COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

வாதமடக்கி ,வாதநாராயணன்.வாதரசு, வாதரக்காட்சி

வாதநாராயணன் தாயகம் காங்கோ, எகிப்து, கென்யா, சூடன், உகண்டா, எத்தோபியா, போன்ற நாடுகள். பின் இந்தியா, ஸ்ரீலங்கா, பாக்கீஸ்தான், சாம்பியா ஆகிய நாடுகளிக்குப் பரவியது. மரவகையைச் சேர்ந்தது. செம்மண்ணில் நன்கு வளரும். ஆற்றங்கறைகளில் அதிகம் காணப்படும். இது பத்தடி முதல் 45 அடி வரை வளரக்கூடியது. தமிழகமெங்கும் வளரக்கூடியது. வெப்ப நாடுகளில் ஏராளமாகப் பயிராகும். வீடுகளிலும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் இதனை வளர்ப்பார்கள். இதன் இலை பார்பதற்கு புளியிலைகளைப் போன்று சிறிதாக இருக்கும். கால்நடைகளுக்கு நல்ல தீவனம். இரு சிறகான சிறு இலைகளையுடைய கூட்டிலை 10-14 ஜதைகளாகவும் உச்சுயில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள் சிவப்பு நிறமுடைய மரம். பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும். மே, ஜூன் மாதங்களில் காய்கள் விடும். இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகளை விதைக்கும் மூன்பு 24 மணி நேரம் ஊரவைக்க வேண்டும்.

மருத்துவப் பயன்கள் -: வாதயாராயணன் பித்த நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதம் அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாய்வைக் குறைக்கும். பித்தம் உண்டாக்கும். வீக்கம் கரைக்கும். குத்தல் குடைச்சல் குணமாகும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும். ஆடாதொடை போல இழுப்பு சன்னியைக் குணமாக்கும். பல ஆண்டுகளான சேகு மரத்தை தண்ணீரில் ஊர வைத்து கெட்டியாக்கி தேக்கு மரம் போன்று உபயோகப்படுத்துவார்கள்.

இதன் இலையை எள் நெய்யில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் தீரும்.

இலையை இடித்துப் பிழிந்த சாறு 500 மி.லி. சிற்றாமணக்கு நெய் 500 மி.லி. பூண்டு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைகு 30 கிராம், வெள்ளைக் கடுகு 20 கிராம் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் வடித்து வைத்து, இதில் 5 -10 மில்லி உள்ளுக்குக் கொடுத்து வெந்நீர் அருந்த பேதியாகும். அனைத்து வாத நோய்களும் குணமாகும். மேல் பூச்சாக பூசலாம். கீல் வாதம், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், இழப்பு, சன்னி, மேகநோய் யாவும் குணமாகும். மலச்சிக்கல் முழுவதும் குணமாகும்.

சொறி சிரங்கிற்கு இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர அவை நீங்கும்.

மேக நோயால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை நன்கு உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை 1 கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து அருந்தி வர குணமாகும்.

இரத்த சீதபேதிக்கு வாதநாராயணன் வேரை அரைத்து எருமைத் தியிருடன் கலந்து அருந்த குணம் தெரியும்.

இலையைப் போட்டுக் கோதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.

நகச்சுத்தி, கடுமையான வலியுடன் நகக்கண்ணில் வீக்கம் வரும். இதற்கு பிற மருந்துகள் எதுவும் கேட்பதில்லை. இதன் தளிரை மைபோல் அரைத்து வெண்ணெயில் மத்தித்து வைத்துக் கட்ட இரு நாளில் குணமாகும். வலி உடனே நிற்கும்.

இதன் இலைச்சாறு 1 லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறு வகைக்குக் கால் லிட்டர் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெணெணெய வகைக்கு அரை லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரை லிட்டர் பசும் பாலுடன் கலக்கிப் பதமாகக் காய்ச்சி 21 வெள்ளெருக்கம் பூ நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மேற்பூசாகத் தடவிப் பிடித்து விடப் பக்க வாதம், பாரிச வாயு, நரம்பு இழப்பு முக இசிவு, முகவாதம், கண், வாய், நாக்கு, உதடு, இழப்பு ஆகியவை தீரும்.

வாத நோய் எண்பது என்கின்றனர். இதன் இலை, பட்டை, வேர்பட்டை ஆகியன சூரணமாகவோ, குடி நீராகவோ, தைலமாகவோ சாப்பிட எல்லா வகையான வாதமும் தீரும்.

இதன் இலையின் சூரணத்தை 500 கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடிநீராக குடிக்க வாய்வுத் தொல்லை, வயிற்று வலி குணமாகும்.

“சேர்ந்த சொறி சிரங்கு, சேர்வாதம் எண்பதும் போம்
ஆர்ந்தெழுமாம் பித்தம் அதிகரித்த மாந்தமறும்-
ஐய்யின் சுரந்தணியும், ஆனதழுதாழைக்கே
மெய்யின் கடுப்பும் போம்விள்” -------குருமுனி

பற்பாடகம்

    பற்பாடகம் என்பதும் மூலிகையே. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி நன்றாக சுத்தி செய்து அல்லது தண்ணீரில் நன்கு கழுகி 5 கிராம் அளவு எடுத்து அதை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி  இரு வேளையும் கொடுத்து வர குழந்தைகளுக்கு காணும் சீதபேதி, மற்றும் சுரம் ஆகியவை கட்டுக்குள் வரும். இதை பெரியவர்களும் சாப்பிட நோய்கள் குணமாகும்.
    பற்பாடகம் இலையைப் பாலில் அரைத்து தலையில் தடவி குளித்து வரக் கண்ணொளி மிகும். உடல் நாற்றம், சூடு தணியும்.
    இனம்தெரியாத எவ்வகைக் கய்ச்சலாயினும் கைப்பிடி அளவு பற்பாடகம் எடுத்து தேக்கரண்டியளவு மிளகு, சுக்கு, அதிமதுரம், வேப்பங்கொழுந்து இடித்துப் போட்டு தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி அதை காலை, மாலை கொடுத்துவரக் குணமாகும். இவ்விதம் மூன்றுநாள் கொடுக்க வேண்டும்.
 கண்டங்கத்திரி இலை, ஆடாதொடை, விஷ்ணுகாந்தி, பற்பாடகம் , சீரகம், சுக்கு  ஆகியவைகளை சேர்த்து காய்ச்சி குடித்தால் தலையில் ஏற்படும் நீர் ஏற்றம் குறையும்.

    தேவையான அளவு பற்பாடகத்துடன் சிறிது பச்சைப் பயிறும் சேர்த்து அரைத்துத் தலைக்குத் தேய்த்து இளம் வெந்நீரில் குளித்துவர உடல் குளிர்ந்து சமநிலைக்கு வரும்.

:நித்யகல்யாணி

மணல் பாங்கான இடத்திலும், தரிசு நிலங்களிலும், தானாக வளரும் தாவரம் நித்திய கல்யாணி.
இது களர், மற்றும் சதுப்பில்லாத நிலத்திலும் வளரும். இது எல்லாப் பருவங்களிலும் பூக்கும் தன்மையுடையது. தமிழகமெங்கும் தானே வளர்கிறது. அழகுத் தாவரமாக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.பல காலமாக இதை வணிக ரீதியாகப் பயிரிடுகிறார்கள்.
ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை. இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, பெரிவீன்க்கில் மதுக்கரை, முதலிய பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

ஆல்கலாய்டுகள், வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின், அஜ்மாலின், ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine)

மனநோய்களை குணமாக்கும்

இது இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். நித்தியக் கல்யாணி நாடி நடையைச் சமப்படுத்தவும், சிறுநீர்ச்சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகிறது.

புற்றுநோய்க்கு மருந்து

இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். லுக்கேமியா மற்றும் லும்போமா புற்றுநோய்களை குணப்படுத்தும் மருந்துகளில் நித்தியகல்யாணியில் உள்ள ஆல்கலாய்டுகள் பயன்படுகின்றன. இதில் உள்ள அஜ்மாலின் கூட முக்கியமான வேதிப்பொருளாகும். ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine) இது தவிர மருந்து செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து கிடைப்பதாலும் இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும். பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.

நீரிழிவுநோய் கட்டுப்படும்

நித்யகல்யாணியின் ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும்.

சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர்ச் சர்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.
 
நீரிழிவுக்கு இதன் வேர்ப்பொடியை தினசரி அரை ஸ்புன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு குடிக்க  பசியின்மை, அதிக பசி, அதிக தாகம், அதிமூத்திரம் போன்றவை குணமாகும்.

குடசப்பாலை

குடசப்பாலை




வலுவான கிளைகளைக் கொண்ட இதன் பட்டை தடிப்புடையதாகச் சொரசொரப்பான பொருக்குகளுடன் பழுப்பு நிறமாக இருக்கும். இதன் பட்டை, இலை, விதை ஆகியன மருத்துவப் பயனுடையவை. குடசப் பாலை (Holarrhena antidysenterica) என்பதை குழிசிப் பாலை என்றும் சொல்லுவது உண்டு. (குழிசி = குடம்;குழிசிப்பாலை>குளசிப்பாலை>குளப்பாலை.) இதைக் குத்துப் பாலை, கசப்பு வெட்பாலை என்றும் கூடச் சிலர் சொல்லுவார்கள். "வடவனம் வாகை வான்பூங் குடசம்" என்று பல்வேறு பூக்களைச் சொல்லும் இடத்தில், குறிஞ்சிப் பாட்டின் 67 - ஆம் வரி சொல்லும். வான்பூ என்பது வெள்ளைப்பூ என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடு.

சர்ம நோய்களுக்கும், சர்ம பராமரிப்புக்கும் தேவையான பல மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று குடசப்பாலை.
குடசப்பாலையின் இதர பெயர்கள் – வெட்பாலை, குளப்பாலை
குடசப்பாலை ஒரு சிறு மரம் அல்லது பெரிய செடி 12 (அ) 15 அடி உயரம் வளரும். மரத்தில் எந்த பாகத்திலும் சிறிது காயப்படுத்தினாலே, பால் கசியும் மரப்பட்டை பழுப்பு நிறத்தில் இருக்கும். இலைகள் 8 லிருந்து 24 செ.மீ. நீளமாகவும், 4 லிருந்து 10 செ.மீ. அகலமாகவும் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறிதளவு வாசனையுடன் இருக்கும். விதைகள் காற்றில் பரவுவதற்கு ஏற்றதாக பட்டுப்போன்ற முடிகளுடன் இருக்கும். இந்தியா முழுவதும் குடாஜ மரத்தை காணலாம்.
உபயோகமாகும் பாகங்கள் – பட்டை, விதை.
பயன்கள்
தாவரவியலின் பெயருக்கு ஏற்றபடி குடசப்பாலை பேதியை நிறுத்தும். பேதிக்கு நல்ல மருந்தாகும் குடசப்பாலை. மரப்பட்டை கஷாயம் இரு வேளை தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
சர்ம நோய்களுக்கு இதன் மரப்பட்டையை களிம்பாக அரைத்து பசுமாட்டு சிறுநீருடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசலாம்.
மரப்பட்டை கஷாயத்தை இஞ்சியுடன் சேர்த்துக் கொடுக்க, இரத்தம் கசியும் மூலநோயை கட்டுப்படுத்தலாம்.
குடசப்பாலையின் பட்டையை பொடியாக்கி, 1 ஸ்பூன் சந்தனப்பொடியை சேர்த்துக் குழைத்து பருக்கள், தழும்புகள் மேல் தடவினால் அவை மறையும்.
வயிற்றுப்பூச்சிகளை ஒழிக்கவும் குடசப்பாலையின் விதைகள் உதவுகின்றன. உலர்ந்த விதைகளின் பொடியை 1/2 ஸ்பூன் தினமும் இரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
பட்டை சாற்றை எண்ணையிலிட்டு காய்ச்சி, கரப்பான், சொறி, சிரங்கு முதலிய சர்ம நோய்களுக்கு தடவ, அவை குணமாகும்.
பட்டையை குடிநீரிலிட்டு வாய் கொப்பளிக்க, பல் வலி நீங்கும்.
 குடசப் பட்டை, மருந்துப் பொருளாயும் பயன்படுகிறது. குடச மது என்பது 12 1/2 சேர் (1சேர் என்பது இந்தக் கால வழக்கில் 280 கிலோ கிராம் ஆகும்.) மரப்பட்டை, உலர் திராட்சை 6 1/4 சேர், பேரிலை இலுப்பைப்பூ (Bassia latifolia; ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?) பெருங்குமிழ் மரப்பட்டை (Gmelina Arborea) ஆகிய இரண்டையும் ஒவ்வொன்றும் 80 தோலா (1 தோலா = 12 கிராம்) போட்டு 256 சேர் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, மொத்தக் கொள்ளளவும் 4ல் ஒன்றாகும் படி செய்து, வடிகட்டி, அதற்குப் பின்னால் பூக்கோளி விளக்கையின் (Woodfordia floribunda) பூக்களை 2 1/ 2 சேர் போட்டு, treacle 12 1/2 சேர் போட்டு குளிர்ந்த இடத்தில், மண்ணில் புதைத்து, ஒரு மாதம் நொதிக்க வைத்து எடுத்தால் கசப்பில்லாத ஒரு மது கிடைக்கும். அது விடாமல் பிய்த்துக் கொண்டு போகும் கழிச்சலுக்கும், வயிற்றாலைக்கும், மருந்தாக அமையும்

தாழை

தாழை மரம் (Pandanus Odoratissimus) நீர் தெளிக்காமல் நீரோடைகளில், ஆறுகளில், கேட்பாரின்றிப் புதராக வளர்ந்து இன்மணம் பரப்புவதுடன் மலடு நீங்க மருத்துவம் தருகிறது. இதனை ஆங்கிலத்தில் Fragrant Screwpine இப்படியும் அழைப்பர். வடக்கில் வேரைப் பயன்படுத்துகின்றனர். தாழைமரத்தின் வேரை - வேர்க்கிழங்கை எடுத்துவந்து அதை அரைத்துப் பசும்பாலில் (நாட்டுப்பசு) கலந்து வடிகட்டாமலேயே தரலாம். தாய்மை ஏற்படுவது மட்டுமல்ல; ஏற்கனவே உருவான கரு கலையும் ஆபத்தையும் தடுக்குமாம்.
தாழம்பூவுக்குச் சற்று வணிக முக்கியத்துவம் இருப்பினும் தாழையை நாடும் மக்கள் குறைவு. மருத்துவக் களஞ்சியத்தில் தாழையானது, வாதம், கபம், மேகம் சார்ந்த பிணியகற்றும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, முற்காலத்தில் பிரமேகம் என்ற நோய் வந்தால் தாழை வைத்தியம் செய்யப்படும். மேகநோய் என்பது உடல் வெப்பம் ஏறிச் சூட்டால் ஏற்படும் பல பிரச்சினைகள். உடல் ரணமாகும். இப்படி வரும்போது உப்பில்லாப் பத்தியம் இருந்து கொண்டு பின்வரும் வைத்தியம் செய்யலாம்.
வெக்கை தீவிரமாயிருந்தால் தாழங்கிழங்கு 2 தோலா எடைக்கு (ஒரு வெள்ளி ரூபாய் எடை) நறுக்கி அரைத்துச் சீனி சேர்த்து ஜூஸை ஒரு வாரம் வெறும் வயிற்றில் தரலாம்; அல்லது தாழம்பூவையும் இதே அளவு கொழுந்தாக அரைத்துச் சீனியுடன் சீரகம் சேர்த்துத் தரலாம். இரண்டு தாழம்பூவைக் குறுக்கே அரிந்து ஒரு லிட்டர் நீரில், ஒரு நாள் ஊறல் போட்டுச் சாற்றைக் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு கிலோ சீனாக் கற்கண்டு கலந்து தேன் பதமாகக் காய்ச்சி சிரப் செய்துகொண்டு சற்று நீர் கலந்து குடித்துவந்தாலும் வெப்பம் அகலும்.
தாழம்பூ மூக்குப்பொடி, தாழம்பூ பீடி எல்லாம் நாசி, தொண்டை நோய் மருந்து என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
தாழையின் பரவலான பயன், . தாழையில் சிவப்பு வெள்ளை என இரண்டு வகை உண்டு. இரண்டிலும் மணம் ஒன்றே. ஆடி, ஆவணியில் வெண் தாழம்பூ மடல் விரிக்கும். செந்தாழம்பூ என்றால் செக்கச் செவேலென்று இருக்காது. மஞ்சள் நிறத்தைத்தான் செந்தாழம்பூ என்று கூறுகின்றனர். இது பனிக்காலம் தாண்டி மடல் விரிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் செந்தாழம்பூ கிட்டும்.
தாழம்பூ தைலம் நல்லெண்ணெய்யில் காய்ச்சி எடுக்கப்படுகிறது. இது தலைவலிக்கு நல்லது. இயற்கை வழியில் தாழம்பூ சென்ட் எடுக்கலாம்.