COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

பிரண்டை


வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.


 ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன.


முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும்.


இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும், காரத்தன்மையும். எரிப்புக் குணமும், மைக்ககும் இயல்பும்உடையது.இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.


பிரண்டை உப்பு -: பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டிஅரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.


பேதி, வாந்தி -: குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.


வாய்ப்புண் - :வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.


வயிற்றுப்புண் -: தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேழை சாப்பிட குணமாகும்.


மூலம் -:நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வெண்ணெயில் 24 -48 நாள் இரு வேழை கொடுக்க குணமாகும்.


பிரண்டை பற்பம் - : 300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.


உடல் பருமன் -: பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.


ஆஸ்துமா -: இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.


சூதகவலி - : மூன்று வேழை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.


தாதுநட்டம் -: பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.


செரியாமை -: பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.


நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.
பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேழையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.


காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்கஇந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.




பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.


முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.




பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேழைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.


பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.இதனை உணவில் சேர்த்துவர மூலநோய், மலச்சிக்கல், வயிற்றெரிவு, குடற்புண் என்பன நீங்கும். செரியாமை, சுவையின்மை நீங்கிப் பசியுண்டாகும்.
வஜ்ஜிரவல்லிச் சூரணம் செய்யப் பயன்படுகிறது.



உடல் தேற


சிலர் உடல் மெலிந்து எப்போதும் சோகமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.


வயிற்றுப் பொருமல் நீங்க


வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.


இரத்த மூலநோய் குணமாக


மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.


செரிமான சக்தியைத் தூண்ட


சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.


முதுகு வலி, கழுத்து வலி குணமாக


சிலர் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இவர்களின் எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.


இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.


இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.


எலும்பு முறிவுக்கு


எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.


இதயம் பலப்பட


உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர் களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன.


பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.


பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.


பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.


புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும். 


கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.
]
மெலிந்த உடல் குண்டாக

ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
பிரண்டை துவையல்

எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். 

மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.

நெருஞ்சில்




இதன் வேறு பெயர் -: திருதண்டம்,கோகண்டம், காமரசி ,


வகைகள் -: சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும்.


நெருஞ்சில் ஒரு அற்ப்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. மேலும் இது ஒரு ஆகர்ஷண மூலிகையாகும்.
இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும்.
கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன்தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும்.  இது ஒரு முட்செடி., சிறு சிறு முற்கள் உண்டு. .இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது.

நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10 கிராம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைக்கவும், இத்தூளை கொதி நீரில் போட்டு காபி போல சர்கரை சேர்த்து அருந்தலாம். உடலுக்கு நிறந்து ஊட்டம் தரும். குளிர்ச்சி தரும். எதிர்ப்பாற்றல் பெருகும்.

தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணலாம்.  மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும்.


8. மருத்துவப் பயன்கள் -: இதன் குணம் - கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது. உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது.

நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.

நீர் அடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு முதலிய நோய்களுக்கு நன்கு கசக்கிய நெருஞ்சில் காயை அறுபத்தெட்டு கிராம் எடுத்து அதனுடன் கொத்துமல்லி விதை எட்டு கிராம் , நீர் 500 மி.லி. சேர்த்து ஒரு சட்டியில் வார்த்து நன்கு காய்ச்சி வடித்து நாற்பது மி.லி. வீதம் உள்ளே அருந்தி வர நோய்தீரும்.

நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.

சமூலத்துடன் கீழாநெல்லிச் சமூலம் சமன் சேர்த்து மையாய் அரைத்து கழற்சிக் காயளவு எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை 1 வாரம் கொடுக்க நீர்த்தாரைஎருச்சல், வெள்ளை, நீரடைப்பு, மேகக்கிரந்தி, ஊரல் தீரும்.

நெருஞ்சில் சமூலம் பத்து பங்கு, மூங்கிலரிசி ஐந்து, ஏலம் நான்கு, கச்சக்காய் நான்கு, ஜாதிக்காய் மூன்று, இலவங்கம் நான்கு, திரிகடுகு ஐந்து, குங்கும்ப்பூ சிறிது இவைகளை எடுத்து சட்டியிலிட்டு முறைப்படி குடிநீர்செய்து பனிரெண்டு முதல் முப்பத்தைந்து மி.லி. அளவு அருந்தி வர, சூட்டைத் தணித்து நீர் எரிச்சலையும் மேக நோயின் தொடர்பாக ஏற்பட்ட ஆண்மைக் குறைவையும் நீக்கி, உடலுக்கு வன்மையை ஏற்படுத்தும்.

தேள் கடிக்கு நெருஞ்சில் சிறந்த மராந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.

நெருஞ்சல் வித்தினைப் பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும். இளநீரில் சாப்பிட்டு வரச் சிறுநீர்கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்.

சமூலச்சாறு 1 அவுன்ஸ் மோர் அல்லது பாலுடன் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடையும்.

பித்த வெட்டையால் ஏற்படும் வெண்குட்டம் குட்ட நோய் போல் கடுமையானது அன்று. தோலின் நிறத்தை மட்டுமே வெண்மையாக்கும். பித்த நீர் தோலில் படியும் போது வெப்பத்தை ஈர்த்து தோலின் நிறம் மாற்றுகிறது. இதற்கு நல்ல மருந்து இதுவாகும்.

பெரு நெருஞ்சில் காய் 250 கிராம், உளுந்து 100 கிராம், கருடன் கிழங்கு பொடி 200 கிராம், வாசுலுவை அரிசி 50 கிராம் சேர்த்து அரைத்து கல்கமாக்கவும். ஒரு கிலோ பசு நெய் வாணலியில் ஊற்றி எரிக்கவும். கல்கத்தை வடையாகத்தட்டி அதில் போட்டு எடுக்கவும், நெய்யை வடித்து வைக்கவும். காட்டுச் சீரகம், மிளகு வகைக்கு 100 கிராம் சேர்த்துச் சூரணம் செய்க. காலை, மாலை 5 மி.லி.நெய்யில் 5 கிராம் சூரணம் சேர்த்து சாப்பிடவும். வடையைப் பாலில் அரைத்து மேல் பூச்சாக பயன்படுத்தலாம். பூசி 2 மணி நேரம் கழித்து குளிக்கவும். புகை, புலால், போகம், புளி தவிர்க்கவும். வெண் குட்டம் குணமாகும். நாடபட்டதும் மேலும் பரவாமல் குணமாகும்.

நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10 கிராம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைக்கவும், இத்தூளை கொதி நீரில் போட்டு காபி போல சர்கரை சேர்த்து அருந்தலாம். உடலுக்கு நிறந்து ஊட்டம் தரும். குளிர்ச்சி தரும். எதிர்ப்பாற்றல் பெருகும்.

இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர்.பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்.




இதன் இலையை ஒரு குவளை தண்ணீரில் சிறிது நேரம் இட்டால் ,தண்ணீர் அடர்த்தி மிகுந்து கெட்டியாகிவிடும் .பார்ப்பதற்கு அதிசியமாக இருக்கும் .எண்ணெய் போல் பிசுபிசுப்பு ஆகிவிடும் .இதுவும் ஒரு மருந்து ,இது காமவர்த்தினி .ஆண்மை பெருக்கி . .மேலும் இது பட்டுத்துணிகளை சுத்தப்படுத்தும்.

யானை நெருஞ்சலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும்.

இது எந்த ரசாயனமும் இல்லாமல் இயற்க்கை முறையில் பட்டு முதலிய துணிவகைகளை சுத்தம் செய்து கரைகளை எடுக்கும் .ஒரு பயோ சலவையகம் கூட துவக்கலாம் .

சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும்.

பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்..இவ்வை குணத்தில் மாறுபடுவதில்லை. இதன் இனப்பெருக்கம் விதைமூலம் செய்யப்படுகிறது.

இது குளிர்ச்சி உண்டாக்கி , சிறுநீர் பெருக்கி , உரமாக்கி , உள்ளழலகதறி ,ஆண்மைப்பெருக்கி 
நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இவ்வுப்புகள் சில வேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும்.
நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.

உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில்: மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் .  இது ஒரு சும்மா கிடைக்கும் வயகரா .!
சாப்பிட்டுப்பார்த்தால் தான் தெரியும் அதன் வலிமை.  நம்மிடையே இருக்கும் ஆண்மை பெருக்கி மருந்துகள் பல இன்னும் சரிவர பயன்படுத்தாமல் இருக்கிறது .நெருஞ்சல் வித்தினைப் பாலில் புட்டவியல் செய்து  உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும்.

இது ஒரு ஊக்கி மருந்து ஆகும்

நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.

நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.

சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும். டயாலிசிஸ் செய்தது லக்ஷக்கணக்கில் பணத்தையும் உடல் நலத்தையும் இழக்கவேண்டாம்.

இதனை எளிய மருந்தாய் எண்ணி உதாசீனப்படுத்த வேண்டாம்.  சித்தர்களின் சுவடிகளில் சொல்லப்பட்ட அரிய மருத்துவ முறை இது.சிறிது சிரத்தை எடுத்தால் சீரும் சிறப்புமாக சிறு சிறுநீரகததைப் பற்றி கவலைப் பட வேண்டாம்.
யானை நெருஞ்சலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும்.
சிறு நெருஞ்சில்


வாத, பித்த, கபம் இவற்றின் திரிபால், ஏற்படும் மூத்திர கிரிச்சரத்தையும் இது தீர்க்கும்,வலிமையான சுரம், உட்சூடு,தேக எரிவு,கல்லடைப்பு,சிறு நீரக செயலிழப்பால் உடம்பில் தேங்கும் நீர்க்கட்டை உடைத்து அதிகமான கெட்ட தண்ணீரை வெளியேற்றும்.உடம்பை நிமிரவிடாது செய்யும் வாதம்,வெட்டை இவற்றை நெருஞ்சில் போக்கும்.


மேக வெட்டை என்பது பெண்ணின்பத்தாலோ, அல்லது தேகச்சூடு அதிகரிக்கும் வண்ணம் உடலுறவு வைத்துக் கொள்வதாலோ,அதிக நேரம் இரவில் கண்விழித்துவிட்டு,பகலில் அதிக நேரம் தூங்குவதாலோ,உடற்சூட்டை அதிகரிக்கும் லாகிரி வஸ்துக்களான மூக்குப் பொடி,டீ,காப்பி,பீடி,சிகரெட்,வெற்றிலை பாக்குடன் புகையிலை சேர்த்து உபயோகித்தல், மது வகைகள் இவற்றை உபயோகிப்பதால் உருவாவது.இந்த மேகவெட்டை,நீர்ச்சுருக்கு,வீரியமுடைய திரி தோஷம்,அதி வேகமுடைய சுரம்,அதீத தாகம்,உடல் வெப்பம்,தேக காங்கை,இவற்றைத் நெருஞ்சில் தீர்க்கும்.
சூரணங்கள் அதாவது மூலிகைப் பொடிகள் 6 மாதங்கள் மட்டுமே ஆயுள் எனவே அவற்றை நாமே தயாரித்தால்தான் முழு பலத்துடன் இருக்கும்.மேலும் மூலிகைகளை நிழலில் உணர்த்தித்தான் தயாரிக்க வேண்டும்.அரைக்கும் போது அதிகம் சூடாகி வெந்து போகாமல் பொடியாக்க வேண்டும்.அப்போதுதான் மூலிகைகள் முழு பலத்துடன் செயல்படும்.


அவற்றை கல்வத்தில்(மருந்தரைக்கும் குழியம்மியில் வைத்து  அரைக்க வேண்டும்).இப்படி அரைக்கும் போது அதிகம் சூடாகி வெந்து போகாது.இப்படி இதைத் தயாரித்து கொடுத்தால் நூறு சதவிகிதம் பலன் தரும்.




இங்கே ஒரு சுவாரசியமான விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.எனது தாத்தாவின் மருத்துவக் குறிப்புகளில் (1) கல்நார் பற்பம்(சிறுநீரகம்,பிறப்புறுப்பு மண்டலம்),(2) சிலா சத்து பற்பம் ( எலும்பு மண்டலம், உடலின் அத்தனை உறுப்புக்கள்,சிறுநீரகம்,பிறப்புறுப்பு மண்டலம்),(3) ஆமையோட்டு பற்பம் (எலும்பு மண்டலம், வயிறு, கல்லீரல், மண்ணீரல்), (4) படிகார பற்பம் (குடல்புண்,சிறுநீரகம்), (5)சிருங்கி பற்பம்(எலும்பு மண்டலம்,இதயம்,இரத்தக் குழாய்கள்).


மேற்கண்ட ஐந்து பற்பங்களை கலந்து வைத்துக் கொண்டு பற்பக் கலவையை ஒரு சிட்டிகை எடுத்து விபூதியை வாயில் போடுவது போல போட்டுவிட்டால்,அந்த நபருக்கு எந்த வியாதி இருந்தாலும் போய்விடும்.

நொச்சி

குளம் குட்டைகளின் கரையோரங் களிலும் பாதையோரங்களிலும் பக்கக் கிளைகளுடன் படர்ந்து வளரும் சிறு செடியாகும். மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. நொச்சி இலையின் மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை. ஆதலால் தானியப் பாதுகாப்பில் நொச்சி இலை பயன்படுகிறது. ஓலைச் சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.

  1. நொ‌ச்‌சி இலையை இடி‌த்து சாறு பி‌ழி‌ந்து க‌ட்டிக‌ளி‌ன் ‌மீது பூ‌சி வர க‌‌ட்டி கரையு‌ம். ‌வீ‌க்க‌ம் குறையு‌ம்.
  2. நொ‌ச்‌சி, தழுதாழை, மா‌வில‌ங்க‌ம் ஆ‌கியவ‌ற்றை சம அளவு எடு‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து, ஒரு ஆழா‌க்கு எடு‌த்து அ‌‌தி‌ல் 35 ‌கிரா‌ம் பெரு‌ங்காய‌த்தை பொடி‌த்து‌ப் போ‌ட்டு‌க் கா‌ய்‌ச்சவும்.
  3. அது குழ‌ம்பு பத‌த்‌தி‌ல் வ‌ந்தது‌ம் அ‌தி‌ல் ஒரு கர‌ண்டி ‌வீத‌ம் எடு‌த்து தொட‌ர்‌ந்து 10 நா‌ட்க‌ள் சா‌ப்‌பிட கு‌ன்ம‌ம் என‌ப்படு‌ம் அ‌ல்ச‌ர் வ‌யி‌ற்றுவ‌லி குணமாகு‌ம்.
  4. நொ‌ச்‌சி மல‌ர்களை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து இர‌ண்டு ‌சி‌ட்டிகை அளவு எடு‌த்து பன‌ங்க‌ற்க‌ண்டு சே‌ர்‌த்து சா‌ப்‌பிட ர‌த்த பே‌தி, ர‌த்த வா‌ந்‌தி குணமாகு‌ம்.
  5. நொ‌ச்‌சி இலையை ‌சி‌றிது ஆமண‌க்கு எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி ஒ‌த்தட‌ம் இட, மூ‌ட்டுவ‌லி, மூ‌ட்டு ‌வீ‌க்க‌ம் குறையு‌ம்.
  6. நொ‌ச்‌சி‌க் கொ‌ழு‌ந்து, சு‌க்‌கு சே‌ர்‌த்து அரை‌த்து, அதனுட‌ன் ச‌ர்‌க்கரை, நெ‌ய் சே‌ர்‌த்து லே‌கிய‌ம் போல ‌கி‌ண்டி ஒரு ம‌ண்டல‌ம் உ‌ட்கொ‌ண்டு வர ‌சீத‌க்க‌ழி‌ச்ச‌லி‌னா‌ல் ஏ‌ற்படு‌ம் கடு‌ப்பு குணமாகு‌ம்.

மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம். நொச்சித் தைலம் பல நோய்களைத் தீர்க்கும் நிவாரணியும் கூட.

மேலும் நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும். இதன் இலையைச் சட்டியில் போட்டு பிறகு அடுப்பில் சூடு செய்து உடம்பு ஏற்கும் அளவு சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும். வலியுள்ள இடத்தில் துவையலாக அரைத்தும் பூசலாம். மண்ணீரல் வீக்கமும் கட்டுப்படும்.

நொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்துப் தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும். உலர்ந்த நொச்சி இலையைத் தூள் செய்து பீடிப்புகை பிடித்தாலும் ஜலதோஷம் நீங்கும். இதனுடைய சாறு வயிற்றுப் புண்ணையும் ஆற்றும். இலைச்சாற்றை தலைப்பகுதியிலும், கழுத்திலும் தேய்த்து, சிலமணி நேரம் உடலில் ஊறவிட்டு இளஞ்சூட்டு வெந்நீரில் குளித்தால் கழுத்துவலி நீங்கி, காதில் தங்கிய நீரும் வெளியேறும்.

சீழ்பிடித்து அழுகிச் சொட்டும் புண்ணைக் கூட நொச்சி தைலத்தால் குணப்படுத்தலாம். நொச்சி இலையுடன் திப்பிலி சேர்ந்த கஷாயம் ஜலதோஷக் காய்ச்சலுக்கு நல்லது. கேளாச் செவியையும் கேட்க வைக்கும்.

பிரசவத்துக்கு முன்னும் பின்னும் கர்ப்பப்பையில் ஏற்படும் வலி குறைய நொச்சி இலை போட்டு ஊற வைத்த தண்ணீரைச் சூடுபடுத்தி, உடம்பில் ஊற்ற வேண்டும்.

தீராத வாதநோய் வலிப்பு குணமாக நொச்சி இலையுடன் பூண்டு, ரோஜா மொட்டு அல்லது காசினி விதைப்பூ சேர்த்த அரிசிக்கஞ்சியை குடிக்கலாம். மிளகு, நெய் இரண்டும் சேர்த்து நொச்சிக் கொழுந்தை அரைத்து வழித்த சாரும் 2 தோலாவுடன் (1 தோலா என்பது 12 கிராம்) 2 தோலா அளவு குடித்தால் ஈரல் வீக்கம் கட்டுப்படும்.

நொச்சி வேர்ப்பட்டையின் சாரத்தை புண்ணுக்கு டிஞ்சராகத் தடவலாம். நொச்சி வேர்ப்பொடி மூலத்துக்கும், சீதபேதிக்கும் மருந்தாக பயன்படுகிறது. நொச்சிவேர் நாள்பட்ட புண், குடல்புண், வயிற்றுப் புழு, தொந்தரவுக்கு கிருமி நாசினியாகும். உலர்ந்த நொச்சிப் பூக்களைத் தூள் செய்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, காய்ச்சல் குணமாகும். நொச்சிப் இலையும், பட்டையும் தேள்கடிக்கு நல்ல மருந்து.

செம்பருத்தி(Hibiscus rosasinensis)

                                                                      செம்பருத்தி
            ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது 
      • இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும்.
        இதுதான் மருத்துவ ரீதியில் சிறந்தது.  
      • இத்தாவரங்களில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.


        இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை.
        மாதவிடாயைத் தூண்டக் கூடியது.இலைகளை அரைத்து  குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம் .உடலுக்கு குளிர்ச்சி .முடிக்கு நல்லது .இதழ்களின் வடிசாறு . சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும்.  இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.


        கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.
        காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.
        400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.


        இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும்.


        காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்.


        ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.


        பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.


        செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
        இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.


        செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.


        இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு?


        வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் . செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை  அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.


        நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது. தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் 10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்
      • இச்செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது.
      • இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர்.
      • சீன மருத்துவ முறைகளிலும் இந்தப் பூ பயன்படுகிறது.
      • இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த செடியின் பூ பயன்படுகிறது.
      • காலணிகளை பொலிவூட்டவும் இந்த பூவின் இதழ்களை பயன்படுத்தலாம்.
      • ஜமாய்க்காவில் இந்தப் பூவை வயிற்றில் உண்டான கருவை கலைக்கவும் பயன்படுத்துகின்றனர்.
    • பூக்கள் பல நிறங்களிலும், பல அடுக்கு இதழ்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன.இது தவிர கலப்புப் பிறப்பாக்கம் மூலமும் பல்நிற பூக்களை உருவாக்க முடியும். 


    •   இப்பூவில் தங்கச்சத்து உள்ளது.
      இரத்த சிவப்பணுக்களுக்கு இது பெரும் துணை 
      புரிவதாகும்.

      இம்மலர் தின்பதற்கு சற்று வழவழப்பாக இருக்கும்
      தினமும் ஐந்து செம்பருத்திப் பூக்களை 48 நாட்கள் 
      ஓர் ஆண் தின்று வந்தால், இழந்த சக்தியையும் 
      பலத்தையும் பெறுவான்.
        
      பெண்கள் இம்மலரை உண்டுவந்தால் வெள்ளை ,
      வெட்டை ,இரத்தக்குறைவு, பலவீனம் ,மூட்டு வலி ,
      இடுப்புவலி ,மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதுடன்
      கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.
      பெண்மை வளரும்.

      பிள்ளைகள் இம்மலரை உண்டு வந்தால் ஞாபக சக்தி
      நினைவாற்றல்,புத்திக்கூர்மை, மூளை பலம் ஏற்படும்.

      சிறுவர்கள் சாப்பிடும்பொழுது இப்பூவிலுள்ள மகரந்தக்காம்பை
      நீக்கி விட வேண்டும்.

      செம்பருத்தி இலைகளை அரைத்து சீயக்காய்த் தூளுடன்
      சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி கொட்டுதல் ,
      பொடுகு யாவும் தீரும். ஒருநாள்விட்டு மறுநாள் இவ்விதம்

      நாலைந்து முறை குளிக்க வேண்டும்.
    • செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
    • வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)
    • கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)
    • மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.)
    • வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.)

    வெட்டி வேர்

    வேறுபெயர்கள் -: குருவேர், உசிர், வீராணம்.


     இது அனைத்துவகை மண்ணிலும் வளரும்.வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல்வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு. இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.இது லெமன்கிரேஸ், பாம்ரோஸா புல் போன்று வளரும். வெட்டிவேர்மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும். 

    மருத்துவப் பயன்கள் -: வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. வெட்டி வேர் சிறந்த மருத்துவப் பயனுடையது. இதிலிருந்து எடுக்கப் படும்.தைலமும் நறு மணம் கொண்டது. இதனை மணமூட்டியாக தைலங்களிலும். குளியல் சோப்புகளிலும், பயன் படுத்துவதுண்டு. இந்த எண்ணெய்யைகை,கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.இது காய்ச்சல் மற்றும்வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும்.வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.

    வெட்டி வேரை நன்கு உலர்த்தி பொடிசெய்து கொண்டு 200 மி.கி. முதல் 400 மி.கி. அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு அந்த ஊறல் நீரை 30 மி.லி. முதல் 65 மி.லி. அளவு வீதம் அருந்தி வர காச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப் படும்.

    வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும். விசிறியைக் கொண்டு வீசி வர உடல்எரிச்சல், நாவறட்சி தாகம், இவை நீங்கும். மனம்மகிழ்ச்சிய்ம் உண்டாகும்.
    கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மனத்தையும் குளிர்சியையும் தரும்.

    வெட்டிவேரை இரண்டுபிடி எடுத்து ஒரு மண் பாண்டத்தில்போட்டு நன்கு காச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையைப்போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டானதேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்பளங்கள், சொட்டுச் சொட்டாக சிறுநீர் இறங்குதல்முதலிய உஷ்ண வியாதிகள் யாவும் தணியும். வெட்டி வேரைக்கொண்டு குழித்தைலம் இறக்கி அதனை 1 முதல் 2 துளி சர்கரையில் கலந்து கொடுக்க வாந்தி பேதி குண்மாகும்.

    கோடைகாலத்தில் நீர் எரிச்சல், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, முதலிய நோயால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டுஅதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்துவெந்நீரில் 200 மி.கி. அருந்தி வர குணம் தெரியும். வெட்டிவேரை இருக்கைகளிலும், குடிநீரில் போட்டும் பயன் படுத்துகிறார்கள்.

    பருக்கள் நீங்க....
    முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது...
    சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - ஒரு டீஸ்பூன்
    கொட்டை நீக்கிய கடுக்காய் - 1
    இந்த இரண்டையும் முந்தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.
    ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!
    தழும்புகள் நீங்க....
    பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும் அதற்கான நிவாரணம் இதோ...
    ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள்.
    இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள்.
    வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.
    ஸ்பெஷல் பேக் இது...
    சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப்பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் பேக் இது...
    வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.
    வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.
    சருமம் மிருதுவாக:-
    சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.
    இந்த இரு பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.
    பச்சைப்பயறு - 100 கிராம்
    சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - 50 கிராம்
    இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.
    தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.
    கூந்தல் மணக்க....
    அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
    வெட்டிவேர் - 100 கிராம்
    வெந்தயம் - 100 கிராம்
    இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.
    தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்!