கொல்லன் கோவை,பேய்ச் சீந்தில் என்றும் அழைப்பர்.
 

கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும்.கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.
 வியதாபேதகாரி(ALTERNATIVE){வியாதியை நாளுக்கு நாள் குணமாக்கிச் சரீரத்தை ஆரோக்கிய நிலையில் கொண்டு வரும் மருந்து},
பலகாரி(TONIC){தாதுக்களுக்கு பலம் கொடுக்கும் மருந்து}.    
உபயோகிக்கும் முறை:- இந்தக் கிழங்கை அரைத்து கொட்டைப் பாக்களவு 2-3 அவுன்ஸ் வெந்நீரில் கலக்கி தினம் ஒரு வேளையாக 3 நாள் கொடுக்க நாய், நரி, சிறுத்தை, குரங்கு, பூனை, குதிரை, முதலை, வேங்கை, இவைகளின் கடி விஷங்களினால் உண்டான பற்பல தோஷங்கள் போகும்.கடி வாயிலும் இதனை அரைத்துப் பூசுதல் நன்று. இதனில் இரண்டொரு கடலைப் பிரமாணமுள்ள துண்டுக் கிழங்கை வெற்றிலையுடன் கூட்டிக் கொடுக்க தேள்,நட்டுவக்காலி இவைகளினால் உண்டான விஷமும் நெறி கட்டுதலும் போகும்.


கருடன் கிழங்கு,குப்பை மேனி, அவுரி, ஆவாரை, கீழ்காய் நெல்லி(இலைக்கு கீழ் காய் காய்ப்பதால் இவ்வாறு அழைப்பார்கள்.கீழாநெல்லி என்பதும் கீவா நெல்லி என்பதும் இதுவே),இவ்வைந்து இலைகளையும் இடித்து சாறு பிழிந்து உள்ளுக்குள் கொடுத்து,உடம்பில் துவாலையிட(உடம்பில் மேற்பூச்சாக பூச)அஷ்ட நாக விஷங்களும் போகும்.


கடும் விஷ நாகங்கள் கடித்தவருக்கு ஒரு எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி தின்னும் படி செய்ய வாந்தி பேதி ஏற்பட்டு நஞ்சு முறியும்.நோயாளரை ஒரு 24 மணி நேரத்திற்கு தூங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.


இந்த ஆகாச கருடன் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைத்து,நிழலில்காய வைத்து,தூளாக்கி துணியில் சலித்து(வஸ்திர காயம் செய்து) எடுத்துக் கொண்டு பேய்ச் சுரைக் கூட்டில் நாற்பத்தெட்டு நாட்களுக்கு குறையாமல் வைத்திருந்து, நாற்பத்து எட்டு நாட்கள் சாப்பிட குட்டம்,மண்ணுளிப்பாம்பின் நஞ்சு, தீரும்.உடல் காயசித்தியாகும்.    
கொல்லன் கோவைக் கிழங்கால் மஹா விஷம், தேக வெளுப்பு, சுரம், வாதசூலை, சிரங்கு, பெரு வியாதி, நமைச்சல், வக்கிர நேத்திரம், குடல் வலி, கண்டமாலை, திரி தோஷம் ஆகிய நோய்கள் தீரும்.
 ஆகாச கருடன் கிழங்குடன் வெங்காயம்,சீரகம்,விளக்கெண்ணெய் சேர்த்து வாதத்துக்குப் பற்று போட்டால்  வாத வலி குறையும்.

சீரகம்

சீரகச் செடி 35 – 45 செ.மீ. உயரம் வளரும் சிறு செடி. இதன் தண்டு பல கிளைகளுடன் கூடியதாகவும், இலைகள் நீட்டமாக, நன்கு பிரிந்து பச்சையாகவும் (கொத்துமல்லி இலையைப் போல்) இருக்கும்.
செடியின் உருண்டையான பகுதிகளில் வெண்ணிறமுள்ள சிறு மலர்கள் தோன்றும். பூத்ததும் இந்த உருண்டையான முடிச்சுகள் பிளந்து அவற்றில் மூன்று அங்குலம் நீளமான பழங்கள் தோன்றும். அவற்றில் விதைகள் மிகுந்திருக்கும். கோள வடிவில் 6 மி.மீ நீளமாக மஞ்சள் – பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த விதைகள் தான் சீரகம். நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
பழைய காலங்களிலிருந்தே உபயோகத்தில் இருக்கும் சீரகம், எகிப்து, சிரியா, துருக்கி, மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் தோன்றியது. இப்போது வட ஆப்ரிக்கா, இந்தியா, சீனா தேசங்களில் பயிரிடப்படுகிறது.

சீர்+அகம்=சீரகம் என்று கூறப்படுகிறது ஆனால் சரி என்பதற்கு காரணம் இல்லை
ஆனால் தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது .திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
என தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல ஒன்று உண்டு .

 100 கிராம் சீரகத்தில் ஈரப்பசை 6.2%, புரதமும் 17.7%, கொழுப்பு 23.8%, நார்ச்சத்து 9.1%, மாவுப்பொருள் 35.5%, தாதுப்பொருட்கள் 7.7 உள்ளன. தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தியாமைன், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின்கள் சி, ஏ, இவைகளும் உள்ளன. கலோரிகள் 460 காய வைத்த சீரகப் பழத்திலிருந்து டிஸ்டிலேசன் என்ற முறைப்படி, நறுமணமுள்ள, காற்றில் ஆவியாகக்கூடியதும், இலேசானதும் மஞ்சள் நிறம் கொண்டதுமான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவ்வெண்ணெயில் குமிக் அல்கலாயிட் 52% உள்ளது.
பலவகை ரசாயன பொருட்கள் கலந்துள்ள இவ்வெண்ணெயைக் கொண்டு செயற்கை தைமோல் செய்யப்படுகிறது. மற்றும் சீரகத்தில் 10% சீரக எண்ணெயும், பென்டோசன்6.7% உள்ளன.

சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா,
கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
 
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.  சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு  பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். 

மருத்துவக் குணங்கள்:
  1. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து  சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் இந்தச் சீரக நீரூக்கு உண்டு.
  2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
  3. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
  4. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
  5. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட  இதைச் சாப்பிடலாம்.
  6. உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
  7. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடியைச் சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
  8. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
  9. அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டியை பொடித்து சாப்பிட்டால் மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
  10. சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
  11. சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  12. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் வற்றி நலம் பயக்கும்.
  13. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.
  14. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.
  15. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடக்கும்.
  16. சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
  17. சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
  18. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.
  19. மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 மந்தத்தைப் போக்கும்;
*நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
*சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
*அபரிமிதமான பித்தத்தைத் தணிக்கும்.
*மயக்கத்தைப் போக்கி விடும்.
* பித்த நீர் வாயில் ஊறுவதை நிறுத்தும்.
*சீரகத்தில் பொன் சத்து இருப்பதாகச் சித்தர்கள்
கூறியுள்ளார்கள். “நீ இதனையுண்டால் உன் உடல் பொன்னாகக்
காண்பாயாக” என்று அவர்கள் கூறியுள்ளதை
நினைவுபடுத்துகிறேன். அதனால் தான், சீரகத்தைத்
தூள்செய்து சீரணி இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக்
கொடுப்பது உண்டு 

 இரண்டு தேக்கரண்டி சீரகத்தை நன்கு வறுத்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைத்து, வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து மாதவிடாய் காலங்களில் இளம் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு கொடுக்க, வலி சிறிது நேரத்திலேயே குறைந்து விடும். பசி மந்தம், மற்றும் உணவு ஜீரணமாகாமல் இருப்பவர்கள் சீரகம் கொதிக்க வைத்த நீரை அடிக்கடி இளம் சூட்டில் பருகி வர, பசி ஏற்பட்டு ஜீரணம் ஒழுங்காகும். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சீரகத்தண்ணீரை இளம் சூட்டுடன் உணவிற்கு பத்து நிமிடத்திற்கு முன்பும், உணவு உண்டு பத்து நிமிடத்திற்கு பின்பும் அருந்த, உணவு நன்கு ஜீரணமாகி, கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், நீர்கட்டு, நீர்கருக்கு போன்றவற்றிற்கு சீரக தண்ணீரை அருந்த, விரைவில் நிவாரணம் உண்டாகும்.

 ரகம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இயல்புடையது. ரத்த அழுத்த நோயாளிகள் தினம் ஒரு தேக்கரண்டி சீரகம் சாப்பிட, ரத்த அழுத்தம் சீராகும். பிரசவித்த பெண்களுக்கு இது மிக சிறந்த மருந்தாகிறது. சீரகத்தை வறுக்கும் பொழுது நறுமண எண்ணைய் வெளிவரும். அப்பொழுது நீர் ஊற்றி கொதிக்க வைத்து அந்த நீரை பருகும் பொழுது சீரகத்தின் பலன் அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்கள், இந்த சீரக நீரை பருக தாய்ப்பால் பெருகும். கருப்பை பலப்படும். குழந்தை பெற்றதால் கருப்பையில் உண்டான அழற்சி நீங்கும். சீரகத்தில் இரும்பு சத்தும், மங்கனீசிய சத்தும் நிறைந்து உள்ளன. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் பிரண வாயுவை நம் உடலில் உள்ள செல்களுக்கு அளித்து புத்துணர்ச்சியளிக்கின்றது. மேலும் ஈரலை நன்கு வேலை செய்ய தூண்டி, நம் உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.
தைமோலின் பயன்கள்
தைமோலின் வயிற்றுப்பூச்சிகளை கொல்லவல்லது. செப்டிக் மருந்தாகும். சீழையும், கிருமியையும் போக்கவல்லது. அதுவும் கொக்கிப்புழுக்களை ஒழிக்கும். வாய்வு உப்புசத்தை போக்கும். சிறுநீர் பிரிய உதவும்.
ஜீரணத்திற்கு
சீரகம் பல வகைகளில் ஜீரணத்திற்கு உதவும். அஜீரணம், பித்தம், பேதி இவற்றைப் போக்கும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து. இத்துடன் கொத்தமல்லி சாறையும் (ஒரு தேக்கரண்டி) சிறிது உப்பு சேர்த்து குடிக்க வயிற்று கோளாறுகள் குறையும் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் கால் ஸ்பூன் சீரகத்தைத் தூள் செய்து கலந்த நீரை பருகினால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம்.
இது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் போல் பாதுகாப்பானது. வயிற்று வலிக்கு 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் வெந்தயம் தூள் செய்து மோரில் கலந்து குடிப்பது வழக்கம்.
தூக்கமின்மை

வாழைப்பழத்துடன் ஒரு ஸ்பூன் சீரகப் பொடியுடன் இரவில் சாப்பிட தூக்கம் வரும்.
ஜலதோஷம்

மேற்சொன்னபடி, சீரகத்தண்ணீர் குடித்து வந்தால், ஜலதோஷம், அதன் கூட வரும் ஜூரமும் குறையும். தொண்டை கட்டிவிட்டால் சீரகத் தண்ணீருடன் இஞ்சி கலந்து பருக தொண்டை எரிச்சல் குறையும்.
விஷமுறிவு

தேற்கடித்தால் வெங்காய சாறுடன் அரைத்த சீரகம் கலந்து உணவை, தேள் கடித்த இடத்தில் தடவ வலிக் குறையும்.
கருஞ்சீரகம்

சீரகத்தின் ஒரு வகையான கருஞ்சீரகமும் மூலவியாதி, ஞாபக மறதி போன்றவற்றுக்கு நல்லது. சீரகத்தைப் போலவே பயன்படும்.
இதர பயன்கள்

குளிர்காய்ச்சல், காமாலை, வாய்நாற்றம், வாயில் எச்சில் ஊறுவது, பெண்களின் சூதகத்தை கோளாறுகள், இவற்றுக்கு மருந்தாக சீரகம் உதவும்.
தவிர உணவுகளுக்கு சுவை கூட்டவும், மணமளிக்கவும் பயன்படுகிறது. வாசனை பொருட்கள் தயாரிப்பில் சீரக எண்ணெய் பயன்படுகிறது.
 
உள் மருந்தாக மட்டுமல்ல, சீரகம் வெளிமருந்தாகவும் பயன்படும். சீரகத்தை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்துக் கொண்டு வாரம் ஒருமுறை இரத்தக் கொதிப்பு நோயுள்ளோர், பித்த தலைவலி, கிறுகிறுப்பு உள்ளோர் தலைக்குத் தேய்த்துக் குளிக்க நோய் கட்டுக்குள் வரும். 

சீரக பொடி:
சீரகம் - 100 கிராம்
எலுமிச்சம்பழம் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை: சீரகத்தை எலுமிச்சம்பழ சாற்றில் கிளறி நிழலில் காய வைத்து உலர்த்தி நன்கு காய்ந்ததும், பொடி செய்து கொள்ளவும். மிளகை வறுத்து பொடி செய்து சீரகப்பொடியுடன் உப்பு கலந்து வைத்துக் கொள்ளவும். சூடான சாதத்துடன் சிறிது நெய் கலந்து சாப்பிட்டு வர உணவு, நன்கு ஜீரணமாகும். வறட்சி நீங்கும். நோய்வாய்ப்பட்டு பத்திய உணவு உண்பவர்கள், அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் இருப்பவர்கள், சீரகப் பொடி சாற்றுடன் பாசிப்பருப்பு கலந்த காய்கறி கூட்டு கலந்து சாப்பிட, உணவு நன்கு ஜீரணமாகி விரைவில் குணம் உண்டாகும்.

சீரக ரசம்:

சீரகம் - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
- 10 நிமிடம் நீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கடுகு- 1 தேக்கரண்டி
நெய்- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- கைப்பிடி அளவு
பெருங்காய பொடி - 1/4 தேக்கரண்டி
தேவையான அளவு - உப்பு.

செய்முறை: புளியை கரைத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்க வேண்டும். சீரகம், துவரம்பருப்பு, மிளகாய் வற்றல் அரைத்து கொதிக்கும் புளி நீரில் கலந்து, மிதமான தீயில் கொதிக்க வைத்து, உப்பு, பெருங்காய பொடி கலந்து கொள்ளவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். மிக சுவையான சீரணத்தை தூண்டும் ரசம், பிரசவித்த பெண்கள் சாப்பிட உணவு எளிதில் ஜீரணமாகும். எண்ணெய் தேய்த்து குளித்த அன்று இந்த ரசம் சாப்பிடலாம். பத்திய சாப்பாட்டிற்கு உகந்த ரசம். 
 சீரக சூப்
தேவை
துவரம் பருப்பு-1/2கப்
எலுமிச்சம் சாறு-1/2மூடி
மிளகாய் வற்றல்-2
சீரகம்-1டீஸ்பூன்
மிளகு-1/4டீஸ்பூன்
நெய்-1டீஸ்பூன்
கொத்தமல்லி    -சிறிது
செய்முறை
துவரம் பருப்பை நீர்விட்டு நன்கு வேகவைத்து மசிக்க வேண்டும். பிறகு மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். பின்பு சீரகம், மிளகு இரண்டையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்து பொடி செய்து சூப்பில் போட வேண்டும். நுரை நன்கு பொங்கி வந்ததும் எலுமிச்சம் சாறு சேர்க்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
“எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு ஆறு மாச கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது,” என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் ¼ ஸ்பூன் அளவு சாப்பிட தீரும்.
சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர்  நோய் தீரும். சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.

நன்னாரி வேர்

வேறு பெயர்கள்
                              ஆனந்த மூலம்
ஆயுர்வேதத்தில் -நன்னாரியை சாரிப என்று கூறப்படுகின்றது.
 நன்னாரி ” சுகந்த திரவியங்கள்” குழுவில் சேர்க்கப்பட்ட மணமூட்டும் செய்கையுடைய மூலிகை. இதன் பெயரே நல் + நாரி. அதாவது நல்ல மணமுடையது என்று பொருள். இதை பாதாள மூலிகை என்றும் சொல்வதுண்டு. நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.). நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.
சாரிபாத்யாசவம் ,சாரிபாதி வடி ,சாரிபாதி க்வாதம் ,சாரிபாதி லேஹியம் போன்ற மருந்துகளில் -இந்த நன்னாரி சேர்க்கிறது
  • இதன் வகை பலவகை உண்டு - நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி.
    இது  இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. . இதன் வேரின் மேற்புறம்  கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும்.
  • சலதொடம் பித்தமதி தாகம் உழலை
    சலேமேறு சீதமின்னார் தஞ்ச்சூடு லகமதிற்
    சொன்னமது மேகம் புண் சுரமிவை யெ லா மொழிக்கும்
    மென்மதுர நன்னாரி வேர் (அகத்தியர் குணபாடம்)

    அன்காரிகை மூலி யாச்சியாத்தோ டுண்ண நித்தி

    யங்கா ரிகை மூலி யாளுமே-யன்காரி
    பற்றாது (தேரையர் வெண்பா )

    காமவல் லியனடிக் கரியுணப் பித்தமா

    நேமமே கப்பிணி நிலை குலைந்தாலுமே (தேரையர் கா )
  •  
  •  
  • மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக...பச்சை நன்னாரி வேர் 5 கிராம்
எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
.
பொது குணங்கள்- ஆயுர்வேதப்படி நன்னாரி, மதுர ( இனிப்பு) குணமும் கசப்பும் இணைந்தது. கனமானது. குளிர்ச்சியூட்டும். பசியின்மை, உணவு கசப்பது, இருமல், ஜுரம், உதிரப் போக்கு, இவற்றுக்கு நல்லது.
குணங்களும், பயன்களும்
நன்னாரி செடியில், வேர்களுக்குத்தான் முக்கியத்துவம். இதன் இலை, கொடி, காம்பு எதிலும் நறுமணமில்லை. மருத்துவ பயன்களும் இல்லை. நன்னாரி இனிப்பானது. எரிச்சலை குறைத்து சமனப்படுத்தும்.
வியர்வையை உண்டாக்கி, உடல் உஷ்ணத்தை தணிக்கும். சிறுநீர் பிரிய உதவும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.
நன்னாரி சேர்க்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் அஸ்வகந்தா சூரணம், அஸ்வகந்தாதி லேஹம், சந்திரனஸவா போன்றவை.
தாவர விவரங்கள்
நன்னாரி படரும் புதர்ச் செடி/ கொடி. கங்கை சமவெளி, அஸ்ஸாம், மத்திய, மேற்கு மற்றும் தென்னிந்தியாவும் வளரும். நன்னாரி விஞ்ஞான ரீதியாக பயிரிடப்படுவதில்லை. ஆனால் பரவலாக காட்டுச் செடியாக வளருகிறது. சரியான முறையில் பயிரிட்டு வளர்த்தால், இந்த மூலிகை மேலும் மேன்மையாகும்.
நன்னாரி வேர் – புதிய வேர் நல்ல நறுமணத்துடன் இருக்கும். காரணம் அல்டிஹைட். முதிர்ந்த வேர்களில் நறுமணம் குறைவு


  • பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.


  • சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.


  • நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.


  • சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .


  • பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.


  • பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.


  • வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்.


  • ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.


  • குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.


  • சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.
  • வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
  • விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.
  • கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.
சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் வெப்பத்தை தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. 

முக்கியமாக மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.
இதுவரை சரிவர பயன்படுத்தப்பாடதது .இதன் வேரை தொடர்ந்து பயன் படுத்தினால் எயிட்ஸ் என்னும் கொடிய நோயில் இருந்து தப்பலாம்.


பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து கால் லிட்டர் . பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, , மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள்  தொடர்ந்து சாப்பிட  நரை மாறும்.


பச்சைவேரை சிறிது இடித்து   நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி காலை, மாலை குடித்து வரப் , , நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும்.    ஆனால் பத்தியம்  மிக அவசியம்.


ஆண்மை பெருக நன்னாரி வேர் ஊறிய நீரை  இளஞ்  சூடாக அருந்தி வரவேண்டும். . இது ஒரு இயற்க்கை  தரும் டானிக் உடல் தேற்றி ! கண்டவற்றை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட நன்னாரி வேர் நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும்  நிற்கும்.


பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும்,இதுவே மாவலி அல்லது மாகாளி  ஊறுகாய் எனப்படும். சித்தமருத்துவத்தில் நன்னாரி  லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.

நன்னாரியின் இதர பயன்கள்
1. நன்னாரியின் வேரை உபயோகித்து செய்யப்படும் “சர்பத்” உடல் சூட்டை தணிக்கும். கோடையில் சிறந்த பானமிது.
2. சுத்தம் செய்து நன்னாரியை ஊற வைத்த ( 24 மணி நேரம்) தண்ணீரை அரை கப் காலை; மாலை குடித்து வர, பித்த நோய், தாகம், மேக நோய், நீரிழிவு இவை குறையும்.
3. நன்னாரி வேரை கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரை காலை, மாலை இரு வேளை குடித்து வந்தால், வாதம், பித்தம், பக்கவாதம், பாரிச வாதம் இவை விலகும்.
4. உடல் சூட்டை தணிப்பதால், நன்னாரி நீருடன் பாலும் சர்க்கரையும் சேர்த்து குடித்து வர, ஆரோக்கியம் அதிகரிக்கும்.
5. யூனானி வைத்திய முறையில் ரத்த சுத்திகரிப்புக்கு நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.
மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத இயற்கைச்சத்து உண்டு. எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும்
கோடைக்காலம் வந்து விட்டால் நா வரச்சியை  தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது  .இது உடலின் உள் வெப்பத்தை தணிப்பது .ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரை கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை பருகினால் உடலுக்கும் மனதிற்கும் குளுகுளு .
காசிற்க்கும் கேடில்லை.
 
1 நன்னாரி வேரை பச்சையாக நசுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து தொடர்ந்து சாப்பிட நரை, திரை மாறும்.
2 நன்னாரி இலைகளை சாப்பிட உடலில் வியர்வை நாற்றம் மாறும்.
3 நன்னாரி வேரை கொதிக்க வைத்து ஆற வாய்த்த நீரில் 8 மணி ஊற வைத்து சாப்பிட உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு நல்ல தீர்வு. இது உடலுக்கு aircondition செய்தது போலிருக்கும்.
4 பொதுவாக நன்னாரி வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிடலாம்
5 மாகாளி கிழங்கு எனும் பெரு நன்னாரி நல்ல பசி தூண்டி ஊறுகாய் செய்து சாப்பிட நல்ல பசி எடுக்கும்

சித்த மருத்துவத்தில் இதன் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.
 
  1. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.
  2. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி, சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.
  3. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள், செரியாமை, பித்த குன்மம் தீரும்.
  4. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இளஞ்சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு, உப்பு, புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய் சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
  5. நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
  6. நன்னாரி வேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிருநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.
  7. நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்தமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மன கோளாறுகள் நீங்கும். தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
  8. நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.
  9. வேர் சூரணம் அரை கிராம் காலை மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் கொள்ள பாண்டு, காமாலை தீரும். அதிகமாகச் சாப்பிட்டால் பசி இருக்காது.
  10. சித்தமருத்துவத்தில் நன்னாரி பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.
  11. பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.
     
  12. உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.
     
  13. ரோட்டோரத்தில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது-இது நல்லதில்லை.
  14.   கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.

காட்டாமணக்கு

வேறுபெயர்கள் -: ஆதாளை, எலியாமணக்கு ஆகியவை.
 \
காட்டாமணக்கு சுமார் 5 மீட்டர் உயரம் வரை வளர்க்கூடிய சிறிய மரம். இது வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப நாடுகளில் நன்றாக வளர்க்கூடியது. தமிழ் நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் வேலிக்காக இது பயிர் செய்யயப்படுகிறது. இது 30-35 வருடங்கள் வரை வளர்ந்து பயன் தரக்கூடியதாகும் இது தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டு பின்னர் போர்த்து கீசியர்களால் ஆப்பிரிகா மற்றும் ஆசிய நாடுகளிக்கு கொண்டு வரப்பட்டவை. வரட்சியைத் தாங்கி வளர்க்கூடிய பயிராக இருப்பதாலும் தரிசு நிலங்களில் பயிரிடக் கூடிய பயிராகக் கருதப்படுகிறது. இதன் இலைகள் நன்கு அகலமாக விரிந்து 3-5 பிளவுகளை நுனியில் கொண்டதாகவும் நல்ல கரும்பச்சை நிறத்திலும் இருக்கும். 8 செ.மீ. நீளமும் 6 செ.மீ.அகலமும் உடையதாக இருக்கும். இதன் மலர்கள் கொத்தாகப்பூக்கும் தன்மையுடையது. இதன் தண்டு மிருதுவாகவும் 6 செ.மீ.முதல் 23 செ.மீ.வரை நீளமுடையதாகும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக வெப்பமான காலங்களில் பூக்கும் காய்கள் கரு நீல நிறத்திலும் பெரிதாக இருக்கும். ஒரு கொத்தில் சுமார் 10 க்கு மேலான காய்கள் இருக்கும். காய்கள் பச்சை நிறத்திலிருந்து 4 மாதங்களில் மஞ்சளாக மாறி விதைகள் முற்றி வெடிக்கும். விதையிலிருக்கும் வெள்ளையான சதையிலிருந்து பயோ டீசல், எண்ணெய், புண்ணாக்கு கிளிசரால் கிடைக்கும்.

8. மருத்துவப் பயன்கள் -: இலை தாய் பாலையும் உமிழ் நீரையும் பெருக்கும், பால் இரத்தக்கசிவை நிறுத்தவும், சதை நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படும். இது சோப்புத் தயாரிக்கவும், இதில் ‘ஜெட்ரோபைன்’ எனப்படும் ஆல்க்கலாய்டு புற்று நோய் எதிர்ப்பிற்கும், தோல் வியாதிகளுக்கும் கால்நடைகளின் புண்களுக்கும் ஈக்களினால் உண்டாகும் தொல்லைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இயற்கை பூச்சிக் கொல்லியாகவும், உராய்வு காப்பு பொருள் தயாரிக்கவும், உருவமைப்பு செய்யும் பொருட்களுக்கும், அழகு சாதனப் பொருட்களாகவும் மின் மாற்றி எண்ணெயாகவும் நீண்ட தொடர் எரிசாராயமாகவும், தோல் பதனிடவும், ஒரு வகை பிசின் தயாரிக்கவும், நூற்பாலைகளில் பயன்படும் எண்ணெயாகவும் தீ தடுப்பு சாதனங்களாகவும் பயன்படுகிறது. மேலும் இந்த மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் கருநீல வண்ணம் துணிகளுக்கும், மீன் வலைகளுக்கும் நிறம் கொடுப்பதற்குப் பயன்படுகிறது. காட்டாமணக்கு இலைகள் பட்டுப்பூச்சிகளுக்கு உணவாகப்பயன்படுகிறது.

இலையை வதக்கி மார்பில் கட்டப் பால் சுரக்கும். ஒரு படி நீரில் ஒரு பிடி இலையை போட்டு வேகவைத்து இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்த்து மார்பில் ஒத்தடம் கொடுத்து, வெந்த இலைகள் வைத்துக் கட்டப் பால்சுரப்பு உண்டாகும்.

விளக்கெண்ணையில் வதக்கிக் கட்டக் கட்டிகள் கரையும் வலி அடங்கும்.

இளங்குச்சியால் பல் துலக்கப் பல் வலி, பல் ஆட்டம், இரத்தம் சொரிதல் தீரும்.

காட்டாமணக்கு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூச புண், சிரங்கு ஆறும்.

பாலை வாயில் கொப்பளிக்க வாய்புண் ஆறும். பாலைத் துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைக்க இரத்தப் பெருக்கு நிற்கும். புண் சீழ் பிடிக்காமல் ஆறும்.

வேர்ப்பட்டையை நெகிழ அரைத்துச் சுண்டைக்காயளவு பாலில் கொடுத்து வரப் பாண்டு, சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுக் கட்டி, பெருவயிறு, குட்டம் ஆகியவை தீரும்.

 காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமணக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்

காட்டாமணக்கு எண்ணையின் பயன்கள்

காட்டாமணக்கு விதையிலிருந்து 30 சதம் திரவ எரிபொருளும் மீதி 70 சதம் புண்ணாக்கும் கிடைக்கிறது.

இந்த திரவ எரிடிபாருளை சுத்தப்படுத்தி டீசலுக்கு மாற்றாக இயந்திரங்களில் பயன் படுத்தலாம்.
• இதன் புண்ணாக்கை இயற்கை உரமாக வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம்.
• எண்ணையை சுத்தப்படுத்தும்பொது கிடைக்கும் கிளிசரால் என்ற உபரிப்பொருளை மருந்துகள் மற்றும் அழகுச்சாதனப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

• காட்டாமணக்கு விதையிலிருந்து பயோ டீசல் எனப்படும் திரவ எரிபொருள் கிடைக்கிறது.
• விலை வீழுச்சி இல்லாத நிரந்தர வருமானத்தைக் கொடுக்கக்கூடியது.
• நாட்டின் பொருளாதார தற்சார்பை ஏற்படுத்தும்.
• கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கும்.
• குறைந்த நீர் கொண்டு வளரக்கூடியது.
• இதிலிருந்து தயாரிக்கப்படும் திரவ எரிபொருள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

இன்சுலின் செடி

 இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதை நான் வீட்டிலும், வரகம்பாடி தோட்டத்திலும் வளர்க்கிறேன். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும். ஆரம்பத்தில் இதன் நாற்றை கேரளாவிலிருந்து திரு.வின்சென்ட் அவர்கள் ஒரு நாற்று ரூ.50-00 என்று வாங்கி வந்து நாற்றுக்கள் உற்பத்தி செய்கிறார். தற்போதும் அவரிடம் நாற்றுக்கள் உள்ளன. அவரது போன்- 9894066303 0422-2566303.


5) மருத்துவப் பயன்கள் -:
சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.


பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.

கோரை.

தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த பின் உச்சியில் மூன்று பிறிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும். இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையது. பெரும் கோரைக்குக் கிழங்குள் கிடையாது வேர் மட்டும். மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலம் மற்றும் பயிர்களுக்கு இடையே களையாகவும் வளர்ந்திருக்கும். பன்றிகள் இதன் கிழங்கை விரும்பித் தின்னும். கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாக இருக்கும். உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது கசப்புத் தன்மையுடையது. ஆனால் நறுமணமாக இருக்கும். பெருங்கோரையை வயல்களில் வளர்த்திப் பெரிதாக வளர்ந்த பின் அதை பாயாகப் பின்னுவார்கள். கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும்.

 மருத்துவப்பயன்கள் -: கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், உடல் பருமனைக் குறைத்து தாது வெப்பு அகற்றி பலமுண்டாக்குதல், இதயம், மூளை, வயித்துக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்பப்பை கோளாறு குணப்படுத்தல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும்.

கிழங்கு சூரணம் 1 கிராம் காலை, மாலை தேனில் கொள்ள புத்திக்கூர்மை, தாதுவிருத்தி, பசித்தீவனம், உடற்பொலிவு உண்டாகும்.

கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்படாகம், பிரமட்டை, சுக்கு வகைக்கு 5 கிராம் சிதைத்து 500 மி.லி. நீரில் போட்டு 125 மி.லி.யாகக் காய்ச்சிக் காலை, மாலை கொடுத்து வரத் தாகத்துடன் கூடிய சுரம் நீங்கும்.

கிழங்கை குடிநீர் செய்து காச்சிய பாலில் சேர்த்து மோராக்கி அதில் உணவு கொள்ளக் குழந்தைகளுக்குக் காணும் பசியின்மை செரியாமை தீரும்.

இஞ்சியும் கோரைக் கிழங்கையும் நன்கு தேன் விட்டு அரைத்து ஒரு சுண்டக்காயளவு கொடுத்தால் சீதபேதி குணமாகும்.

பச்சைக்கிழங்கை அரைத்து மார்பின் மீது பற்றுப்போட்டால் பச்ச உடம்புக்காரிக்குப் பால் சுரக்கும். தேள் கடி, குளவிக் கடி ஆகியவைகளுக்குப் பற்றிட்டால் குணமாகும். இதை உடல் மீது பூசினால் வியர்வை நாற்றம் வராது.

கோரைக் கிழங்கைப் பாலுடன் அரைத்துப் பசையாக்கி தலைக்குப் பூசினால் ஞாபகசக்தி கூடும். வலிப்பு நோய், காச்சல், பைத்தியம் குணமடையும். மேலும் இரத்தக்கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், சிறுநீர் தாரை சுத்தம் ஆகியவை குணமாகின்றது. கர்ப்பப் பையையும், மார்பகங்களையும் நன்கு வளர்ச்சியடையச் செய்கிறது. இதை 1-3 கிராம் பவுடராகவும், 10-70 மில்லிவரை கசாயமாகவும் குடிக்கலாம். குளந்தைகளுக்கும், பச்சை உடம்புக் காரிகளுக்கும் குடிக்கக்கொடுக்கக்கூடாது. சித்த மருத்துவரின் ஆலோசனைப் படி கொடுக்க வேண்டும்.

கோரைக்கிழங்குப் பவுடரை அரை தேக்கரண்டி வீதம் காலையும் இரவும் உணவுக்கு முன் நீர் அல்லது பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, வயிற்றுப்போக்கு நீங்கும்.


 ஆயுர்வேதத்தில் இதனை -முஸ்தா என்போம் .


  • ஆச்சார்யர் சரகர் இந்த மூலிகையை அரிப்பு நிறுத்தும் வர்க்கம் ,தாகம் தீர்க்கும் வர்க்கம் ,தாய்ப்பால் சுத்தம் செய்யும் வர்க்கத்தில் சேர்த்துள்ளார் மேலும் பேதியை நிறுத்த உதவவும்,பசியை தூண்டவும் ,தோல் வியாதிகளிலும் உள்ள மருந்துகளிலும் பயன்படுத்தியுள்ளார் .
  • ஆச்சார்யர் வாக்பட்டர் காய்ச்சலை நிறுத்த சிறந்த மூலிகை என்று குறிப்பிடுகிறார் 
  • கோரை கிழங்கு -ஜ்வரம்,கிருமி ,தாகம்,பேதி ,அரிப்பு ,கிரஹநீ,தூக்கமின்மை ,ரக்த வியாதிகளில்,அக்கி -விசர்பம் ,வலிப்பு ,தோல் நோய்களில் உபயோகமாகிறது 
  • எளிதாக கிடைக்ககூடிய ஆயுர்வேத மருந்துகளான முஸ்தாரிச்டம்,கங்காதர சூர்ணம் ,சடங்கபானியம் (ஆயுர்வேத நிலவேம்பு குடிநீர்),முஸ்தாதி வடி ,பாலா சதுர்புஜ சூர்ணம் ,முஸ்தாதி கசாயம் போன்ற பல மருந்துகளில் மிக முக்கியமான சேர்மான்மாகிறது
  • தனி மூலிகை வர்க்கத்தில் -முஸ்த எனப்படும் கோரைகிலங்கும் பற்படமும் -காய்ச்சலை நிறுத்த உதவும் (அஷ்டாங்க ஹ்ருதயம் -சி -ஒன்று )
  • பேதியை நிறுத்த -கோரை கிழங்கு கசாயத்துடன் தேன் சேர்த்து பருக பேதி நிற்கும் (சுஸ்ருத சம்ஹித -உத்-நாற்பது )
  • மஞ்சள் காமாலை ஹலீமகதில் -லோக பஸ்மதுடன்,கோரை கிழங்கு சூர்ணம் சேர்த்து -கருங்காலி கசாயந்துடன் பருக தீரும் (பாவ பிரகாஷ )
  • என்னுடைய மருத்துவ அனுபவத்தில் சதை வலி களுக்கு மிக சிறந்த மருந்து 

கோரைக் கிழங்கு
  •    செய்கை -துவர்ப்பி ,வெப்பமுண்டாக்கி உரமாக்கி,சிறுநீர்பெருக்கி,வியர்வை பெருக்கி ,உள்ளழல் ஆற்றி ருது உண்டாக்கி ,புழுவகற்றி
    ·         குணம் -நளிசுரம்,குருதி அழல் நோய்,சுரவகைகள் ,நீர்வேட்கை முப்பிணி ,கழிச்சல் ,பைத்திய தோடம்,பித்த காசம் ,கப ரோகம் குதிகாலை பற்றிய வாயு .வாந்தி இவை போகும் 

    செத்த சுரந்தீர்க்குஞ் செம்புனல் பித்தம் போகும்
    வாத சுரந்தணிக்கும் வையகத்தில் -வேதை செய்ய
    வந்த பிணியையெல்லாம் வாட்டுமுத் முத்தக்காசு
    கொந்துலவும் வார்குழலே ! கூறு
    அதிசாரம் பித்தம் அனற்றாகம் ஐயங்
    குதிவாதஞ் சோபங் கொடிய -முதிர்வாந்தி
    யாரைத் தொடர்ந்தாலும் அவ்வவர்க்கெ லாங்குலத்துக்
    கோரை கிழங்கை கொடு (அகத்தியர் குண பாடம் ) 
    காச நோய் தீர -கோரை கிழங்கின் மாவை கிரமப்படி உபயோகிபின் காச நோய் குணமாகும்-
    கோல வுணவைக் குமர நடலிலடு
    கோல வுணவைக் கொடுக யத்தை-

    • நிலவேம்பு குடிநீருக்கான  பாட்டு 
    முத்தக் காசு பற்பாடகம் முதிர்ந்த விளமிச் சிருவேலி
    சுத்த சுக்கு சண்டனமுஞ் சுகமாய்க் காய்ச்சி குடிபீரேல்
    சித்தப் பிரமை யுடன் பிறந்த தேனே மானே சேர்கன்னாய்
    பித்தத் துடனே வந்த சுரம் பேச தோடிப் போய் விடுமே ..

    இப்போது வந்து கலக்கிய சிக்குன் குனியா ,மற்றுமுள்ள மர்மக்காய்ச்சளுக்கு இந்த மூலிகை கலவையே பயன்பட்டது ..
    ·         கோரைக் கிழங்கு மாம்பட்டை ஆகிய இரண்டையும், இடித்துப் பொடியாக்கிப் பிட்டு செய்து, அதை நன்கு பிழிந்தெடுத்த சாற்றில் அதிடயம், இலவம் பிசின் இவற்றைச் சேர்த்து தக்க அளவில் உட்கொண்டால் கழிச்சல் ஜுரம் தீரும்.

  • ·         இதன் குடிநீரை பேதி, குன்மம், வாந்தி முதலியவற்றிற்குத் தரலாம்.
  • ·         இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் இடித்து தேன் விட்டரைத்து ஒரு சிறு சுண்டைக்காய் அளவு கொடுத்தால் சீதபேதி போகும்.
  • ·         பச்சைக் கிழங்கை அரைத்து மார்பில் பற்றாகப் போட்டால் பால் சுரக்கும் தேள் கடிபட்ட இடத்திலும் பற்றிடலாம். உடல் மீது பூசி வந்தால்     வியர்வை நாற்றம் போகும்.
  • ·         கோரைக் கிழங்கு, பேய்ப்புடல், திரிபலை, திராட்சை, வேம்பு, வெட்பாலை இவைகளை வகைக்கு கொஞ்சம் எடுத்து முறையாக குடிநீர் செய்து சாப்பிட்டால் சுரம் நீங்கும்.
  • ·         கோரைக்கிழங்கு முழுகுநீர் கோரைக்கிழங்கு, திரிபலை, மருக்காரை, புங்கு, கொன்றை, வாலுளுவை, வாற்கோதுமை, ஏழிலைப் பாலை, கோட்டம், ஞாழல், மரமஞ்சள், வெண்கடுகு இவற்றை நீரிலிட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் பெருநோய், சொறி, வீக்கம், பாண்டு தீரும்.
  • ·         கோரைக்கிழங்கு, சீந்தில், மரமஞ்சள், அன்னபேதி, கோண்டம், வெள்ளிளலோத்திரம், கந்தகம், சாம்பிராணி, வாய்விடங்கம், மனோசிலை, தாளசம், அலசிப்பட்டை இவற்றைப் பொடித்து, உடலில் எண்ணெய் தடவி, அதன்பின் மேற்படி பொடியைத் தேய்க்க, சருமப்படை, சிரங்கு நீங்கும்.
  • ·         கோரைப்பாய் இது சிறிய, பெரிய கோரைக்களால் செய்யப்படுகிறது. இதில் படுத்து வந்தால் பசி, மந்தம், காய்ச்சல் வேகம் நீங்கும், உடலுக்கு குளிர்ச்சி தரும், தூக்கம் உண்டாகும்
  •  கோரை கிழங்கை காய வைத்து சூரணமாக்கி 1 முதல் 2 கிராம் வரை , தினம் இரு வேளை பாலில் உண்டு வர உடல் பருக்கும். மேலும் இந்த சூரணத்தை உடம்பில் தேய்த்து குளிக்க உடம்பில் உள்ள துர் நாற்றம் , கத்தாளை நாற்றம் ஆகியவை தீரும். கோரை கிழங்கு சூரணம் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். எவ்விதமான பத்தியமும் கிடையாது.கோரை புற்களை வேர் வரை தோண்டினால் கிடைக்கும் கிழங்கே கோரை கிழங்கு ஆகும்
  •  கோரை கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் குறையும்.
  •  திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரையாகும். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகிறது. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான இலையையுடைய சிறுபுல்லினம். முட்டை வடிவான நறுமணமுடைய சிறுகிழங்குகளைப் பெற்றிருக்கும். இக்கிழங்குகள் முத்தக்காசு எனக் குறிக்கப்பெறுகின்றன. இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. 
  •